உடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்

கோக், பெப்ஸி எனப் பலரும் பருகும் பானங்களில் நிறம், சுவைக்காக சேர்க்கப்படும் காரமல் கலந்த நிறப்பொருளில் 4 மெத்ய்ல் இமிடசோல் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் உருவாக்குகிற சக்தி படைத்தது. இதனால், 2011 கலிஃபோர்னியாவில் இந்த வேதிப்பொருள் இருக்கும் எந்த திரவமும் விற்கத் தடை செய்ததால், கோலா ( கோக், பெப்ஸி மற்றும் இதர பானங்கள்) காரமல் கூடிய 4 மெதிலிமிடசோல் சிறிய மாற்றம் செய்து விற்பனைக்கான தடை உத்தரவை தவிர்த்து வந்தார்கள். சமீபத்திய மக்களின் நலன் குறிக்கோளாகக்கொண்ட அறிவியல் கழகம் ஆராய்ச்சி ஒன்றில் இந்தப்பொருள் நிச்சயமாக புற்றுநோய் காரணப்பொருளாக சேர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. ஒருவேளை விரைவில் சிகரெட் பெட்டிகள் போல, கோலா பான பாட்டில்கள், தகர டப்பாக்களில் மருத்துவர் எச்சரிக்கையுடன் விற்க முனையலாம்.

 
ooOoo
 
மார்ச் 6ம் தேதி, இரவு 7 மணிக்கு, சூரியக் குடும்பத்தின் சீற்றம் நிகழ்ந்தது. இதன் மூலம் இரண்டு முக்கியமான நெருப்புடன் கூடிய பாறைகள் உடைத்து வெளியேற்றப்பட்டன. இவை நொடிக்கு 600 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொன்டிருப்பதால் சென்ற வாரம் காந்த சக்தியுடன் கூடிய காற்றும் புயலும் பூமியைத்தாக்க நேர்ந்தது. கணிணி மையங்களின் கம்பியில்லா இணையத்தொடர்புகள், மின்சார கட்டிடங்கள் இவை எல்லாம் தாக்கப்படக்கூடிய சாத்தியமும் இருந்தது.நல்ல காலமாக சேதம் ஏதும் இல்லை.  இயற்கைக்கு முன் மனிதனின் கண்டுபிடிப்புகள் சக்தி இல்லாதவை என  மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
 
ooOoo
 
கோனி 2012 என்ற வீடியோ கிட்டதட்ட 71 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது. கிம் கர்டேஷியனும் ஓபராவும் தங்கள் ஃபேஸ் புக் மூலமாக பரப்பிய விளைவால் பரபரப்பான இந்த வீடியோ பார்க்கவியலா உருவமற்ற (invisible children) குழந்தைகள் என்ற ஒரு நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. இந்த படம் கோனி என்ற ஒரு மனிதன் குழந்தைகளை கடத்தி இராணுவத்தில் அவர்களை வீரர்களாக பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியது. குழந்தைகள் போர்வீரர்களாக தற்கொலைப்படைவீரர்களாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஒரு சர்வாதிகாரி என்ற வகையில் கோனியின் பெயர் பரவி, ஒரு மாற்றம் காண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வீடியோ பலவகை இன்னல்களையும் பட்டியலிடுகிறது. இந்த வீடியோவும் பரவுவது சோஷியல் ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் இவற்றின் மக்களை சென்றடையும் சக்தியை அளவிட இயலாததாக காட்டுகிறது.
 
ooOoo
 
பள்ளிகளில் விற்கப்படும் ஹாம் பர்கரில் பயன்படுத்தும் இறைச்சி, மிருகங்களை வதை செய்யும் இடத்தில் கீழே விழும் பலவகை மிருகங்களின் இறைச்சியை அரைத்து, அமோனியம் ஹைய்ட்ராகஸைடு கலந்த ஒருவித பின்க் நிற திரவத்தால் கழுவி பிறகு பதப்படுத்தப்படுகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் விற்கப்படும் ஹாட் டாக் போன்ற உணவு, பலவித மிருகங்களின் இறைச்சியை கலந்து, பதப்படுத்தி, பன்றியின் குடலில் திணிக்கப்படுவதே.அ தே போல ஹாம் பர்கரும். இதில் புதியதாக என்ன காரணம் பெற்றோர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்று புரியவில்லை,நிறைய அவசர உணவகங்கள் கூட தடை செய்த உணவு, பள்ளிகளில் விற்பதா இல்லை இப்போதுதான் எந்த வஐ இறைச்சி என்றூ புரிந்ததாலா தெரியவில்லை.. சமீபத்தில் பள்ளிகளில் புதிய மெனுவை அமல்படுத்துமாறு கோரப்பட்டிருக்கிறார்கள். இந்த மெனுவில் நிறைய காய்கறிகளும் பழங்களும் உண்டு. மேலும் பொறித்த உணவுகளும் குறைவு.
 
