விதியா ? மதியா ?

நம்ம கையிலே என்னங்க இருக்கு !! ’எல்லாம் ஆண்டவன் செயல்’ அப்படின்னு சொல்லிகிட்டே காலம் தள்ளறவங்க கொஞ்சப்பேர் !  ‘இதோ பாருங்க நீங்க யாரையுமே நம்பாதீங்க ! சொந்தகால்லே நில்லுங்க ! அதுதான் நல்லது ! அப்படின்னு சொல்றவங்க கொஞ்சப்பேர் !

இது ரெண்டுல எதை நம்பறதுன்னு தெரியாமே குழப்பத்திலேயே காலத்தை ஓட்டிமுடிச்சிடவறங்க நிறையபேர்.  நடக்கிறது எல்லாம் ‘விதி’ யோட கையிலே இருக்கா? நம்ம கையிலே இருக்கா ?

ஒரு பெரியவர் சொல்றார்..

“எல்லாத்துக்கும் விதியையே நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது, சொந்த முயற்சியும் வேணும் !

உதாரணத்துக்கு…

நாம காசிக்குப் போகணும்ன்னு வச்சிக்குங்க ! ரயில்லே போகணும். ரயில் நேரப்படி புறப்பட்டு அதுபாட்டுக்கு புறப்பட்டு போய்கிட்டேயிருக்கும். அது புறப்படற நேரத்துக்குளே அதைப்போய் பிடிக்கவேண்டியது நாமதான் !
ரயிலே நம்ம வீட்டு வாசல்லே வந்து நின்னு, நம்மளை தூக்கி வச்சிக்கிட்டு போய் காசியிலே இறக்கி விடாது !

ரயில் அதுக்குன்னு போட்டிருக்கிற தண்டவாளத்துலே அதுபாட்டுக்குப் போயிகிட்டே இருக்கும். எந்த நேரத்துலே எந்த இடத்துலே அதைப் போயி பிடிச்சி ஏறிக்கணுமோ அது உங்க கையிலேதான் இருக்கு !

ரயில்தான் விதி !

அதை சரியா பயன்படுத்திக்கிட்டு போய்ச்சேர வேண்டிய இடத்துக்குப் போறோம்லே – அதுதான் மனித முயற்சி. முதல்ல நாம நம்மள நம்பனும். அதுக்காக நாம நினைக்கிறது எல்லாம் சரின்னு இருந்துட கூடாது.

இந்த உலகத்திலே நம்மை மீறின செயல்களும் உண்டு.  நம்மால் முடியக்கூடிய செயல்களும் உண்டு. இது இரண்டையும் சரியா பயன் படுத்திக்கிட்டு சாமர்த்தியமா வாழவேண்டியது நம்மோட கடமை.

இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களுமே சிறப்பாய் அமைய – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

(தென்கச்சி கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் தொகுப்பிலிருந்து)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 31, 2021 @ 10:38 pm