அஞ்சான் – விமர்சனம்

anjaanகன்னியாகுமரிலேர்ந்து பெட்டி எடுத்துட்டு வரும் தம்பி சூர்யா காணாம போன அண்ணனைத் தேடி மும்பைக்கு வர்றார். அப்போ அண்ணன் சூர்யாவை ஒவ்வொரு விலாசத்திலும் தேடி விசாரிக்க, அண்ணனைப் பத்தி ரசிகர்களாகிய நமக்கு சாதா அண்ணன் இல்ல, தாதா அண்ணன் ராஜூபாய்னு நிறைய பில்ட்அப் கொடுக்கிறாங்க. கொஞ்சம் கொசுவர்த்திச்சுருள் எல்லாம் போட்டு பிளாஷ்பேக்கும் காட்டறாங்க. அண்ணனுக்கு ஒரு நெருங்கின தோழன், தாதா பிரண்ட் டாக்டரா என்ன? அவரும் தாதா தான். ரெண்டு பேரும் சேர்ந்து சமூக சேவை செய்யறாங்களானு தலையைச் சொறிஞ்சு யோசிச்சீங்கனா தப்புநிழல் உலகத் தாதாக்கள் கதை, தன்னிலை மறந்த நிலையில அவங்களை அறியாம ஏதாச்சும் நல்லதும் செஞ்சுருப்பாங்கனு மக்கள் மூலம் காட்டறாங்க, ஆனா சண்டைக்காட்சிக்கு முக்கியத்துவம் தரவே லிங்குசாமிக்கு நேரம் போனதால சென்டிமெண்ட் காட்சிங்க, நாயகர்கள் ஏழைகளுக்கு உதவற காட்சிகள் வைக்க நேரமில்லை. படத்துல இருக்கிற பெரும்பாலான பாத்திரங்களோட குலத்தொழிலே தாதாயிஸம் தான்சரி, கதை(!)க்குள்ள வருவோம். நாயகர்கள் கடத்தல் எல்லாம் செய்து பெரிய ஆட்களா வளர்ந்துட்டு வர்றாங்க. அப்போ நடக்கிற போட்டியில எதிரியை உசுப்பி விட அந்த எதிரி இந்த ஹீரோக்களைப் போட்டுத் தள்ளறாங்க. இதுல திருப்புமுனையா இருக்கிற காட்சிகளைச் சொல்லிட்டா படத்துக்கு போறவங்களுக்கு சஸ்பென்ஸ்னு ஒன்னும் இருக்காது. ஆனா புத்திசாலி ரசிகர்கள்னா அடுத்தடுத்து யூகிச்சுடுவாங்கதம்பி சூர்யா யாரு? அண்ணன் கிடைச்சாரா? பழி வாங்கினாரா? இதெல்லாம் என்னனு வெள்ளித்திரையில பார்த்துக்கலாம்நமக்கெல்லாம் இவங்களையே பார்த்து அலுத்துடும்னு ஜிலுஜிலுனு சமந்தாவையும் இழுத்து விட்டுருக்காங்க. படத்துல சமந்தாவுக்கு நல்ல ரோலா? டான் கதையில இவ்வளவுக்கு நடிக்கக் கிடைச்சதே புண்ணியம். தெய்வதரிசனம், இது திவ்யதரிசனம் போல சமந்தாவோட தாராளம் படத்துல தெரியுது. சமந்தா ரசிகர்களுக்காக என்ன செய்யணுமோ அதைச் சமர்த்தாச் செஞ்சுருக்கார். காமெடிக்கு சூரியை விட சமந்தா போலீஸ் கமிஷனரா வர்ற சமந்தா அப்பா நல்ல பொருத்தம். பொண்ணை நீ பாட்டுக்கும் இஷ்டத்துக்கும் அவனோட சுத்தும்மானு லூசுல்ல லூசாட்டம் விட்டுருக்கார்.  

படத்துல போலீஸ்க்கு முதல்ல வாய்ப்பு கொடுத்ததோட சரி, கடைசி வரைக்கும் யாரும் யாரையும் சிறைப்பிடிக்கவே வரலையே. இஷ்டத்துக்கும் சுடறாங்க, கொல்லறாங்க, வெளில சுத்தறாங்க. பிடிச்சு உள்ள போட்டாத் தானே ரவுடியிஸம் குறையும். படம் பார்த்துட்டு வெளில வரும் போது யாரையாச்சும் தூக்கிடலாமா? போட்டுத் தள்ளிடலாமானு யாரையாச்சும் அடிக்கணும் போல வெறியா இருக்கிறது படம் கொடுத்த பூஸ்ட்.

 அமைதியான கிருஷ்ணா பாத்திரத்திலும் அதிரடியான ராஜூ பாய் பாத்திரத்திலும் அசத்திப் படத்தைத் தூக்கி நிறுத்துபவர் சூர்யா. ஆடலில் நல்ல முன்னேற்றம். அதிரடியில் அனல் பறக்க எதிரிகளைத் துவம்சம் பண்ணிடறார். காதல் எல்லாம் வேணாம்னு சமந்தாகிட்ட சொல்லப் போற நேரத்துல அவங்க கண்ணைப் பார்த்துட்டு தடுமாறிக் காதல்ல விழறதும் நண்பருக்காக எதிரியை அடைச்சு வச்சு சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதும் துரோகம் செய்த கூட்டாளிகள் ஒவ்வொருத்தரையும் அழிக்கும் போதும் மனிதர் என்னமா நடிச்சிருக்கார்இவருக்கு இணையான ஹீரோ துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜம்வால்(எதிரிகளுடன் மோதும் அந்த ஒரு காட்சிக்காக இவருக்குத் தமிழில் வாயசைக்கக் கூட வராததை மறந்து மன்னித்து விடலாம்) படம் முழுக்கக் குண்டு மழையில் சூர்யாசமந்தா காதல் சிறு மழைத்துளி. இந்தக் காதல் காட்சிகளைக் கொஞ்சம் அதிகப்படுத்திருக்கலாம். சந்தோஷ் சிவன் இன்னொரு கதாநாயகன்னு சொல்லலாம். மும்பை நகரம், பாடல் காட்சிகள் என்று ஒவ்வொன்றிலும் அசத்தல் ஒளிப்பதிவு. யுவனின் இசையில் ஏக் தோ தீன் தேறுகிறது.

