Starbucks இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கிறதா ?

கைபேசி / செல்பேசி எனப் பலவாறு அழைக்கும் செல்போன் சந்தையில் ATT, Verizon அமெரிக்காவில் கிட்டததட்ட 85% வருமானத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் முறையே 101 மில்லியன், 108 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தையில் மிக பின் தங்கிய நிலையில் ஸ்பிரின்ட் இருக்கிறது. போட்டியே இல்லாமல் ஒரு சந்தை நிலவுமானால் அது பயனர்களுக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் எந்த நிறுவனமும் இந்த கம்பியில்லா சந்தையில் போட்டியாளர்களாக நுழையலாம் என்றாலும், அதில் ஈடுபட செலவு செய்ய பில்லியன் கணக்கில் நிதி வேண்டும். இந்த நுழைவு நிதித்தேவை பலரை இந்த போட்டியில் களம் இறக்காமல் தடுக்கிறது. இதனால் இந்த இரண்டு நிறுவனங்களும் அவர்கள் தகவல் பரிமாற்ற கட்டணம், பேசும் கட்டணம், குறுஞ்செய்தி அனுப்ப கட்டணம் என ஒரு சராசரி ஸ்மார்ட் தொலைபேசி வைத்திருப்பவர்கள் மாசம் $60 வரை கட்டுமளவு கட்டணம் தீர்மானிக்கிறார்கள். இதில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு முன் விலகினால் அதற்கான கட்டணம் வேறு. 3ஜி, 4ஜி என்றெல்லாம் வேகமாக தகவல் பரிமாறக்கொள்ள முடியும் என்றாலும் பலரும் வீடியோ முதல் புகைப்படங்கள் என  பல வற்றையும் பரிமாறிக்கொள்ள முயல்வதால் இந்த நெட்வொர்க் திணற ஆரம்பிக்கிறது. சமீபத்தில் ஒரு குப்பைலாரி ஓட்டும் ஒருவர் ஒரு வீடியோ பார்க்க முயல, நெட்வொர்க் சரியாக இல்லாததால் 4ஜி வேகம் கிட்டதட்ட 2ஜி வேக வரிசையில் செல்ல அவரால் சரியாக அந்த வீடியோவை காண இயலாமல் போய்விட்டது என இந்த கம்பியில்லா செல்போன் நிறுவனத்தின் மேல் வழக்கு பதிந்து $890 வரை அதற்கான ஈட்டு பணமாகப் பெற்றார். இன்னமும் சட்ட வரம்புகள் சரியாக நிச்சயிக்காத ஒரு சந்தையில் இன்னும் சில காலத்தில் இந்த ஸ்மார்ட் செல்பேசிகளை விலைக்கு தராமல் வாடகைக்கு தர நிறுவனங்கள் முயலும் காலமும் வரக்கூடும்.

 
ooOoo
 
முழுமையான சாலைகள் இல்லாததுவும் அமெரிக்காவில் இப்போது பரவும் உடல் பருமன் பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்கிறார்கள். வழுவிக்கொண்டு செல்லும் சாலைகள் அமெரிக்காவிற்கு வரும் பலராலும் பாராட்டப் படும் ஒரு விஷயம். தேசீய நெடுஞ்சாலைகள் குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் புது குடியிருப்புகள் வீட்டை விட்டு வெளியே வரும் போதே ஒரு அதிவிரைவு சாலையாக இருப்பது ஆபத்து. ஒரு முழுமையான சாலை என்பது வயோதிகர்கள் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரும் பயன்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். இதனால் மக்கள் வெளியே நடந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் இப்போது வரும் பல குடி இருப்புகளில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே 30 மைல் வேக சாலையாக இருக்கிறது. நடைபாதை ஓரம் இல்லை, மிதிவண்டிகள் செல்ல எளிதாக அதற்கான சாலைப்பிரிவு இல்லை எனவே பெரும்பாலானவை முழுமையான சாலைகள் இல்லை. இதனை எளிய முறையில் சரிசெய்ய இப்போது பல நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதைத்தவிர விவசாயிகள் சந்தைகள், ஒரு ஊரின் உட்புறத்தில் மக்கள் சேர்ந்து செயல்படும் சமூக தோட்டம் ,  பள்ளிகளில் இதற்கான இடம் ஒதுக்கி குழந்தைகளுக்கு தோட்ட வேலை சொல்லித்தருதல், மற்றும் காய்கறிகளுக்கான சாலட் பார் நிறுவுதல் போன்ற பலவற்றில் அரசாங்கம் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. நியுஜெர்ஸியில் இதற்கான மாநாடு போன வாரம் நடைபெற்றது. இப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
ooOoo
 
