விஸ்வரூபம் – விமர்சனம்
மன்மோகன் சிங் அல்லது வாஜ்பேயி படத்தைத் தொங்கவிட்டு பத்து பேரு கையில் துப்பாக்கி வெச்சு சுடற மாதிரி ஒரு அமெரிக்க படம் வருதுன்னு வெச்சுக்குங்க. நாம என்ன செய்வோம்? அடேய் இதெல்லாம் அராஜகம் தடை பண்ணனும்ன்னு கூப்பாடு போடுவோம். நியாயம்தானே. அப்போ இந்த விஸ்வரூபம் படத்தைத் தடை பண்ண கூப்பாடு போட வேண்டியது உண்மையில் அமெரிக்கப் பொதுஜனம்தான். ஜார்ஜ் புஷ் படத்தை மாட்டி கண்ணிலேயே சுடறாங்க. ஆனா அமெரிக்க குடியுரிமை பெற்ற நம்ம ஆட்கள் உட்பட கைதட்டி ரசிச்சுப் பார்த்துட்டு வந்திடறோம். நானும் விஸ்வரூபம் பார்த்துட்டேன், ரசிச்சுட்டேன்.
எனக்கு சினிமாப் பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம நண்பர்கள் சொல்லும் மேக்கிங், திரைமொழி, மாண்டாஜ், ஆக்டர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் ஒரு எழவும் தெரியாது. ஆனா பொழுது போகுதா இல்லை சீட்டில் நெளிய வெச்சு எப்படா முடியும்ன்னு அலுத்துக்க வைக்குதான்னு சொல்லத் தெரியும். அந்த விதத்தில் இந்தப் படம் பாஸ். வெறும் பாஸ் கூட இல்லை, பர்ஸ்ட் க்ளாஸ்.
படு ஸ்லோவான ஆரம்பம். ஆனால் சிரிக்க முடிந்த பகுதி. டைரக்க்ஷன் திரைக்கதை எல்லாம் பத்தி பலரும் நுட்பமான விமர்சனம் தருவாங்க. ஆனா இந்த ஆரம்ப காட்சிகளில் கமலின் நடிப்பு அபாரம். பிறவிக் கலைஞன் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. பின்னாடி வரப்போகும் ஆக்ஷனுக்கு சம்பந்தமே இல்லாத ஆரம்பம் இது. மெதுவா ப்ளேன் மாதிரி திரும்பி ஓடி, ஜெண்டிலா எல்லாம் கிளம்பாம, திடுதிப்புன்னு ராக்கெட் மாதிரி இந்த ஜாலி ஆரம்பத்தில் இருந்து கதை ஆக்க்ஷன் படமா மாறுது. அங்க ஆரம்பிச்சுப் பரபரன்னு ஓட்டம்தான்.

படமெடுக்கப்பட்டிருக்கும் வெளிப்புறத் தளங்கள் ஆகட்டும், எடுத்திருக்கும் விதமாகட்டும் தமிழில் இவ்வளவு தரத்தோடு வேறு படமே வந்ததில்லை என்பது என் எண்ணம். குறிப்பாக ஆப்கானிஸ்தான் சூழலை அருமையாக கண் முன்னால் கொண்டு வந்திருக்கின்றனர். இதை எல்லாம் சரியா பார்த்து ரசிக்க தியேட்டரில்தான் இந்தப் படத்தைப் பார்க்கணும். இல்லை இந்த அளவு பிரமிக்க முடியாது.
பொதுவாக நம்ம ஊர் கதாநாயகன் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்த ஊர் போலீஸ் காமெடியாக போய் விடுவது உண்டு. கமலின் வேட்டையாடு விளையாடு உட்பட. ஆனால் இதில் அப்படி எல்லாம் அசிங்கப்படுத்தவில்லை. அதுவும் பெரிய ஆறுதல். இரு நாடுகளைச் சார்ந்த வல்லுநர்கள் இடையே வரும் ஈகோ போராட்டம், அது பரஸ்பர மரியாதையும் நட்புமா ஆவது என்பது எல்லாம் நல்லாச் சொல்லி இருக்காங்க.