ooOoo
 
பெட்ரோல் விலை மிக அதிகமாக ஏறிக்கொண்டே இருப்பது வரும் தேர்தலை மிகவும் பாதிக்கப்பட வைக்கலாம். மற்ற பொருட்களின் விலை உயர்வு மக்களின் கவனத்தை அதிகம் கவர்வதில்லை. ஏனெனில் பாலின் விலை உயர்ந்தால் மற்ற பொருட்களோடு சேர்த்து வாங்கும் போது அதன் விலை உயர்வு கண்னுக்கு புலப்படுவதில்லை. ஆனால் பெட்ரோல் நிரப்பச் செல்லும் போது அந்த விலைப்பட்டியலும், அதைத் தவிர மற்ற பொருள் எதுவும் வாங்காததாலும், மிக அத்தியாவசியமான ஒன்றாகவும் இருப்பதால் அதன் விலை உயர்வு மக்களை பாதிக்கிறது. உண்மையிலேயே வெள்ளை மாளிகைக்கு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கவோ மாற்றவோ அதிகாரம் இல்லை என்றாலும், சாதாரண காரோட்டும் மக்கள் இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தையே குற்றம் சொல்லுவார்கள். 1950 இல் இருந்து 70 வரை காலன் ஒன்றுக்கு 27 சென்ட்டாக இருந்த விலை அதன் பிறகு 35 செண்ட்டாக மாறியது. அதேபோல 1932 முதல் 58 வரை தபால்தலை விலையும் 35 செண்ட்டாக இருந்தது. பிறகே 5 சென்ட் அதிகரித்தது அதன் பிறகு பலவித காரணங்களால் மக்கள் மின்மடல், நேரடி அதிவிரைவு தபால் என பயன்படுத்த துவங்கி, தபால்துறை கிட்டதட்ட $3.3 மில்லியன் நஷ்டமடையத் துவங்கிய போது மெல்ல விலையேற ஆரம்பித்து இப்போது 44 செண்டாக இருக்கிறது. கூடிய விரைவில் 50 காசாக ஆனாலும், பெட்ரோல் காலன் ஒன்றிற்கு $5 ஆனாலும் ஆச்சரியமடையப்போவதில்லை. ஒருவேளை நினைவிருக்கிறதா, ஒரு காலத்தில் பெட்ரோல் காலன் ஒன்று $3.50 விற்ற கதை என்று பேசுபொருளாக வேண்டுமானால் நிலைக்கலாம். என்ன விலை ஏறினால் என்ன, ஆளொன்றுக்கு கார் ஒண்று வேன்டும், அது சுதந்திரத்தோடு பின்னிப்பிணைந்தது, எனவே சினந்தாலும் சீறினாலும் வாங்கித்தானாக வேண்டும். ஓபாமா ஆட்சிக்காலத்தில்தான் அமெரிக்காவிலேயே அதிக அளவு எண்ணெய் தோண்டியெடுக்கப்படுகிறது என்பதும் உண்மை.
 
ooOoo
 
அமெரிக்காவில் தற்போது குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. நாடு விட்டு நாடு பெயர்ந்தாலும், அந்த நாட்டின் சட்ட திட்டங்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதும் அடிப்படைகளை அறிவதிலான ஆர்வமும் காட்டுவதில்லை. இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் நம் ஊரின் சட்ட திட்டங்களை விட வேறானாவை. இங்கே வீட்டு வன்முறையால் கணவனும் மனைவியும் பாதிக்கப்பட்டாலும் குழந்தைகளுக்கு அது ஆபத்து என உணர்ந்தால் குழந்தைகள் அப்புறப்படுத்தப்படுவார்கள். உடனடியாக உறவினர்கள் இருந்தால், குழந்தைகள் அவர்களின் பாதுகாப்பில் விடப்படுவார்கள். இல்லை எனில் குழந்தைகள், இளைஞர்கள் நல அமைப்பு அவர்களை பாதுகாப்பான ஃபாஸ்டர் பெற்றோர்கள் இடத்தில் விடுவார்கள். இந்த ஃபாஸ்டர் பெற்றோர்களுக்கு அடிப்படை பயிற்சிகள், மற்றும் குழந்தைகளின் செலவிற்காக மாதம் $1200 நிதியும் தரப்படுகிறது. இப்போது ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள இந்திய கலாச்சாரத்தை சேர்ந்த பெற்றோர்கள் இல்லை என்பது மிகப் பெரிய குறையாக இருக்கிறது. பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே மிகவும் அதிக பாதிப்பில் இருப்பார்கள், இதைவிட வேறோரு உணவு முறை, வாழ்க்கை முறைக்கு மாறுவது இன்னும் கடினம். சமீபத்தில் எடிசனில் ஒரு வீட்டு வன்முறை நிகழ்வால் ஒரு 10 மாதக் குழந்தையும் 6 வயது சிறுவனும் மீட்கப்பட்டார்கள். தற்போது அமெரிக்க பெற்றோர்களிடம் அந்த குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே யாருக்கேனும் இது போல ஃபாஸ்டர் பெற்றோர்களாக பயிற்சி பெற வேண்டுமானால், தயவு செய்து தெரிவியுங்கள்.
 
ooOoo
 
ரட்கர்ஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த இன்னோரு 19 வயது ஆசிய இந்திய மாணவன், யூதர்களின் ஆலயத்தை தீயிட்டு கொளுத்திய குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 2.5 மில்லியன் டாலர் பெயிலில் சிறையில் இருக்கிறார். அவரது பெற்றொர்களால் பெயில் கட்ட முடியாததால் வழக்கு விசாரணை வரை சிறையில். கைகால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வந்த போது, மிகவும் வருத்தமாக இருந்தது. இந்தக் கைதும் சோஷியம் ஊடகங்களில் அந்த மாணவன் சொன்ன தகவல்கள் அடிப்டையிலேயே நிகழ்ந்திருக்கிறது. தயவு செய்து குழந்தைகள், இளைஞர்களுடன் பெற்றோர்கள் நேரம் செலவிடுவதும், அவர்கள் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ளுவதையும் வழக்கமாக கொள்ளுங்கள். ஒரு தவறால் வாழ்க்கையையே வீணடித்துக்கொள்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 14, 2012 @ 11:42 pm