கார் ஓட்டும் போது குறுஞ்செய்திகள் அனுப்புதல் மூலம் நிறைய விபத்துகள் வருவதை தடுக்க, காவலர்கள் முயன்று வருகிறார்கள். செல்போனில் பேசிக்கொண்டோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ கார் ஓட்டிக்கொண்டு வந்தால் அதை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு கட்டணம் கட்ட செய்து வந்தார்கள். இதை தடுக்க நாடு முழுதும் பல ஏற்பாடுகள் ஆரம்பித்தன. இப்போதைய கார்களில் கார் ஸ்பீக்கர் மூலமாகவே பேசிக்கொள்ள வசதி உண்டு. ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு விஷயம் சிரிப்பை வரவழைக்க கூடியதே. மால் ஒன்றில் நடந்து சென்ற ஒரு பெண்மணி, குறுஞ்செய்தி அனுப்பும் சுவாரஸ்யத்தில் கவனப்பிசகாக அங்கே இருந்த ஒரு செயற்கை நீருற்றில் விழுந்துவிட்டார். அதை படமெடுத்த மால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அதை வலை ஏற்றியதற்காக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இன்னொரு பெண்மணி தன் குடும்பத்தாரோடு ஏரிக்கரை ஓரம் நடந்து செல்லும் போது கவனம் சிதறி ஏரியில் விழுந்துவிட, உடனே அங்கே இருந்த உயிர்காக்கும் படையினர் ஏரியில் குதித்து அவரை காப்பாற்றி இருக்கிறார்கள். நடந்து போகும் போது குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டோ இல்லை எதையேனும் படித்துக்கொன்டே நடக்கும் பழக்கம் இன்னும் விபரீதங்களை கொண்டு வராவிட்டால் சரி.
 
ooOoo
 
எல்லா வேலைகளில் சேரும் முன்னும் இங்கே போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமும், நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என இரத்தப்பரிசோதனை மூலமும், கடன், குற்றங்கள் செய்து சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என அறிய பின்புல சோதனைகளும் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மனநலன் பற்றி யாரும் பொதுவாக கண்டு கொள்வதில்லை. நிறைய அமெரிக்கர்கள் மனதகைவுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். பலவிதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் இதை யாரும் சொல்வதில்லை. ஜெட்ப்ளு விமானம் ஒன்று நியுயார்க்கில் இருந்து லாஸ் வேகாஸ் செல்லும் வழியில் விமானிக்கு மனநலம் பாதிக்கப்பட அவர் தீடிரென தொடர்பே இல்லாமல் தீவிரவாதிகள், ஏசு கிறிஸ்து என எல்லாமல் பேச அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். எல்லாம் வல்ல தொழில்நுட்ப உதவியாலும் இன்னொரு விமானியின் உதவியாலும் விமானம் பத்திரமாக தரை இறங்கி இருக்கிது விமானியாக பணிபுரிய பலபடிகள் பமருத்துவ பரிசோதனை நடந்தாலும் மனத்தகைவு பற்றியும் பொதுவான மனநலன் பற்றியும் பணியிடங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது இப்போது மிக தீவிரமான விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
 
