சதுரங்க சாம்பியன்ஷிப் – முதல் கோணல்

இந்த வருடம் ஆனந்த் தன் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பல்கேரியாவைச் சேர்ந்த வெஸெலின் டொபலோவுடன் மோதுகிறார். 23-ம் தேதி தொடங்கவிருந்த போட்டி, அதே நாளிl தொடங்குமா என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

16-ம் தேதி அன்று பல்கேரியா வருவதாக இருந்தார் ஆனந்த். அதற்கு சில நாட்கள் முன்னாலிருந்து அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர் போட்டியின் நிர்வாகத்தினர். இந் நிலையில், 16-ம் தேதி ந்டந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆனந்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் உபயோகித்திலுள்ளன, ஆதலால், ஆனந்த் பல்கேரியா வந்து விட்டார் என்றனர் போட்டி நிர்வாகத்தினர்.

ஆனந்த் தரப்பிடமிருந்து நேற்று அனுப்பப் பட்ட கடிதத்தில், 16-ம் தேதி பல்கேரியா வருவட்ர்ஹாக இருந்த ஆனந்த், Frankfurt-ல் transit-ல் இருப்பதாகவும், ஐஸ்லேண்டில் ஏற்பட்டுள்ள Volcanic eruptions காரணமாக பல்கேரியாவை அடைய முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

விமானத்தில் செல்ல வழி இல்லாத நிலையில்,  ரயிலிலோ, காரிலோ செல்வதே மாற்று வழி. அவ்வாறு சென்றால் 28 மணி நேரத்துக்கு மேல் பயணிக்க வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட பயணத்துக்குப் பின் உடனே விளையாடினால் அது டொபலோவுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆனந்த் தரப்பு நினைக்கிறது. அதனால், போட்டியை 3 நாட்கள் தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. அதனை All India Chess Federation-ம் வழி மொழிந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.

போட்டி பல்கேரியாவில் நடக்க முக்கியக் காரணம், அந் நாட்டின் பிரதமர். அவரே முன் நின்று, பரிசுப் பணத்துக்கு வழி செய்திருப்பதால் ஆட்டம் நடை பெறவிருக்கிறது. அதனால், போட்டியின் துவக்க விழாவிலும், மற்ற விழாக்களிலும் பல அரசியல் தலைவர்கள் பங்கு பெறவிருக்கின்றனர். போட்டி தடங்க சில நாட்களே இருக்கும் நிலையில், அவர்களுடைய appointment-களை மாற்றி அமைப்பது நடக்காத காரியம் என்கிறது பல்கேரியத் தரப்பு.

துவக்க விழாவை நிச்சயம் மாற்ற முடியாது. ஆட்டம் தொடங்கும் நாளையாவது மாற்ற முடியுமா என்று விவாதித்து, 20-ம் தேதிக்குள் சொல்வதாகக் கூறுகிறது பல்கேரியத் தரப்பு.

ஆனந்த் – டொபலோவ் இருவருமே சிறந்த வீரர்கள் என்ற போதும், பல வல்லுனர்கள், “ஆட்டம் ஒழுங்கான முறையில் நடை பெற்றால் ஆனந்த் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு”,  கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்கு நிறைய பின்னணி உண்டு. விளக்கமாய் வேறொரு சமயம் எழுதுகிறேன். சுருக்கமாய் சொன்னால், டொபலோவ் ஜெயிப்பதற்காக அவரது மேனேஜர் டேனியலோவ் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது ஊரறிந்த உண்மை.

1. எப்போதும் தொடர்பில் இருக்கும் ஆனந்த் தரப்பு, போட்டிக்கு சில நாட்களுக்கு முன் ஏன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது?

2. 23-ம் தேதி தொடங்கும் ஆட்டத்துக்கு, இரண்டு நாள் தாமதமாய் வந்தாலும் ஆனந்தால் ஒழுங்காக ஆட முடியாதா?

3. ஆட்டத்தை இரண்டு நாள் தள்ளி வைத்தால் என்ன குடி முழுகிவிடும்?

போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்களில்லை. எப்படியோ ஆட்டம் சுமூகமாய் நடந்தால் சரி.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 19, 2010 @ 2:30 pm