டேவிட் – விமர்சனம்
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு திறந்திருக்கும் ஃபன் மாலில் 5 தியேட்டர்கள் உள்ளன.
வார நாட்களில் 12.30 மணியிலிருந்தும், வார இறுதி நாட்களில் காலை 9.30 மணியிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
120 ரூபாய் டிக்கெட். ஆன்லைனில் புக் செய்தால் இன்னும் ஒரு 30 ரூபாய் பிடிங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே உள்ள ஃப்ரூக்ஃபீல்டை விட இருக்கைகள் இங்கே பெரியது. சாய்ந்து கொள்ளும் வசதியும் உண்டு.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஏ.சி.யை அணைத்து விடும் கெட்டப் பழக்கமெல்லாம் இங்கே பொதுவாக கிடையாது. நாலே நாலு பேர் இருந்தாலும் படமும் உண்டு. ஏ.சி.யும் உண்டு.

இடைவேளையின் போது தியேட்டரினுள் விற்கும் தின்பண்டங்கள் அநியாய விலை. ஒரு கோக் – அதில் முக்கால்வாசி ஐஸ் – எண்பது ரூபாயாம். வெஜிடபில் பப்ஸ் காலை வேளையிலேயே ஜில்லென்று இருக்கிறது. ‘ஏன் சார் இப்படி?’ என்று கேட்டால் ’நேத்து செஞ்சதை ஃப்ரிட்ஜிலே வெக்கலைன்னா கெட்டுடும் சார்’ என்று உண்மையான பதில் வருகிறது.
ஐம்பது ரூபாய்க்கு விற்கப்படும் தம்மாத்தூண்டு மசாலா சோளமும், மசாலா பொரியும் ஓரளவு ஓகே.
பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாய். அதுவும் நாலு மணி நேரத்துக்கு தானாம். நிறையப் பேர் கார், பைக் எல்லாவற்றையும் ரோடு ஓரத்திலேயே நிறுத்தி விட்டுச் சென்று அதையும் மிச்சப்படுத்துகிறார்கள்.
பொதுவாக தியேட்டர்களில் டிக்கெட் வாங்கியோ, ஆன்லைனில் புக் செய்து உள்ளே போகும் போது அரசாங்க வரி கட்டிய டிக்கெட் ஒன்று தருவார்கள். ஆனால் சமீபகாலமாக ஃபன்மால் தியேட்டர்களிலும், ஃப்ரூக்ஃபீல்டு தியேட்டர்களிலும் அது கொடுப்பதில்லை. கேட்டால் அதெல்லாம் கிடையாது என்று பதில் வருகிறது. அரசாங்கத்துக்கு நாமமா? தெரியவில்லை!
‘டேவிட்’ படம் விமர்சனம்ன்னு சொல்லிட்டு இதையெல்லாம் ஏன் சொல்றேன்னு பாக்குறீங்களா?
டே(ய்)விட்(டுடுங்கடா) – இதான் ஒற்றை வரி விமர்சனம்!
அருமையான விமர்சனம். கோவைக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள்.
sura rasiganuku epdi pidikum. hv to encourage movies with experiment and david is garnering positive reviews. Maybe an individual perception but pl dont get carried away.its really a gud experiment