ooOoo
 
சில காலம் முன் டானன் நிறுவனம் தயாரிக்கும் குளிரூட்டப்பட்ட தயிரில், சிவப்பு வண்ணம் ஏற்படுத்த மூட்டைப்பூச்சி (beetle ) கடினமான கவசத்தை உடைத்து சேர்க்கிறார்கள், அது காரமனை என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கிறது என செய்தி வந்தது. இதை தொடர்ந்து அமெரிக்க உணவுக்கழகம், உணவு தயாரிப்பாளர்கள் காரமைன் என்ற பெயரில் (cochineal extract) சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறிக்க வேண்டும் என  சட்டம் கொண்டு வந்தார்கள், இப்போது ஸ்டார்பக்ஸ் (starbucks) தயாரிக்கும் ஸ்ட்ராபெர்ரி (strawberry) க்ரீம் என்ற ஃப்ரப்பிசீனோவில் (Frappuccino) காரமைன்  என்ற இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. என்னதான் தாவரவகை உணவுகளை தேடி கண்டுபிடித்து உண்டாலும், பன்றி இறைச்சி நீரில் வேகவைத்த பயிறு அல்லது மாட்டிறைச்சி நீரில் வேகவைத்த பீன்ஸ் என  எல்லாவற்றிலும் எதையாவது கலந்துவிடுகிறார்கள்.
 
 
ooOoo
 
சென்ற வாரம் அட்லாண்டாவில் நிறைய பொதுநலத்துறையை சேர்ந்தவர்கள் கூடி எப்படி நீண்ட காலம் பாதிக்கக்கூடிய சில நோய்களை பராமரிப்பது என்பது குறித்து பேசி இருக்கிறார்கள். மூட்டு வலி, நீரிழிவு நோய், இருதய நோய், மற்றும் உடல் பருமன் ஆகிய பலவும் மனிதர்களை நீண்டகாலம் பாதிக்கின்றன. தொடர்ந்து மருந்தும் மாத்திரையும் எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் தினசரி வாழ்க்கை, வேலைகளை பாதிக்க கூடிய சில அசவுகரியங்களும் உண்டு. இதற்கான பாடதிட்டம் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டு, மக்களிடையே பரிசோதிக்கப்பட்டு இப்போது நாடு முழுதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடதிட்டத்தின் மூலம், நோயாளிகளே தங்களுடையை நோய்க்கான அறிகுறிகளை எப்படி கையாள்வது என்பது குறித்துச் சின்ன சின்ன செய்கைகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். இதில் இருக்கிற ஒரு முக்கிய குறிப்பு,  ஒரு பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக அருமையாக விளக்குகிறது.  எப்படி வீட்டை பராமரிக்க, ஒரு ஸ்க்ரூடிரவர், பிளையர், அல்லது ஹாமர் போல பலவகை கருவிகள், வேலையை பொருத்து தேவையாக இருக்கிறதோ அதேபோல பல பிரச்சினைகளை எதிர்கொள்ள உடலுக்கான கருவிகள் பெட்டியில் உடற்பயிற்சி, மருந்து, களைப்பை போக்க வழிகள், திட்டமிடுதல், எப்படி நன்றாக சுவாசிப்பது, மனப்பயிற்சி, ம னதை உபயோகித்து வலியை மறப்பதற்கான பயிற்சி, பேசும்கலை, நன்றாக நல்ல சரிவிகித உணவை தயாரித்து உண்ணும் முறை, நம் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளல் என  பல இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் அடிப்பைடை திட்டங்கள் இருக்கின்றன.. இ தனைப் பயன்படுத்தியதன் மூலம் நல்ல பலன் அடைந்தவர்கள் அதிகம். இதை பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்து மக்களுக்கு இலவச பயிற்சி வழங்க நோய்களை கண்காணித்து தடுக்கும் கழகம் பல பில்லியன் நிதி ஒதுக்கி இருக்கிறது.
 
ooOoo
 
சராசரி மனிதனின் உயிருக்கான மதிப்பாக 6.4 மில்லியன் டாலர்களாக அமெரிக்க போக்குவரத்துக் கழகம் தீர்மானித்திருக்கிறது என்பதை சமீபத்தில் நடந்த விவாதக்குழுவில் அறிந்து கொண்டோம். 

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 2, 2012 @ 10:48 pm