காமசூத்ரா

மனமும் மூளையும் சேர்ந்து, தொடுதல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் ஆகிய ஐம்புலன்களின் உதவியோடு ஆனந்தம் அடைவதே காமம். ஆனந்தம் தருவதும், ஆனந்தம் பெறுவதும் ஒன்றோடு ஒன்று இணைய, அவை இணைகின்றன என்ற உணர்வும் அந்த சங்கமத்தின் காரணமாக வரும் குதூகலமே காமம் என்று வாத்சாயனர் விளக்கம் சொல்கிறார். சுருக்கமாக காதல் கூடல் உடலுறவு என்று சம்ஸ்கிருத அகராதிகள் அர்த்தம் சொல்கின்றன.
நமக்கும் காமசூத்ரா என்ற பெயரைக் கேட்டவுடன் காமம் கில்மா தான் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் புத்தகத்தைப் பற்றி நமக்கு இருப்பது எல்லாம் தவறான புரிந்துணர்வு தான்.
காமசூத்ரா 64 விதமான கடைசிக் கூடலைப் பற்றி கூறுவதாக நினைக்கிறோம். உண்மை என்னவென்றால் 64-ஐயும் தாண்டி நிலைகள் புத்தகத்தில் இருக்கின்றது. இந்த 64-ஐக் கடந்த நிலைகளில் கடைசிக் கூடலை மட்டும் கணக்கில் கொள்வதில்லை. பலவகை முத்தங்கள் தழுவல்கள் எல்லாம் இதில் அடக்கம். இந்தக் கூடல்களைக் கடந்தும் புத்தகத்தில் பல சமாச்சாரங்கள் உண்டு.
பல்வகை கூடல்களைக் கடந்து பல வகைக் கல்யாணங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார், ஏன் வீடு எங்கு இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும்? பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்க வேண்டும்? என்று எல்லாமும் அத்தியாயங்கள் உண்டு.
இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம் மற்றும் பிறன் மனை விழையாமை என்று இல்லறவியலில் அறத்துப் பாலில் வள்ளுவர் டீல் செய்யும் சமாச்சாரங்களை எல்லாம் வாத்சா மிகவும் விவரமாக காமசூத்ரா என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் விவரிப்பதை என்னவென்று சொல்வது? இங்கே மாற்றான் தோட்டத்து மல்லிகையை முகர்ந்து பார்க்க வழி வகைகளை சொல்லி விட்டு அது பாவம் போகக் கூடாத வழி என்றும் வாத்சா சொல்கிறார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அதே போல் மனைவி கணவனிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், இரண்டாம் மூன்றாம் தாரத்தை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லாம் அவர் எழுதி இருப்பதை எல்லாம் இன்றைய பெண்ணியவாதிகள் படித்தால் புத்தகத்தை நிச்சயம் எரிப்பார்கள். கணவன்மார்கள் வாத்சாயனர் காலத்திற்கு டைம் மெஷின் கிடைக்குமா எனக் கேட்பார்கள்.
கணவர்கள் அப்படி ஆசைப்படும் முன் இதை எல்லாமும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.. ”-some, 4-Some, Group Orgy இது எல்லாம் சரி என சொல்பவர் ,two-timing எல்லாம் கூடவே கூடாது என்கிறார். blow job என்பது gayக்களுக்கு உரித்தானது. கீழான பெண்கள் மட்டும் தான் blow job செய்வார்கள் என்கிறார். அதை எவ்வாறு சிறப்பாக செய்வது என்றும் வாத்சா மிக விவரமாக விவரிக்கிறார் என்பது வேறு.
கணிககைகளை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் கெட்டவார்த்தையாக மாற்றி இருக்கிறோம். ஆனால் வாத்சாயனர் அவர்களை சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக அவர்களின் ஒழுக்கத்திற்கும் வாழ்க்கைக்கும் விதிகளை வகுக்கின்றார். பணமே பிரதானம் என்றாலும் யாரிடம் இருந்து எவ்வாறு என்பது எல்லாம் மிக முக்கியம் என வலியுறுத்துகிறார். கணிகைகளை குத்து விளக்காக காட்டாமல் குடத்திலிட்ட விளக்காக காட்டுகிறார்.
மற்றவர்களை வசியம் செய்வது எப்படி திருப்திப் படுத்துவது எப்படி என்பதற்கு அவர் சொல்லும் வழிகளை எல்லாம் இன்றைய அறிவியல் அறிவிலித்தனம் என்று ஓதுக்கித் தள்ளலாம். சில வழிமுறைகளைப் படித்தால் இப்படி எல்லாம் செய்து அப்படி எல்லாம் இன்பம் அடைய வேண்டும் என்ற முடிவுக்குத் தான் வருவோம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவை மருத்துவியலாகத்தான் கருதப்பட்டிருக்கிறது.
காமசூத்ரா என்பது காமத்தைக் கடந்து சமூகவியல், மானுடவியல்,வரலாறு, உளவியல், வாழ்வியல் என்று பல இயல்களைப் பற்றிய புத்தகம் என்பது படித்தால் புரியும்.
புத்தகத்தை வாங்க