1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி

sharad-pawar-sonia-1999

ஷரத்  பவார்.  அவர்  சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல், தன் கட்சியின் கொள்கைகள், மற்றும் தற்போது கார்கில் பகுதியில்  ஏற்பட்டிருக்கும் சலசலப்பு இவற்றை  பற்றி  இவர் கொடுத்த பேட்டி.
நெம்பர் 10 வெர்ஸஸ் நெம்பர் 10 என்று  அந்த  தேர்தலை  வர்ணித்தனர் , காங்கிரஸ’ல்  சோனியா பிரதமர்  ஆவதற்கு  எதிர்ப்பு  தெரிவித்து வெளியே வந்த (வெளியேற்றபட்ட??)ஷரத் பவார்  கட்சியினர்.  அவர்களது புதிய கட்சி,  தேசியவாத காங்கிரஸ்  அலுவலகம் செயல்பட கொடுக்கப்பட்ட வீட்டு எண் நெம்பர் 10.  ஜன்பத் சாலை நெம்பர் 10 ல் குடியிருக்கும் சோனியா காந்தியுடன் போட்டி  என்பதைத்தான்  இவர்கள்  இப்படி  குறிப்பிட்டார்கள். ஷரத் பவார் முன்பே ஒருமுறை 13 வருடங்கள் முன்பு காங்கிரஸைவிட்டு வெளியே வந்திருக்கிறார். பின்னர் ராஜிவ் காந்தியின் காலத்தில் மறுபடி கட்சியில் இணைந்தார். பின்னர் நரசிம்மராவ் காலத்தில் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.  

அன்று 1999ல் அவர் கொடுத்தப் பேட்டி கீழே…. 

நீங்கள் சென்னையில் அதிமுக தலைவரை சந்தித்துவிட்டு வந்த கையோடு உங்கள் எதிர்ப்பு கடிதத்தை வெளியிட்டீர்கள். இதில் அந்த சந்திப்பின் பாதிப்பு ஏதும் இருக்கிறதா?

நோ….நோ…. அதெல்லாம் ஒன்றுமில்லை. இதைப்பற்றியெல்லாம் (அங்கு) பேச்சே இருக்கவில்லை.சொல்லப்போனால் டில்லியில் காரியக்கமிட்டி கூட்டம் இருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது. நான் திரும்பிவந்தபின் கூட்டம் இருக்கிறது என்று தெரிய வந்தது.அதிலும், காரியக்க்கமிட்டி கூட்டத்தில் இந்த ஸப்ஜெக்ட் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூட எனக்கு அப்போது  தெரியாது. கமிட்டி கூட்டம் கோவா  தேர்தலைப்பற்றி பேசுவதற்காகதான் கூடியது.  அப்போதுதான் சோனியா காந்தி தானே இந்த ஸப்ஜெக்டை எழுப்பினார்;  பின்னர் டிஸ்கஷன் தொடர்ந்தது.  நாங்கள் எங்களுக்கு மனதில் பட்டதை சொன்னோம். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நாங்கள்  எங்களுக்கு  சரியென்று பட்டதை உண்மையாக வெளிப்படுத்தியதால் நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.

காங்கிரஸ’லிருந்து வெளியேற்றப்பட்டவுடன், நீங்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதாகவும், கட்சியிலிருந்தபோது எவ்வளவுதூரம் சுயமரியாதை (humiliated) இழந்து இருக்க நேர்ந்தது என்று கூறியிருக்கிறீர்கள். இத்தனை வேதனை இருந்திருக்கும்போது நீங்கள் முதலிலேயே எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாமே?பிஜேபி அரசு கவிழ்ந்து மாற்று அரசுஅமைக்க நேரிடும் நிலையில் கூட நீங்கள் ஜனாதிபதியிடம்  சோனியா காந்தியை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறவில்லையா?

