திரு கருப்பையாவின் கட்டுரைக்கு, திரு எஸ்.வி.சேகரின் பதில்

மு.கு : மார்ச் 4ம் தேதி துக்ளக்கில் ‘இது கழிவுகளின் காலம்’ என்ற தலைப்பில் திரு.பழ கருப்பையா அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.வி.சேகர் அவர்கள் பதில் எழுதியுள்ளார். இது துக்ளக்கில் வருமோ வராதோ என்று நமக்கும் அனுப்பி வைத்தார்.

வாசகர்களின் வசதிக்காக முதலில் திரு. பழ கருப்பையாவின் கட்டுரையும், அதைத் தொடர்ந்து திரு. எஸ்.வி.சேகரின் பதிலையும் இங்கே காணலாம்.


இது, கழிவுகளின் காலம் ! – பழ. கருப்பையா (நன்றி துக்ளக்)

 

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தைப் பொருளாகி விட்ட காலம் இது! மதுரையில் 'மாட்டுத் தாவணி' இருப்பதுபோல, 'சட்டமன்றத் தாவணி' என்று ஒன்றைத் தோற்றுவிப்பதற்குச் சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி இடம் ஒதுக்கினாலும் வியப்பதற்கில்லை. 

மாடுகள், தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதில்லை; சட்டமன்ற உறுப்பினர்களோ தங்களைத் தாங்களே விற்றுக் கொள்கிறார்கள்! 

வள்ளுவன், 'கயமை' என்றொரு அதிகாரம் எழுதினான். திருடனை நமக்குத் தெரியும்; கொலைகாரனையும் தெரியும்! திருடியதாலும், கொலை செய்ததாலும் அவர்கள் அவ்வாறு அறியப்படுகிறார்கள். ஆனால் கயவன் யார்? என்ன காரணத்தினால் அவன் அவ்வாறு அறியப்படுகிறான்? 

எத்தனையோ ஒழுங்கீனங்களை வள்ளுவன் சுட்டிச் செல்கிறான். இவை அனைத்திலும் அடங்காத தனி வகையான மனிதர்கள் இருப்பதைக் கண்டறிகிறான். அவர்களைத் தனியொரு கூட்டமாகத் தனியொரு தலைப்பின் கீழ் உருவகிக்கின்றான். அதற்குக் 'கயமை' என்று பெயரிடுகின்றான். 

அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வர் என்பதை வைத்துக் கயமையை விளக்கப்படுத்துகின்றான்! 

'தமக்கு ஒரு சிறு துன்பமுற்றால் போதும்; உடனே வெகு வேகமாகத் தங்களையே விற்றுக் கொள்ளும் இயல்புடையோர்; இவர்கள் ஒரு தொழிலுக்கும் உரியவரல்லர்!'

இவர்களை 'நிலையிலர்' என்பான் உரையாசிரியன் மணக்குடவன்! ஒரு நிலையில் நில்லாதவர்கள் இவர்கள்! 

'பிறர்க்கு அடிமையாய் நிற்பார்' என்பான் பாரில் சிறந்த உரையாசிரியன் பரிமேலழகன். 

'தம்மை மட்டும் அடிமையாய் விற்றற்குரியர்' என்பதோடு அமையாது, 'தம் குடும்பத்தையும் சேர்த்து விற்றற்குரியர்' என்று உரைக் களஞ்சியப் பழைய உரை கூறுகிறது! 

'எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று

உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து' 

(1080) 

சாதாரணப் பாத்திர வணிகராய் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க.வில் அமைச்சராகி, புதிய விலாசமும் வளமும் பெற்று, அடுத்த முறையும் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்று, ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்ட நிலையில் ஊழல் வழக்குக்கு உள்ளாகி, தப்பிப்பதற்கு வழக்குத் தொடுத்த ஆளுங்கட்சிக்கே மாறிச் சென்றுவிட்டதன் மூலம், தன்னை வழக்கினின்று தற்காத்துக் கொண்டு விட்டவர்! 

செல்வ கணபதி, அ.இ.அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து, கருணாநிதி ஆட்சியில் தொலைக்காட்சிப் பெட்டி ஊழல் வழக்குத் தொடுக்கப்பட்டு, தி.மு.க.வில் இவர் சங்கமித்த பிறகு, 'வழக்கு மெய்ப்பிக்கப்படவில்லை' என்று தள்ளுபடி ஆகிச் சிக்கல் தீர்ந்தவர்! 

தங்களை விற்றுக் கொண்டவர்களில் இவர்கள் ஒருவகை!

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கோவில்பட்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோர் விற்றது, வெறும் சட்டமன்றப் பதவியை மட்டும் அல்ல; கருணாநிதியை அரசியலில் ஒழித்துப் பொதுவாழ்க்கையைத் தூய்மைப்படுத்துவது என்று எண்ணம் கொண்டிருந்த, லட்சக்கணக்கான வாக்காளர்களையும் சேர்த்து விற்றுவிட்டார்கள்! 

