வெந்தயக்கீரைச்சப்பாத்தி (மேதி பரோத்தா)

செய்முறை

1.வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.சுடு தண்ணீர் விட்டு கோதுமை மாவையும் வெந்தயக்கீரையையும் சேர்த்துப் பிசைந்து அந்த மாவுடன் உப்பு,சீரகம்,பச்சைமிளகாய்,கரம்மசாலப்பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியனவற்றைச் சேர்க்கவும்.

3.அரை மணி நேரம் பிசைந்த மாவைத் தனியே வைக்கவும்.

4.உருண்டைகளாக இட்டு வட்டமாகத் தேய்த்து சப்பாத்திக்கல்லில் வெந்தயக்கீரைச் சப்பாத்தியைப் போட்டு எடுக்கவும். சப்பாத்தி சிவந்தவுடன் இரு புறமும் மாற்றி மாற்றிப் east jump போட்டு சிவக்க எடுக்கவும். கல்லிலிருந்து இறக்கும் முன் எண்ணெய் அல்லது நெய் தடவிப் பரிமாறவும்.

கூடுதல் டிப்ஸ்

1. வெந்தயக்கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால்.

2. வெந்தயக்கீரைக்குச் சொன்ன முறையில் கீரையையும் கீரைச்சப்பாத்திகளாகச் செய்து பார்க்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 1, 2022 @ 6:25 pm