கடந்த வாரம் அமெரிக்காவில்

எல்லார் கவனமும் சூப்பர்பவுலில் லயித்திருக்க சில முக்கிய விஷயங்கள் சத்தமின்றி போய்விட்டன. அவற்றில் ஒன்று சூசன் ஜி கோமன்( Susan G Komen) திட்டமிட்டு பெற்றோராகும் நிலையை ஆதரிக்கும் நிறுவனத்திற்கு (planned parenthood) இதுகாரும் தந்து வந்த நிதியை திடீரென குறைத்தது. சூசன் ஜி கோமன் நிறுவனம் தன் சகோதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து அதற்கான விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சியில் ஆரம்பிக்க பட்ட  ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை தூண்டும் வகையில் நடக்கும் 5 மைல் நடை, 36 மைல் நடை, இன்னும் யோகர்ட், வங்கிககள். பனேரா ரொட்டி நிறுவனம் என பலரும் தரும் நிதியை ஆதாயம் தேடத சிறு நிறுவனங்களுக்கு தந்து, அமெரிக்காவின் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு 250-350% வரை வருமானம் உள்ள, காப்பீடு இல்லாத பெண்களுக்கான மார்பக நிழற்படங்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. இதுவரை கிட்டதட்ட 2பில்லியன் டாலருக்கு மேல் மக்களிடம் இருந்து நன்கொடை பெற்ற சூசன் ஜி கோமன், க்டந்த வருடம் மட்டும் $700,000 திட்டமிட்டு பெற்றோராவதை ஆதரிக்கும் நிறுவனத்திற்கு தந்திருக்கிறடு. Planned parenthood நிறைய பதினம வயது பெண்கள் சரியான பாதுகாப்பை உயோகிக்காமல் கருத்தரித்தால் அவர்கள் கருச்சிதைவுக்கு உதவி செய்கிறது. அதேபோல காப்பீடு இல்லாத நிறைய ஏழைபெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் வருடாந்திர ஸிக்ரீனிங் ஆகியவற்றை செய்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக கிறித்துவ மத ஆதரவு அரசியல்வாதிகள், இந்த ப்ரோசாய்ஸ் நிலையை எதிர்ப்பதால் அவர்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தியதோடு, மத்திய அரசின் நிதி, கருச்சிதைவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய ஒரு குழுவை நிறுவி இருக்கிறார்கள். 
 
ஆகையால், விசாரணையில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு நிதி தரமுடியாது என்று சூசன் கி கோமன் முடிவெடுக்க, உடனே planned parenthood சோஷியம்  மீடியா மூலமாக உடனே இந்த விஷயத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்வதும் செய்துகொள்ளாதததும் அவரவர் அவர் கணவர்/ஆண் நண்பர் விருப்பம் என்றில்லாமல் மதநிறுவனக்கள் அவற்றை கட்டுப்படுத்துவது இந்த நாட்டின் மிகப்பெரிய கேடு. எல்லா பெண்களுக்கும் புற்றுநோயில் இருந்து தங்களை காத்துக்கொள்ள உதவி கிடைக்குமானல் அதை ப்ரோசாய்ஸ் என்ற நிலைப்பாடுகாரணம் காட்டி நிறுத்துவதும் தவறு. மக்களிடம் இருந்து நன்கொடை பெற்று நடத்தும் ஒரு நிறுவனம், அதிக ஊதியத்தோடு தலைமை அதிகாரிகள் அமர்த்துவதும், for cure என்ற சொற்றொடரையே மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துவதை எதிர்ப்பதும் தவறாகும். இதில் தேர்தல் நிதியாக குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு நிதி கொடுத்தது முதல் எல்லாம் இப்போது ஆராய ஆரம்பிக்க, சூசன் தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கிரது. இதற்கு நடுவில் நியார்க் மேயர், தன் நிதியில் இருந்து planned parenthood நன்கொடை அளித்திருக்கிறார். தவறான முடிவால் தன் வாடிக்கையளர்களையும் நன்மதிப்பையும் இழந்த சூசன் ஜி கோமன், அந்த முடிவ தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ed parenthood என்ற பரபரப்பான நிகழ்வு இன்னமும் கேள்விக்குறியாக தொடர்கிறது.
 
