2012 திரைப்பட விருதுகள்
2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய இயக்குனர்கள், இன்றைய இயக்குனர்களாக மாறிய ஆண்டும் இதுவே. ஒரு தொலைக்காட்சிக்கு உரித்தான வெற்றி, அதுவும் அனைத்து இயக்குனர்களின் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது சிறப்பே.
வழக்கு எண் 18/9, கும்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டகத்தி, நான், வாச்சாட்டி, அம்புலி போன்ற பல வரவேற்கத்தக்க படங்களின் வருகையும், துப்பாக்கி, நான் ஈ, நண்பன் போன்ற பிரமாண்ட வெற்றிகளையும்
கொண்ட ஆண்டாக அமைந்தது. Why this kolai veRi என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் பாடல் உலகமெங்கும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ஆண்டும் இதுதான்.

1 சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்
2 சிறந்த திரைப்படம் – வழக்கு எண் 18/9
3 சிறந்த இயக்குனர் – பாலாஜி தரணீதரன் (NKPK)
4 சிறந்த திரைக்கதை – AR முருகதாஸ் (துப்பாக்கி)
5 சிறந்த வசனம் – இரா.முருகன்/முகமது ஜாபர் (Billa II)
6 சிறந்த கதை – பிரபு சாலமன் (கும்கி)
7 சிறந்த பாடல்கள் கொண்ட திரைப்படம் – கும்கி, 3
8 சிறந்த இசை – ஹாரிஸ் ஜெயராஜ் (பல படங்கள்)
9 சிறந்த பின்னணி இசை – சித்தார்த் விபின் (NKPK)
10 சிறந்த ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி)
11 சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் ப்ரசாத் (துப்பாக்கி)
12 சிறந்த கலை இயக்கம் – விஜய் முருகன் (அரவான்)
13 சிறந்த ஒப்பனை – சரத்குமார் & நாகேஸ்வர் ராவ் (அரவான்)
14 சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – அரவான் (குழுவினர்)
15 சிறந்த VFX – ஸ்ரீநிவாஸ் மோகன் (மாற்றான்)
16 சிறந்த நடன இயக்கம் – தினேஷ் (OKOK, கும்கி)
17 சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (பல பாடல்கள்)
18 சிறந்த பின்னணி பாடகர்- ஹரிசரண் (கும்கி- ஐய்யயோ ஆனந்தமே)
19 சிறந்த பின்னணி பாடகி – ஷ்ரேயா கோஷல் (தோனி, மாற்றான், சாட்டை)
20 சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (பீட்சா, NKPK, சுந்தரபாண்டியன்)
21 சிறந்த நடிகை – சமந்தா (நீ.எ.பொ.வ)
22 சிறந்த துணை நடிகர் – விக்னேஷ் (NKPK)
23 சிறந்த துணை நடிகை – சரண்யா (OKOK, நீர்ப்பறவை)
24 சிறந்த வில்லன் நடிகர் – வித்யூத் ஜம்வால் (துப்பாக்கி)
25 சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (OKOK)
26 சிறந்த சண்டை அமைப்பு – பீட்டர் ஹெய்ன் (மாற்றான்)
27 சிறந்த அறிமுக நடிகர் – விக்ரம் பிரபு (கும்கி)
28 சிறந்த அறிமுக நடிகை – லஷ்மி மேனன்
29 சிறந்த தயாரிப்பு – CV குமார் (அட்டகத்தி, பீட்ஸா)