வாசல்
கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர்
நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம்
வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க
நிலமகளுக்கு நடந்தது அலங்காரம்
திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும்
நிறத்திற்கு ஒரு முகமென ஏழும்
புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது.
வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி
சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல்