லக லக #3

makkal-dmdk* தமிழக வாக்காளர்களை இந்தத் தேர்தல் ஒரு வழி செய்யாமல் விடாது போலிருக்கிறது. நான்கே பேர் உள்ள கட்சி ஐந்தாக உடைகிறது. ஐந்து பேர் மட்டுமே உள்ள கட்சி ஏழெட்டு பதவிகளை கேட்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் வராதே என்று ஒரு கட்சி துரத்துகிறது. ஒரு நபர் கட்சியாக இருந்தாலும் உள்ளே வா என்று இன்னொரு கட்சி காலில் விழாக்குறையாக கூப்பிடுகிறது. கொள்கை ரீதியில் (?!) முரண்பாடான கட்சிகள் என்று இவ்வளவு நாட்கள் பம்மாத்து காட்டிய கட்சிகள் கூட்டணி சேருகின்றன. ஆக மொத்தத்தில் தேர்தல் முடிகிற வரையில் இன்னும் என்னென்ன சுவாரசியங்கள் காத்திருக்கின்றனவோ.

* திமுக தேர்தல் அறிக்கையே பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி/பேஸ்ட் செய்தது தான் என்று டாக்டர் ராமதாஸ் கொளுத்திப் போட அது சமூக வலைதளங்களில் பல்லாயிரம் வாலா சரவெடியாய் இன்னமும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

* ‘வக்பு போர்டு சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்போம்’ என்று உறுதியளிக்கும் திமுக தேர்தல் அறிக்கை, அதுவே, ‘ஹிந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களில் பல ஆண்டு காலம் இருந்து வருபவர்கள் கோரிக்கைக்கு இணங்கி அந்த நிலங்களை அவர்களுக்கே சட்ட ரீதியில் விற்பனை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணெய். இன்னொரு கண்ணில் ஆசிட் வீச்சு என்பது இது தான். தொன்று தொட்டு தொடரும் திமுகவின் இந்தப் பாரம்பரிய பழக்கம் முன்பெல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கும். இப்போதெல்லாம் உடனுக்குடனே கண்டுபிடிக்கப்பட்டு தோலுரிக்கப்படுவதால் தான் திமுகவின் வோட்டு வங்கி நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது. ‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் பக்கா அயோக்கியத்தனம் செய்து கொண்டிருப்பதை விடும் வரையில் திமுகவிற்கு சாபவிமோசனமே கிடைக்க வாய்ப்பில்லை.

* ஏனைய கட்சிகள் எல்லாம் எங்கே போட்டியிடுகிறோம். யார் போட்டி என்றெல்லாம் சிண்டை பிய்த்துக் கொண்டிருக்கையில் தமிழக முதல்வரோ பிரசாரத்துக்கே கிளம்பி விட்டார். ’அவருக்கு உடல்நிலை சரியில்லை. பிரசாரத்திற்கு வரமாட்டார்’ என்றெல்லாம் இஷ்டத்திற்கு கிளப்பி விட்டுக் கொண்டிருந்த நபர்களைத் தான் இன்னமும் காணோம். இதில் பிரசார வேன் தயாராகி வந்தவுடன் லோக்கல் தெருக்களிலேயே இரண்டு ரவுண்டு சுற்றி விட்டு வந்து, “பிரசாரத்துக்கு ரெடி” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிந்தார்கள் சில தலைவர்கள். யாரு டெஸ்ட் ட்ரைவ் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் உண்மையிலேயே முழு ரவுண்டு போய் வருகிறார்கள் என்பது தான் முக்கியம்.

* மும்பையைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனம் தமிழகத்தில் உள்ள பல வலைப்பூ எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டது. “நாங்க தினமும் மூன்று கட்டுரைகள் அனுப்புவோம். எல்லாம் ஆளும் கட்சியை எதிர்க்கும் கட்டுரைகள். நீங்க அதை அப்படியே காப்பி/பேஸ்ட் உங்க வலைப்பூவில் பகிருங்கள். ஒரு நாளைக்கு 200 ரூபாய் சன்மானம்” என்று அறிவித்திருந்தது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ஒருவருக்கும் அந்த ஈமெயில் வந்து சேர, அவர் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசி அதை உறுதிப்படுத்திக் கொண்டு செய்தியாக்கியுள்ளார். இதில் கூடுதலாக மேலும் வலைப்பூ எழுத்தாளர்களைக் கொண்டு சேர்த்தால் ரெஃபரல் கமிஷனெல்லாம் கூட உண்டாம். கொள்ளையடித்த பணத்தையெல்லாம் இப்படித்தான் கரைக்க வேண்டும்?

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 11, 2016 @ 9:27 pm