ஸ்ரீ முருகன் – புதிய புத்தகம்
அழகிய முருகனைப் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. “Sri Muruga". இதை எழுதியவர் ராகுல் கபடே. பூனாவில் பிறந்து – பெங்களூரில் படித்து – அமெரிக்காவிற்கு குடியேறி தற்போது யுகேவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.
முருகனின் அறுபடை வீடு – முருகனை வழிபடும் முறை அவரில் பல்வேறு பெயர்களின் சரியான உச்சரிப்பு ஆகியவற்றை விளக்குகிறார். முருகனை கந்தா என்றும் அழைக்கிறோம். அவ்வாறு ஏன் அழைக்கிறோம் என்பதை விளக்குகிறார். “க” என்பது பிரம்மனை குறிக்கும். அதுவே தொடக்கம் ஆகும். வடமொழியில் “அந்தா” /Anta என்றால் அது இறுதியை குறிக்கும். ஆகா முருகன் முதலும் – முடிவும் ஆனவன் என்பதை குறிப்பதாக விளக்குகிறார். இதே போல் முருகனின் மற்ற பெயர்களையும் விளக்குகிறார்.
கதைகளாக மட்டும் எழுதாமல் – அவர் செய்த ஆய்வையும் குறிப்பிடுகிறார். முத்துசாமி தீட்ஷிதர், நக்கீரர், ஆதி சங்கரர், ரமணமகரிஷி போன்றோரில் முருக பக்தியையும் அழகாய் விளக்கியுள்ளார்.
இந்து புராணங்களில் விரும்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
அமெரிக்காவில் வாங்க விரும்புவோர் :
Paperback ($7.13) : http://amzn.to/ZPifFy
Kindle ($2.99) : http://amzn.to/11uFMk6