இவர்களெல்லாம் மதுரைக் கள்ளழகருக்குப் பட்டுச் சாத்துவதுபோல, அழகிரிக்குச் சால்வை சாத்திப் பதினாறு பேறும் பெற்றவர்கள்! ஒன்றை வாங்குவது என்று முடிவு செய்து விட்டால், அற்பத்தனமாகப் பேரம் பேசும் பழக்கம் அழகிரிக்குக் கிடையாது! ஆகவே ஒன்றை விற்பதென்று முடிவு செய்து விட்டவர்கள், அழகிரியிடம் போனால்தான், பார்த்தும் பாராமலும் நல்ல விலை தருவார் என்கிறார்கள்! கருணாநிதிக்குப் பிறவியில் வந்த பழக்கம், 'வாங்க' மட்டுமே தெரியும்; கொடுக்கத் தெரியாது! 

அதனால்தான் அழகிரி தலையெடுத்த பிறகு அரசியலே மாறிவிட்டது! வாக்காளரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வரை அனைவர்க்கும் விலைப் பட்டியலைக் கட்டி விட்ட பெருமை அழகிரிக்கே உண்டு. இதற்கு 'அழகிரி சூத்திரம்' (Formula) என்று வேறு பெயர்! 

கட்சி மாறுவது பிழையில்லை; பதவியோடு மாறுவதுதான் பிழை! முன்னாள் பிரதமர் சந்திரசேகர், சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸுக்குப் போய், பிறகு ஜனதா கட்சிக்கு மாறினார்! அத்தகைய மாற்றம் காலத் தேவை என்று போற்றப்பட்டது! 

ஆனால், இப்போது கட்சித் தாவல் தடைச் சட்டம் தோற்றுவிட்டது. அந்தச் சட்டம் இவர்களில் யாரைத் தாவ விடாமல் தடுத்து நிறுத்தியது? அந்தச் சட்டத்தால் எந்த ஓடுகாலிக்குப் பதவி போனது? 

ஒரு காலகட்டத்தில் பீஹாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய மக்கள் இயக்கம் காரணமாக, பொதுமக்களெல்லாம் கூட்டம் கூட்டமாகச் சென்று, தட்டுக்கெட்ட சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள்! நிலைமை கட்டு மீறிப் போவதைப் பார்த்து இந்திரா காந்தி அலறினார்; ஓலமிட்டார்! அது மக்கள் புரட்சி! அதையொட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் சட்டமன்ற உறுப்பினர்களை, அவர்கள் விலை போகும் கட்டத்தில், திரும்பப் பெறுகின்ற உரிமை மக்களுக்கு வேண்டும் என்று முழங்கினார்! 

இப்போது காலம் மிகவும் கெட்டு விட்டது.


 

திரு. எஸ்.வி.சேகரின் பதில்

துக்ளக் ஆசிரியர் திரு. சோ அவர்களுக்கு,

வணக்கம்,

'சிந்திக்கும் வேளையிலே' என்ற தலைப்பில் திரு.பழ கருப்பையா அவர்களின் கட்டுரையை துக்ளக் வாசகன் என்ற முறையில் படிப்பவன் நான்,  வாரம் தோறும் இரண்டு பக்கம் ஏதாவது எழுதியாக வேண்டுமே என்று எழுத ஆரம்பித்தால் அது சில சமயம் வியாதிக்காரன் வாந்தி எடுத்தது போல் பழ கருப்பையாவின் சிந்திக்கும்  வேளையாக ஆகிவிடும்,

நான் என் வாழ்க்கையில் விருப்பப்பட்டு சேர்ந்த முதல் கட்சி ஜெயலலிதாவின் தலைமையில் மட்டும் இயங்கக்கூடிய அஇஅதிமுக என்று நினைத்துக் தான் சேர்ந்தேன்,

15 வருடங்களாக ஜெயிக்காத மைலாப்பூரில் ஜெயித்து இன்றுவரை நேர்மையானவன.; நாணயமானவன் என்ற பெயருடன் நான் இருக்கின்றேன்,  என்னைப் பற்றி மைலாப்பூரில் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள்,

நான் அஇஅதிகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு யாரை புகழ்ந்தால் என்ன?  யாரை ஆதரித்தால் என்ன?