ooOoo
 
தலைவர் ஒபாமாவின் உடல்நல சீர்திருத்த சட்டம், கருச்சிதைவுக்கும், invitro fertilization போன்ற வற்றிற்கும் காப்பீடுகள் ஆதரிக்கவும், அவ்வாறு பெண்கள்/ அவர் கணவர் விருப்பத்துடன் கருச்சிதைவு செய்ய வந்தால் காப்பீடுகள் அவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சேர்த்திருப்பது. இந்த மாறுதலால் ( reform), கட்டாய காப்பீடுகளை தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கத்தலிக் சாரிட்டி போன்ற மத சார்பு நிறுவனங்கள் இதை எதிர்க்கின்றன.அமெரிக்காவின் மத்தியதர மக்கள் பெரும்பாலோர் காத்தலிக் சாரிட்டி போன்ற நிறுவனங்களை பெரிதும் ஆதரிப்பதால், இது ஒபாமாவின் தேர்தல் வெற்றியை பாதிக்கக் கூடும்.
 
ooOoo
 
பெர்கன் கவுண்ட்டியில் வசித்து வரும் 70 வயது பேராசிரயர் ஒருவர் வீட்டில் தீ, தீயணப்பு வீரர்கள் நிலவறையில் எங்கே இருந்து தீ வந்திருக்க கூடும் என சோதனை செய்ய போக, அவர்கள் கையில் கிடைக்கீரது எப்போதோ, தன் இளமைக்காலத்தில் பேராசிரியர் வாங்கி வைத்திருந்த சில போர்னோ பத்திரிகைகள்.அவற்றில் சில வற்றில் குழந்தகளின் நிர்வாணப்படங்களும் இருந்திருக்கின்றன. 30 வருடங்கள் முன், குழந்தைகள் போர்னோ பற்றிய சட்டதிட்டங்கள் இந்த நாட்டில் வேறானவை, தவறும் இல்லை என்ர நிலையில் அந்த பத்திரிக்ககளை வாங்கி இருக்க கூடும். ஆனால் இப்போது சட்டங்கள் மிக க்டௌமையான் நிலையில் அவற்றை வைத்திருப்பது குற்றம்.பத்திரிக்கைள் நினைவிலேயே இல்லாத நிலையில், அந்த பேராசிரியரை கைது செய்து வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள். நல்ல பெயரும் நன்மதிப்பும் பெற்ற பேராசிரியர் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் பலகாலம் சிறை தண்டனை கிடைக்கலாம். தீ அணைத்தாலும் இன்னோரு தீயை கிளப்பிவிட்ட நிகழ்ச்சி இது.
 
ooOoo
 
போன வாரம் Middlesex County Sayerville அருகே கணவன் மனைவி தங்கள் காரில் விரைந்து சென்று கொண்டிருக்க நேர் எதிரே kead on collision ஏற்படுமாறு தாறுமாராக ஒரு கார் வந்து கொண்டிருப்பது கொண்டு சட்டென்று நிறுத்து லேன் மாறி காரை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கண் முன்னே, அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் மீது எதிரே வந்த வாகனம் மோதி உடனே தீ பற்றி இருக்கிறது. காரை நிறுத்திய தம்பதியர், மற்றவர்கள் கூக்குரலை கேட்காமல்,எக்ஸ்பொளோட் ஆகிக்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் கதவை உடைத்து திறந்து ஆடைகள் தீப்பற்றிய நிலையில் இருந்த 21 வயது மேகன் என்ற பெண்னை காப்பாற்றி இருக்கிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உடனே செயல்பட்ட அவர்களுக்கு பாராட்டுக்கள். நிமிடத்தில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உயிர் பிழைத்திருக்கிறார் கொஞ்சம் தீக்காயங்களோடு. 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 14, 2012 @ 2:30 pm