I have not said that. முதலில் அவர் கட்சியினரால் தங்களுக்குள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை  நீங்கள் மறக்கக்கூடாது.   காங்கிரஸ’ன் கோட்பாடுகள் படி   காங்கிரஸ் கட்சியின் பார்லிமெண்ட் தலைவராக இருப்பவர் லோக்சபாவிலோ  அல்லது  ராஜ்யசபாவிலோ மெம்பராக இருக்கவேண்டும் என்பதுதான் நியதி.  அவர் அப்படி இல்லை. ஆனால் காரியக்கமிட்டி கூட்டத்தில் கட்சியின் சாசனம் மாற்றப்பட்டது. அவர் தானே CPP தலைவராக விரும்புவதாக எங்களிடம் கூறப்பட்டது.  அந்த சமயத்தில் நம்மிடம் 141 இடங்கள் மெஜாரிட்டி இருந்தது.  அனாவசியமாக சர்ச்சைக் கிளப்ப வேண்டாம்;  கட்சியின் ஒற்றுமைதான்  முக்கியம் என்று நினைத்தோம்.  ஆனால் வாஜ்பாய் அரசு இப்படி கவிழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததால், அடுத்த பெரும்பானமைக் கட்சியின்  தலைவர் இவர்தான்.  அதனால் இவரை அழைப்பதைத் தவிர வேறு choice இல்லை ஜனாதிபதிக்கு. இதற்கு முன்  காங்கிரஸ் காரியக்கமிட்டி இந்தப் பிரச்சனையை விவாதிக்கக்கூடி, பின்னர் வெறும்  ஆறு நிமிடத்தில் தீர்மானமும் எடுத்துவிட்டது;  லோக்சபா கலைப்பதைத் தடுக்க சோனியா காந்தி தனக்கு சரியென்று பட்ட முடிவெடுக்கலாம் என்று.

அந்த தீர்மானத்தின்பேரில், அவர் உடனே தான் தனியாகவே ராஷ்டிரபவனுக்கு சென்று விட்டார். அங்கு ஜனாதிபதி மாளிகையின் முன்னால் அறிவித்தார்  தனக்கு 273எம்பிக்கள்  ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கு இதுதெரியாது. என்னிடமோ அல்லது முக்கிய உறுப்பினர்களிடமோ அவர் இதைப்பற்றி ஆலோசித்திருக்கவில்லை. ஒருவேளை அவருடைய உள்வட்ட உறுப்பினர்களோடு (coterie)ஆலோசித்திருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கவில்லை. டெலிவிஷனிலிருந்துதான் நாங்களே தெரிந்துகொண்டோம்.  So, this was our position. Practically nothing was left in our hands.

சோனியா காந்திக்குத் தான் பிரதமர் ஆகவேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்த குறிப்பான சமயம் எது?

ராஷ்டிரபதி பவன் முன்னால் எங்கள் எவரையும் கலந்தாலோசிக்காது தானே 273 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக அறிவித்த நிமிடமே அவரது எண்ணம் பிரதமர் பதவியில்தான் இருக்கிறது என்று புரிந்துவிட்டது.காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அவரை அழைத்துதான் ஆக வேண்டும்; ஆரம்பத்தில் அவர் பதவியில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தாலும், இப்போது அவரது உண்மையான எண்ணம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்;

இந்த சமயத்தில் நாம் அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எங்களுக்குத் தோன்றியது.  ஆனால் வாஜ்பாய் அரசு கலைந்து இப்போது தேர்தல் வரும் சமயத்திலாவது இந்த விஷயத்தைப் பற்றி கட்சியினுள் விவாதித்து முடிவெடுத்தபின் மக்களை சந்திக்க வேண்டுமென்று  நாங்கள் நினைத்தோம். 

