தீபாவளி நல்வாழ்த்துகள்

 

உண்ண வழி இல்லாதவர்களுக்கு
உழைக்கும் வழி காட்டினால் தீபாவளி..
 
கல்வி கற்க இயலாதவர்களுக்குக்
கருணைமொழி
பேசினால் தீபாவளி…
 
அன்பில்லாமல் தவிப்பவர்களுக்கு
பாசவிழிகள் வீசினால் தீபாவளி..
 
உடலாலும் மனதாலும் தளர்ந்தவர்களுக்குப்
பட்டாசு பேசா மெளனமொழி தீபாவளி…
 
தேர்விற்குப் படிப்பவர்களுக்குத்
தொந்தரவு செய்யாவழி தீபாவளி..
 
யாருமில்லாத தனித்து விடப்பட்டவர்களுக்கு
இனிப்பும் உடைகளும் தந்து
அன்பை வாரி வழங்குவதும் தீபாவளி…
 
பிடித்ததைப் பிரியமானவர்களுக்குச்
செய்து மகிழ்வது தீபாவளி..
 
மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களான
நரகாசுரனை ஒழித்துக் கட்டி
மதம் இனம் வெறி பகை போன்ற
இருள்களைப் போக்க
பாசம் கருணை மனிதம் போன்ற தீபங்களை ஏற்றி
மனதை நல்வழிப்படுத்துவதும் தீபாவளி..
 
ஒளிரட்டும் தீப ஒளி
ஒளி வீசட்டும் வீடெங்கும்…
படரட்டும் பாச மொழி
பட்டம் கட்டிப் பறக்கட்டும் உலகெங்கும்..
உதவட்டும் நேசக்கரங்கள்
இயலாதவர்கள் வாழ்விலும் விளக்கேற்ற..
ஏற்றட்டும் வெற்றிக்கொடி
எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க…
 
தீபாவளி தித்திக்கட்டும்…
தீப ஒளி மின்னட்டும்..
மத்தாப்பு மினுமினுங்க
பட்டாசு சடசடவென
தரைச்சக்கரம் ஜிகுஜிகுவென
புஸ்வாணம் புசுபுசுவென
சரவெடி சரசரவென
இருள் ஒழிய ஒளி ஒளிர
தித்திக்கட்டும் தீபாவளி
மின்னட்டும் தீப ஒளி
 
பட்சணங்கள் வாய் உண்ண
பாசங்களை விழிகள் பரிமாற
வேட்டுச்சத்தம் காதில் அலற
நல் மணங்கள் மூக்கு நுகர
இன்பங்கள் ஸ்பரிசங்களாக
ஐம்புலன்களும் ஐம்பூதங்களும் வசமாக
அழகாய் அருமையாய்
அட்டகாசமாய் அமர்க்களமாய்
இனிமையாய் இயல்பாய்
இதயத்தில் மகிழ்ச்சி பொங்க
இனிக்கட்டும் தீபாவளி..
புத்தாடை சரசரக்கக் குடும்பத்துடன்
குதூகலமாய் கொண்டாட்டமாய்க்
கொண்டாடி மகிழ்க!
 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “தீபாவளி நல்வாழ்த்துகள்

  • March 26, 2017 at 8:19 am
    Permalink

    nice verse about help…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 13, 2012 @ 12:53 pm