புதினா-கொத்தமல்லி சாதம்

 

pudinarice
 
தேவையான பொருட்கள்
 
புதினா- ஒரு கட்டு
கொத்தமல்லி  – ஒரு கைப்பிடி
புளி- நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல்- 3
பூண்டு- 2 பல்லு
இஞ்சி- 1 துண்டு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தேங்காய்- 4 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
காயம், உப்பு- தேவையான அளவு
கலந்த சாதப்பதத்துக்கு ஏற்றவாறு உதிர் உதிராக வடித்த சாதம்
 
தாளிக்க:
 
 நல்லெண்ணய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 1
 
செய்முறை:
 
1.புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.
2.  அடுப்பை மிதமான தீயிலிட்டு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைஉளுத்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்
3. வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலம்பிய கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.
4. அரைப்பானில் வதக்கினவற்றோடு தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
5.எண்ணயிலிட்டு  தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்
6. அரைத்தவற்றைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் உறிஞ்சும் வரை வதக்கி இறக்கவும்.
7. உதிர் உதிராக வடித்த சாதத்தை ஆற விடவும்
8. கலவை சூடு குறைந்ததும் சாதமும் ஆறினவுடன் கிளறவும்.
சுவையான பல்வகைச்சத்துள்ள புதினா சாதம் தயார்.
 
இதற்கு இணையாக வெள்ளரிப்பச்சடி, கிச்சடி, வறுவல், அப்பளம் வடகம் பொரித்து பரிமாறலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “புதினா-கொத்தமல்லி சாதம்

 • December 21, 2012 at 12:14 pm
  Permalink

  பயனுள்ள பதிவு. நன்றி.ஓய்வாக இருந்தால் எனது வலைப்பூவை வாசிக்கவும்

  Pangusanthai-eLearn.

  Reply
  • March 26, 2013 at 8:42 pm
   Permalink

   நன்றி சரண்யா, உங்கள் வலைத்தளம் சென்று பார்த்தேன், பயனுள்ள தகவல்கள், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

   Reply

Leave a Reply to Saranya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 21, 2012 @ 10:56 am