No child left behind – 1

டைட்டில் 1 மூலம் அரசாங்க நிதி பெற்றுக்கோள்ளூம் பள்ளிகள் வருடாந்திர முன்னேற்றத்தை காட்ட வேண்டும். இதனை அந்த அந்த மாநில இணைய தளத்தில் பள்ளிகளைக் குறித்த report cardல் பார்க்கலாம். இது 1965 ஆம் ஆண்டு முதலே இருக்கிறது. இப்போது NCLB மூலம் கூடுதலாக மாநிலம் முழுக்க ஒரே மாதிரி ( standardized exam) தேர்வு நடத்த வேண்டும். அதில் 100% வெற்றி பெறாத பள்ளிகள், அடுத்த வருடத்திற்குள் எதனால் வெற்றி பெறவில்லை, இன்னும் இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று திட்டம் தீட்டி அதை அரசாங்கத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று அதைச் செயல்படுத்த வேண்டும். அந்த ஆண்டும் 100% வெற்றி பெறவில்லை என்றால், அதற்கு அடுத்த வருடம் இந்த பள்ளிகள், at risk schools என முத்திரை குத்தப்பட்டு மிகத் தீவிரமாக கண்காணிப்பார்கள். இந்த at risk schools உங்கள் வீட்டு விலையைக்க் கூட குறைக்கலாம் ஆசிரியர்கள் இலவசமாக மாலையில் கூடுதல் கவனம் செலுத்தி பாடம் சொல்லிக்கொடுத்து standardised தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கு சொல்லி தனிப்பட்ட முறையில் சொல்லித்தந்து வெற்றி பெற செய்ய வேண்டும். 5 வருடம் தொடர்ச்சியாக மாணவர்களை 100% standardized தேர்வில் வெற்றி பெற செய்யவில்லை என்றால் அந்த பள்ளி ஆசிரியர்கள் முற்றிலும் மாற்றவோ, நிதியை குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
மாநில அளவில் பாடதிட்டங்களின் தரம் மாணவர்களின் வெற்றியோடு தொடர்பு கொண்டது, ஆண்டுதோறும் 100% அந்த அந்த வகுப்பு அளவில் கணிதம், எழுத்த படித்தலில் தேர்வு, பெற்றொர்களுக்கு பள்ளியின் ஆண்டறிக்கை , மாநிலம், கவுண்டி (county) ஆகியவற்றின் பள்ளிக்கான முன்னேற்றம் அறிக்கை நகல் அளிக்க வேண்டும், மேலும் மாணவர்கள் தகுதி அல்லது முறைப்படி தேவையான கல்வி அறிவு இல்லாத ஆசிரியர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவார்களேயானால் அந்த விளக்கமும் பெற்றொர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளிகளின் கட்டாயத்தேவையாக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் கூடுதல் நேரம் செலவிடவும் பங்கு பெறவும் இந்த விதி சேர்க்கப்பட்டது.
பள்ளிகளில் நன்றாக படிக்க கூடிய குழந்தைகள், 100% எல்லாக்குழந்தைகளும் standardized தேர்வில் வெற்றி பெற முடியாத பள்ளிகளில் இருந்து விலகி, வேறு நல்ல பள்ளிகளுக்கு (those perform academically well) மாற முடியும். நிதியைக்
குறைப்பதால், பள்ளிகள் தங்கள் தேவைகளை, கணிணி முதலியைவற்றை வாங்க முடியாமல் போகும். மாணவர்கள் சரியாகப் படிக்காததற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக முடியாது, அந்த குழந்தைகளின் வீட்டு சூழலும் கூட ஒரு காரணம் என்பதால் அவர்களின் ஊதியத்தை குறைப்பதும் சரியாகாது என்பதால் இந்த நிதி குறைப்பது என்பது பின்விளைவுகளே ஏற்படுத்தும்.தனியார் நிறுவனங்களில் ஊதியம் அவரவர் பணி செய்யும் அளவை / தகுதியை பொறுத்தே என்பது போல ஆசிரியர்களுக்கும் நிர்ணயிப்பதில் தவறேதும் இல்லை, ஆனால் ஒரே ஆசிரியரால் கற்பிக்கப்படும் குழந்தைகளில் சிலர் மிக நன்றாக படிக்கவும் சிலர் நன்றாகப் படிக்காமலும் போகக்கூடும். எப்படி அவரின் தகுதியை நிர்ணயிப்பது? குழந்தைகளின் வீட்டுச் சூழல், வீட்டில் படித்தவர்கள் பெற்றோர்களாக இருந்து பள்ளியில் கற்றதை மறுபடியும் அதை reinforce செய்வது, மற்றும் அந்தக் குழந்தைகளின் மனநிலை, மூளை வளர்ச்சி நிலை, டிஸ்லெக்ஸி போன்ற குறைபாடுகள், அவரவர் மொழி அறிவு எனபல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.நாம் நம் சமுகச் சூழலை மட்டுமே அடிப்படையாக பார்க்கிறோம், ஆனால் வன்முறை அதிகம் நிறைந்த வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதே கூட 100% நிச்சயம் இல்லை.

இவை எல்லாம் நல்ல விதிகள் தானே, ஏன் பள்ளிகள் இதை எதிர்க்க வேண்டும் என்றும் இதில் இருந்து ஏன் விலக்கு கோரவேண்டும் என்று பலரும் குழம்புவது புரிகிறது.இதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் முன், பள்ளிகளில் இருந்த gifted children என்ற ஒரு திட்டம் பற்றி தெரிந்து கொள்வதும், திரு ஓபாமா சேர்த்த சில மாறுதல்களையும் புரிந்து கொள்வது மிக அவசியம்.
(தொடரும்)