இதுவரை கட்சியே மாறத பால்மணம் கொண்ட மனத்தவர் போல பழ கருப்பையா எழுதுவது ஜெயலலிதாவை வேண்டுமானால் சந்தோக்ஷப்படுத்துமே தவிர துக்ளக் வாசகர்களை சந்தோக்ஷப்படுத்தாது,

திரு பழ கருப்பையா அ,இ,அ,தி,மு,கவிற்கு தாவிக்குதித்தது தெரியாமல் இன்னும் காங்கிரஸில்தான் இருக்கிறார் என்ற எண்ணத்தில் சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் இலக்கிய விழாவிற்கு அழைக்கப்பட. பழ கருப்பையா அவர்களும் அங்கே போய் அசடு வழிந்தது பற்றி நானும் கேள்விப்பட்டேன்,

வேலை செய்யும் இடத்திலோ. நண்பர்கள் வட்டத்திலோ ஒருவர் வெளியேறினால் தவறு அவர்மேல் இருப்பதாக சொல்லலாம்,  தொடர்ந்து பலர் வெளியேற ஆரம்பித்தால் அவர்களை அரவணைத்துச் செல்லும் திறமை அந்தத் தலைமையிடம் இல்லை என்றுதான் அறிவுள்ளவர்கள் கூறுவார்கள்,  நான் தயாநிதிமாறன் அவர்களை பொதுமேடையில் சந்தித்தது தவறு என்றால் மாற்றுக் கூட்டணியில் உள்ள சோனியா அவர்களை சந்தித்து வணக்கம் சொன்ன ஜெயலலிதா செய்ததும் தவறுதான்,  கொள்கை என்பது தொண்டனுக்கு மட்டுமல்ல.  தலைமைக்கும் இருக்க வேண்டும்,

வெறும் பணம். புகழ்,பதவி ஆசை பிடித்தவர்களுக்கு அது இல்லாமல் இருக்கலாம்,  எனக்கு சுயமரியாதை உள்டு,  நான் திரு,சோ அவர்களின் மானசீக சீடன்,  அதிமுக தலைமையை சந்தோக்ஷப்படுத்த வெளியேறியவர்களை குப்பை என்றும். உதிர்ந்த ரோமங்கள் என்றும் சொல்லும் போது கழிவுகள் என்று பழ கருப்பையா கூறுவது வினோதமல்ல,  மனக் கழிவுகளை கொட்ட துக்ளக் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல,  துக்ளக்கில் எழுதுபவர்கள் அனைவரும் சோவும் அல்ல,  நல்ல புத்தகங்களில் கூட லேகிய விளம்பரம் விற்கும்; வியாபாரிகள் போலதான் அவர்கள்,  ”இது கழிவுகளின் காலம்” என்ற தலைப்பு முடிந்து மகா சமுத்திரம் வெளிவரும் தங்களின் துக்ளக் பத்திரிக்கையின் கௌரவத்திற்கு ஏற்ற தலைப்பல்ல, 'தங்களை விற்றவர்கள்' என்றாவது வந்திருக்க வேண்டும்,

என்றும் அன்புடன்

 

எஸ்.வி.சேகர்

மயிலை சட்டமன்ற உறுப்பினர் 

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “திரு கருப்பையாவின் கட்டுரைக்கு, திரு எஸ்.வி.சேகரின் பதில்

 • August 21, 2010 at 1:23 pm
  Permalink

  thiru s.v. sekar avargale,

  Vanakkam.

  Naan ‘thugklak’ idhaz arambitha puthia idal irundu vasitukondirukiren.

  Sari, cho patri pesa num iruvarukkum thagudhi illai.

  Thiru paza caruppia avargal ‘thuglak’ nootrandil arumayaga pesinaar.

  Avar sonna karuthu ‘Yarum yogyam illai.

  Koopudavan nermai ana manushan irundha nermai ullavan varuvargal, anal thalai, nermai, nanaiam, kudumbathukku ethadha sothu sethavar oru viabariayi
  Melum, neengalum nallavardhan, adhil sandhegamillai.

  Thiru paza karuppia kettar, ‘oru, oru yogyan irukkana?’ endru.

  Neengal andha sakkadail en vizundhir?

  adhu unmaidhane?

  Neengalum andha listil serndhuvitteergala?

  Pod

  Reply
 • March 27, 2010 at 7:46 am
  Permalink

  pala.karuppiah bascally a man of literatuee;a man of principles and courageous.but all these are previous identifications.i have been surprising and praising his speeches and writings.i was very respectful to him till then he sold his total self respect to tyrant jaya.let his conscience tell whether he sold his knowledge and genuineness to her.it is ridiculous for karuppaiah to coomment on s.v. sekar who have been totally neglected and ignored by jaya for no reasons and actually no other go for him than to join hands with dmk.karuppaiah is to be pitied when we compare his dymamic capablities of the past and today’,s slavery.

  Reply
 • March 26, 2010 at 9:49 pm
  Permalink

  thiru segar thanathu seigayai niyayapaduthiyirukkirar,athai etrukkollamudiyathu,

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 12, 2010 @ 11:28 am