லிங்குசாமி படங்கள்ல ஆனந்தம், ரன் போன்றவை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருந்தன. ஆனா இதுல ஆக்ஷன் ரசிகர்களையும் சூர்யாசமந்தா ரசிகர்களையும் மட்டுமே கவரும் வகையில் அமைத்திருக்கிறார்.

 

மனம் கவர்ந்த உரையாடல்கள்:

 

1. ’என் எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக் கூடாது’ 

2. 'நான் சாகணும்னா நான் தான் முடிவு பண்ணுவேன், நீ சாகணும்னாலும் நான் தான் முடிவு பண்ணுவேன்' அபசகுனமா சொல்லறேன்னு நினைக்காதீங்க, நான் சொல்லலீங்க, படத்துல சூர்யா சொல்லறது

3. சூர்யா சமந்தாவிடம், 'ஹே அடிக்காத, படக் கூடாத இடத்துல பட்டுட்டா உனக்குத் தான் கஷ்டம்

4. என்ன தான் ஒருத்தனை ஹிந்தியில திட்டினாலும் தமிழ்ல திட்டற சந்தோஷம் கிடைக்காது.

5. சாவு பக்கத்துல இருக்கும் போது எதுக்குடா சிரிப்பு? சூர்யா, 'யாரோட சாவு?'

 

இயக்குனருக்குச் சில ஆலோசனைகள்:

 

1. அஞ்சானுக்குப் பதில் அதிரடி அடிதடி, ஆவேசம், பழிக்குப்பழி இப்படி தலைப்பு யோசிச்சிருக்கலாம்.

2. ஹீரோயினுக்கு கமிஷனர் அப்பா ஆனா ரெளடியை லவ் பண்ணுது, அவுத்து விட்ட கழுதை. வேணாம் அழகா இருக்கிறதால குதிரையாட்டம் திரியுது, யாரோ ஒரு இசுலாமியப் பெரியவர் வீட்டுல தங்குதுனு காட்டினதுக்கு அனாதைப்பொண்ணா சமந்தாவைக் காட்டிருந்திருக்கலாம்.

3. இதயம் பலவீனமானவர்கள், நோயாளிகள், வயதானவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதை யோசியுங்கள்னு தலைப்புலேயே போட்டுருக்கலாம்.

4. படத்துல போலீஸ்னு ஒரு பாத்திரமே காட்டாம ரசிகர்களுக்குப் போலீஸ் நினைப்பை மறக்கடிச்சிருக்கலாம், ஏன்னா சீட் நுனிக்கு வந்த ரசிகனுக்கு ஏதாச்சும் ஒரு சீன்லயாச்சும் போலீஸ் வருமாக்குங்கிற எதிர்பார்ப்பு இல்லாம இருக்கும் பாருங்க.

5. அஞ்சான்ல அடி வாங்கியவங்களுக்கு அஞ்சால் அலுப்பு மருந்து தரணுங்கிற அளவுக்கு ஹீரோக்கிட்டேர்ந்து அடி வாங்கறாங்க. சண்டைக்கலைஞர்களுக்கும் துரோகிகளுக்கும் அலுப்பு மருந்து போச்சா இல்லையா?

6. படத்துல எத்தனை குட்டி குட்டி வில்லன்(துரோகிகள்)னு சரியாச் சொல்லறவங்களுக்கு இந்தப் படத்தோட டிவிடி கொடுக்கலாம்னு அறிவிக்கலாம்.

7. தம்பி சூர்யா லேப்டாப்புக்கு பாஸ்வேர்ட் வச்சுக்க மாட்டாரா? அதுல ராஜுபாயைப் பார்த்துட்டுத் திருப்பித் தந்ததாச் சொல்லறாங்களே, அடுத்த முறை பாஸ்வேர்ட் செட் பண்ணிடுங்க. இல்லைனா வில்லன் ஏதாச்சும் முக்கியமான தரவுகளை எடுத்துடப் போறாங்க.

திரையரங்கில் பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்க படத்துல வில்லனும் ஹீரோவும் மாறி மாறி குண்டு போட்டு சண்டை எல்லாம் போட்டு டுமீல் டமார்னு சீரியஸா இருக்காங்க, இவங்க வடைக்கு ஊற வச்சதையும், ஸ்ரீ ஜெயந்திக்கு சீடை, முறுக்கு சுடப் போறதையும் பேசிக்கிட்டதைத் தான் ஜீரணிக்கவே முடியலை. கஷ்டப்பட்டுப் படம் எடுத்தவங்களுக்கு ஒரு மருவாதை தர வேணாம். அட கொடுத்தக் காசுக்காச்சும் அமைதியாப் படம் பார்த்தா என்னங்கிறேன்?

விமர்சகர்கள் கிழிகிழியென்று கிழிக்கும் அளவுக்கு படம் மோசமில்லை. பல கதைகளில் பார்த்து விட்டதால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சலிப்பு. திரையரங்குக்குச் சென்று படத்தைக் கண்டு களிக்கலாம்.வசூலைக் குவிக்கும் அஞ்சான்சூர்யா ரசிகர்களை வென்றான்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2014 @ 11:27 pm