தீவிரவாதத்தை முன்வைக்கும் படம் என்பதால் வன்முறையோ வன்முறை. படம் முழுவதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இளகிய மனமுடையவர்கள், குழந்தைகள் பார்க்காமல் இருப்பது நலம். ஆனால் படத்தினை ஒட்டியே வரும் காட்சிகள் என்பதால் திணிக்கப்பட்ட வன்முறை என்றும் சொல்ல முடியாது. அதுவும் ஆப்கானிஸ்தானில் வன்முறை எப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கு என்பதை எல்லாம் ரொம்பத் தத்ரூபமாக எடுத்திருக்காங்க.
முடிக்கும் போது என்னமோ அவசர கோலத்தில் அள்ளித் தெளிச்சா மாதிரி முடிச்சுட்டாங்க. இரண்டாவது பாகம் வருதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, இந்த முதல் பாகத்தில் எல்லாத்தையும் சொல்லணும்ன்னு அவசரப்படாமல் இன்னும் கொஞ்சம் நிதானமாக் கொண்டு போய் இருக்கலாம். லார்ட் ஆப் திர் ரிங்க்ஸ் படங்களில் இதை அழகா செஞ்சு இருப்பாங்க. அது ஒரு குறை. நடு நடுவில் கொஞ்சம் தொய்வு விழுது. இன்னும் கொஞ்சம் கச்சிதமா எடிட் பண்ணி இருக்கலாமோன்னு தோணுச்சு. இசை பற்றி ஒண்ணும் சொல்லலை. தெரிஞ்சேதான் சொல்லலை. ராஜா ரஹ்மான், அதுவும் முக்கியமா முன்னவர் தவிர வேற யாரும் இவருக்கு ஒத்து வரதில்லை. யாரேனும் எடுத்துச் சொன்னாத் தேவலாம்.
கடைசியா ஒண்ணு. படம் முழுவதும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் நடக்குது. ஆப்கன் தீவிரவாதி ஒருத்தன் தமிழில் பேசறான். அதை நியாயப்படுத்த மதுரை கோவை அயோத்தியா எனப் பல இடங்களில் தங்கி இருந்தேன், தமிழ் கத்துக்கிட்டேன்னு சொல்லறான். தமிழகத்துக்கும் இதுக்கும் வேற சம்பந்தமே கிடையாது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய படத்தில் அமனுல்லாவைக் காமிக்காம அனுமந்தராயனையா காமிக்க முடியும்? இதுக்காடா இவ்வளவு கொந்தளிப்புன்னு ஆயாசமா இருந்தது. இதுல படமே பார்க்காமல் சிலர் அள்ளி வீசும் கருத்து மழைகள் தாங்கலை. நம்ம மக்கள் போக வேண்டிய தூரம் அதிகம். அஷ்டே.
விஸ்வரூபம் – பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.
பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.
அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.
கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.
ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.
மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.
இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?
ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?
கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .
இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.
ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .
எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .
அன்பு தோழா வணக்கம் தங்களின் விமர்சனத்தை படித்தேன் .முதல் பத்தியில் என் மனகுமரலை அப்படியே வேளிட்டுள்ளிர்கள்.ஆனால் சில வார்த்தைகளை நாகரிகம் கருதி தவிர்த்திருக்கலாம்.
என்னை மாதிரியே நல்லா சினிமா விமர்சனம் எழுதியிருக்கீங்க! :-)) கதையை வெளிப்படுத்தாமல் நல்லது மற்றும் அல்லாதது எழுதியிருக்கும் விதம் அலாதி! மாமேதை நீங்கள், உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி!
amas32
படம் பார்துட்டீங்களா சூப்பர்!
அமெரிக்க பொண்ணு ஒன்னும் நடிச்சிருக்கே அதை பத்து ஒரு வாய் சொல்லாத ரேஸிஸ பதிவு இது!