சிலைக்கு தேவையா 14 கோடி பாதுகாப்பு?

 

உத்தரபிரதேசத்தில் மாயாவதி  தனக்கும் கன்ஷிராம் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கும் மாநிலம் முழுவதும் பலகோடி செலவில் பல்வேறு இடங்களில் சிலை அமைத்து நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளதே சர்ச்சையில் உள்ளது. இந்த லட்சணத்தில் இந்தச் சிலைகளுக்கு மாநில போலீஸ் துறை சார்பில் காவலர்களை நியமித்து பாதுகாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

14 கோடி ரூபாய் செலவில் நடைமுறைக்கு வரப்போகும் இத்திட்டம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள உ.பி மாநில அதிகாரிகள் நடந்து வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் “சிலை பாதுகாப்பு சிறப்புப்படை” என்ற பிரிவை அமைக்கும் விதத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு டிஜி.பி. யின் தலைமையில் 1,000 பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட படை இந்தச் சிலைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் படை வேறு எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் சிலைகள் அமைந்துள்ள பகுதிகள் சிறப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எத்தனையோ தேவையான திட்டங்களை அமுல் படுத்தவேண்டிய நிலை இருக்க – சிலைகளை அமைப்பதற்கும்,அதை பாதுக்காப்பதற்க்கும் இப்படி பல கோடிகள் செலவு செய்வது எவ்விதத்தில் நியாயம்? இந்தப்பணத்தில் உ.பியின் பின்தங்கிய பகுதிகளில் தொழிற்ச்சாலைகளை அமைத்தால் ஆயிரக்கனக்கானோர் பசியில்லாமல் வாழ வழி கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.. இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் அற்பனுக்கு வாழ்வு வந்த கதையாக ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் மாயாவதி – அவரைத் தட்டிக்கேட்ட வழியில்லாமல் சொந்தக் கட்சி பிரச்சனையில் சிக்கத்தவிக்கிறார்கள் முலாயமும், காங்கிரஸ் தலைவர்களும்.. 

முட்டாள்தனமான தலைவர்களை தேர்ந்தெடுத்ததன் பலன் இதுதான்… வேறு ஒன்றுமே சொல்வதற்கு இல்லை….

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “சிலைக்கு தேவையா 14 கோடி பாதுகாப்பு?

 • February 24, 2010 at 1:10 am
  Permalink

  INDIAN POLITICIANS ARE NOT MEANT FOR PEOPLE WELFARE .THEY WANT TO ESTABLISH THEIR IMAGE TO GAIN VOTE FROM ILLITERATE MASS.EVEN WORST HAPPENINGS ARE HERE.LEADERS LIKE MAHATMA GANDHI,NEHRU WHO SPENT THEIR BELONGINGS FOR THE SOCEITY WERE ALMOST LEFT FROM OUR MEMORY.WE HAVE TO LIVE WITH ALL THIS .WE HOPE WE WILL ALSO BECOME A CIVILISED SOCEITY AFTER A FEW HUNNDRED YEARS ,THOUGH WE MAY NOT ALIVE OUR FUTURE GENERATIO MAY ENJOY A REAL CIVILISED SOCIETY.

  Reply
 • February 1, 2010 at 12:14 pm
  Permalink

  அரசாங்கம் நடத்துவது பொருளாதார ரீதியில் மட்டும் நடக்கும் வரவு செலவு கணக்கல்லவே ! தன் முத்திரையை பதிக்க ராஜ ராஜ சோழன் முதல் பல்லவர்கள் வரை செலவுகள் செய்துள்ளனர் என்பது வரலாறு. உண்மையில் மாயாவதி செய்வது படிம கட்டுமானம். இதுதானே ராஜ தந்திரம். இன்று இந்துவில் வந்த காஞ்சா இலாயாவின் கருத்து –

  “Ilaiah would “definitely want her” to spend on education of Dalit children, he finds “another angle” pertaining to the symbolic, historical value of the statues. He feels they “are basically seen as Dalit-Bahujan shrines” and “anti-Hindu, pro-Buddhist”, making up for the Dalit-Bahujan icons that were demolished through history by the dominating cultures.

  “If Mayawati was pulling down some masjid or some temple I would stand up and say no,” he states, “but she is trying to build her own historical agenda,” which will have positive consequences for the community’s self-esteem.”

  Reply
  • February 24, 2010 at 1:24 am
   Permalink

   COMPARISON NOT CORRECT.THANJAVUR AVUDAYAR KOIL IS SIGN OF GOOD &PROSPREROUS CONDITION OF HIS PERIOD.PALLAVA PERIOD ALSO LIKE THIS.LET OUR INDIAN POLITICIAN ALSO FULFIL THE NEEDS OF OUR COUNTRY PEOPLE ,@FOOD, DRESS &SHELTER.THEN THEY CAN ESTABLISH STATUES NOT ONLY THEIRS BUT FOR THEIR ENTIRE FAMILY MEMBERS.

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 31, 2010 @ 9:09 pm