பைனாப்பிள் மோர்க்குழம்பு

 

 
தேவையானவை
 
அன்னாசிப்பழத்துண்டுகள்- 12
தேங்காய்- கால் மூடி
தயிர் – 4 கரண்டி
பச்சைமிளகாய்- 4 பெரியது
 
ஊற வைத்து அரைக்க
 
துவரம்பருப்பு- 4 டீஸ்பூன்
மிளகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
அரிசி- 1 டீஸ்பூன்
 
தாளிக்க
 
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
 
செய்முறை:
 
1. வாணலியில் எண்ணெயிட்டு கடுகு தாளிசம்(குழம்பை இறக்கும் தருவாயிலும் தாளித்துக் கொட்டலாம்) செய்து நறுக்கின அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
 
2. ஓரளவு வதங்கின பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி, காயம் போட்டு வேக விடவும்.
 
3. ஊற வைத்த பொருட்களை தேங்காயுடன் அரைத்து விட்டு பொருட்கள் அரைபட்டவுடன் தயிரையும் சேர்த்து அரைத்து வெந்து கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். 
 
4. நுரைத்து பொங்கி வரும்(பத்து நிமிடங்களாவது ஆகும்), அடி பிடிக்காமல் கிளறி வர வேண்டும். துவரம்பருப்பின் பச்சை வாடை மறைய வேண்டும். 
 
5. அடுப்பை அணைத்து விட்டு மீண்டும் சிறிதளவு கடுகு தாளிசம் செய்து கொள்ளலாம். சுவையான பைனாப்பிள் மோர்க்குழம்பு தயார்.  
 
கூடுதல் குறிப்புகள்
 
1. அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது.அன்னாசிப்பழத்தைச் சேர்த்து செய்யும் குழம்பு  இனிப்பும் காரமும் புளிப்புமாய் புதுவித  சுவையைக் கொடுக்கும்.  
 
2. மேற்கூறிய முறையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப் பூசணி, செளசெள போன்ற காய்களைப் பயன்படுத்தியும் மோர்க்குழம்பு செய்யலாம். புளிப்பு, காரம் அவரவர் விருப்பப்படி கூட்டியோ குறைத்தோ செய்யலாம். 
 
3. துவரம்பருப்பைத் தனியே ஊற வைத்து உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து வேக வைத்து குக்கரில் உருண்டைகளாக வேக வைத்தோ எண்ணெயில் பொரித்தோ பருப்புருண்டைகள் செய்து பருப்புருண்டை மோர்க்குழம்பு செய்யலாம்.
 
4. சுவையான மோர்க்குழம்பிற்கு வாழைக்காய்ப்புட்டு, கோஸ், பீன்ஸ், அவரைக்காய் போன்ற எல்லாக் காய்களும் இணைகள் என்றால் அடித்துக் கொள்ள முடியாத அசத்தல் இணை வாழைப்பூ பருப்புசிலி தான்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 30, 2012 @ 12:10 am