வெளிநாட்டில் பிறந்தவர்கள் நாட்டின்  மிக உயரிய பதவிகளை வகிக்கக்கூடாதென்று அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.இன்று பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் இருக்கிறார்கள்; இப்படி ஒரு சட்டம் வந்தால், எதிர்காலத்தில் திறமையான தகுதியுள்ள பல இந்தியர்கள் இங்கே இந்த உயரியப் பதவிகளிலிருந்து நிராகரிக்கப்படுவார்களே.  இது ஒரு குறுகிய பார்வையல்லவா?

இந்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்களை வேண்டாமென்று நான் கூறவில்லையே….

வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே… பல இந்தியக் குழந்தைகள் இன்று வெளியே பிறக்கிறார்கள்; பெற்றோர்கள் அங்கே வாழ்வதால்.இவர்களின் நிலை என்ன?

இந்தியக் குடியுரிமையிருந்தால் இவர்களை வேண்டாமென்று சொல்லவில்லையே…

ஆனால் இவர்கள் இந்தியாவில் பிறக்கவில்லையே…?

பெற்றோர்கள் இந்தியக் குடியுரிமையுள்ளவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆலோசிக்கலாம்.  என்ன இருந்தாலும் அவர்கள் ஒரு இந்தியப்பெற்றோரின் குழந்தைகள். இந்த மாதிரி கோணங்களை ஆலோசிக்கதான் வேண்டும்.  இந்த விஷயம் ஆலோசிக்கப்பட வேண்டுமென்றுதான் நான் கூறுகிறேன். I am not rigid on the issue.

இரட்டைக் குடியுரிமைப் பற்றி உங்கள் கொள்கை?

இரட்டைக் குடியுரிமை இருக்கலாம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சொல்வதெல்லாம், இந்தியாவில் பிறக்காதவர்கள்  நாட்டின் உயரியப் பதவிகளை வகிக்கக்கூடாதென்பதுதான்.

இந்தியாவில் பிறந்து பின்னர் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற ஒருவர் இந்தியக்குடியுரிமையும் சேர்த்து இரட்டைக் குடியுரிமை வைத்திருந்தால் அவர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் இங்கே உயரியப் பதவிகளுக்கு தகுதியானால் உங்களுக்கு ஆட்சேபணையில்லையா?

அவர் இந்தியராக இருக்கும் பட்சத்தில் ஆட்சேபணையில்லை.

அதிமுகவுடன் உங்கள் கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளுமா?

நாங்கள் நேற்றுதான் எங்கள் புது கட்சியின் பெயரை அறிவித்து, தற்காலிகமாக ஒரு கமிட்டியை அமைத்துள்ளோம். எங்களுடைய  முதல் கூட்டம் பம்பாயில்தான் இருக்கும். அங்கே கட்சியின் மற்ற அங்கத்தினருடன் சேர்ந்து  தேர்தலில் எங்கள் போட்டியிடும் திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்படும். அதன் பின்னரே  யாருடன்  கூட்டணி  வைத்துக்கொள்வது போன்ற முடிவுக்கெல்லாம் வர முடியும்.  ஆனால் பொதுவில் எங்கள் முடிவு,பிஜேபியோ அல்லது  காங்கிரஸோ இருவரிடமிருந்தும் சமதூரம் தள்ளியே நின்று மதசார்பற்ற கட்சிகளின் பக்கம் சார்வதாகதான் இருக்கும்.

(It is too early to say anything about this. But defintiely our thinking is to go with secular parties, keeping equidistance with Sonia Congress and BJP both.)

இத்தனை நாள் நீங்கள் ஒரு தேசியக் கட்சியிலிருந்து தேசிய அரசியலில் இருந்தீர்கள். இன்று வட்டார அரசியலில் நுழைந்திருப்பது எப்படி இருக்கிறது?

எங்கள் கட்சியை தேசிய அளவில்தான் வளர்க்க வேண்டும் என்று நாங்கள் விழைகிறோம். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்று வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். ஏதோ இரண்டு அல்லது நான்கு மாதங்களில் ஆகிவிடும் என்று நான் கூறவில்லை. நாட்களாகலாம். ஆனால் நாங்கள் செல்லும் திசை அதுதான்; 21 வது சென்சுரியில் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக இந்தக் கட்சி இருக்கும்.எங்கள் குறிக்கோள்.

வட்டார மக்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக     இருக்கும். இந்தியாவில் கூட்டணி ஆட்சி தாக்குபிடிக்கத் திணறுவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

வட்டார மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் மனதில் கொள்ளாமல் தேசியக் கட்சிகள் செயல்படுவதுதான் காரணம். இனி அப்படி செய்யமுடியாது. வட்டார மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டத் தொடங்கிவிட்டார்கள்.  அவர்களை அரவணைத்து செல்லாத எந்த அரசும் தாக்குப்பிடிப்பது கடினம்.

வட்டார ரீதியில் உங்கள் கட்சியை எப்படி பலப்படுத்தப் போகிறீர்கள்?

இன்று நாட்டு அரசியலில் ஒரே இடத்தில் பலம் குவிந்துள்ளதாக இருக்கிறது.(too much centralisation) வட்டார மக்களின் தேவைகளை அலட்சியப்படுத்துவதால்தான் வட்டாரக் கட்சிகள் பலம் பொருந்தியவையாக ஆகிவருகின்றன. சமுதாயத்தில் பிற்பட்ட குழுவினர் – பெண்கள், பிற்படுத்தப்பட்டோர்..- இன்று அதிருப்தியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வெறும் ஒதுக்கீடு முறை போதாது. முடிவு எடுக்கும் முறைகளில் பங்கு வேண்டும். நேருஜி வட்டாரத் தலைவர்களை அனுசரித்து நடப்பது வழக்கம். நாங்கள் அந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவோம்.இன்று தேசியக் கட்சிகள் நாட்டு மக்களின் தேவைகளை உணரவில்லை. இவையல்லாது, வட்டாரக் கட்சிகள் சேர்ந்த கூட்டணியரசுதான் இனிமேல் வழக்கமாகப்போகிறது.மக்களின் தேவைகள் உணர்ந்த  ஒரு மூன்றாவது அணியைத்(THIRD FRONT) தயார் செய்ய நாங்கள் முனைவோம்.

அப்படியானல் ஒரு மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று என்கிறீர்கள்?

குறைந்த பட்சம் எங்கள் செயல்முறைகள் அதை நோக்கிதான் இருக்கும். நாங்கள் உண்மையாக, கடினமாக உழைத்தால் நிச்சயம் மக்கள் எங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறோம்.

நீங்கள் பாதுகாப்பு மந்திரியாக இருந்திருக்கிறீர்கள். இன்று கார்கிலில் நிலவும் சலசலப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

கார்கிலில் ஊடுருவுக்காரர்களை வெளியேற்ற அரசு எடுத்த முடிவு சரிதான் – விமானத்தாக்குதல் உள்பட.  நம் எல்லைக்குள்தான் இந்தத் தாக்குதலை நடத்துகிறோம். இவர்களை வெளியேற்ற இதைவிட்டால் வேறு வழியில்லை. சரியான முடிவுதான்.ஆனால் அதே சமயம், இவர்கள் எப்படி முதலில் உள்ளே நுழந்தார்கள் என்பது எனக்கு  புரியவில்லை. நம் உளவுத் துறையின் அப்பட்டமான தோல்வியை இது குறிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பற்றி அரசுஇன்னும் கவனம் காட்டியிருக்க வேண்டும். 

நீங்கள் பிரதமராக வர நேர்ந்தால் நாட்டின் எந்தப் பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

நான் முதலில் எங்கள் கட்சியைப் பலப்படுத்துகிற வேலையைப் பார்க்கிறேன். We want to develop strong, developed, prosperous India where every Indian can preserve his self-respect and honour.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 2, 2014 @ 6:24 am