மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா

"அவர்" – திரைப்படத் துவக்க விழாவும், டிஜிட்டல் சினிமா கருத்தரங்கும்

"அவர்" – இயக்குனராக நான் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஒரு கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படம் என்கின்ற பதற்றம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். முதல் காரணம், இணையம் வழியாக நான் பெற்றிருக்கும் உங்களின் நட்பு, அன்பு மற்றும் ஆதரவு. அடுத்த காரணம், சினிமாவை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், கல்வியாக நினைத்து கற்கும் குணம் என்னிடத்தில் எப்போதும் உண்டு. கடைசியாக, மிக மிக முக்கியக் காரணம், தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன். சினிமாவையும் அதன் நவீன தொழில் நுட்பங்களையும் எந்த ஈகோவும் பார்க்காமல் கற்றுத் தெளிவதில் முனைப்பாக இருப்பவர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் Pre-Production, Production மற்றும் Post-Production வரையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசன் இது பற்றிய விழிப்புணர்வை போதுமான அளவு தமிழ் சினிமாத் துறையில் ஏற்கனவே உண்டாக்கி வைத்திருக்கிறார் ஆனாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் முதல் நவீன ஜீனியர்கள் வரை தயங்குகிறார்கள்.  செல்லுலாயிடில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதில் தயக்கம் ஒரு புறம், டிஜிட்டல் பற்றிய முழுத் தெளிவும் இல்லாத குறை இன்னொரு புறம். இந்த இரு காரணங்களால் தமிழ் சினிமா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாவதில் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது.

"அவர்", முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்! திரைப்படம் தொடர்பான டிஜிட்டல் காமிராக்கள் முதல், தியேட்டர்களில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டர்கள் வரை, பல்வேறு வகைகளை பார்த்து சோதித்து உறுதி செய்து பல தகவல்களை திரட்டி இருக்கிறார், தயாரிப்பாளர் திரு. சங்கரநாராயணன்.

அமெரிக்கா மற்றும் சவுதி போன்ற நாடுகளில் ஐடி பொறியாளராக பணியாற்றிய திரு, சங்கரநாராயணன், அடிப்படையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்,  எனவே அவருடனான ஒரு சந்திப்பு உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

பொதுவாக திரைப்படங்களின் துவக்க விழா ஏதாவது சினிமா ஸ்டுடியோக்களில் பூஜையில் துவங்கும். ஆனால் "அவர்" திரைப்படத்தின் துவக்க விழா ஒரு செமினார் அதாவது ஒரு கருத்தரங்கில் துவங்குகிறது. "மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா", இது தான் கருத்தரங்கின் தலைப்பு. நவீன டிஜிட்டல் காமிராக்கள், அவற்றில் உள்ள குறைகள், வசதிகள் தியேட்டர்களில் உள்ள நவீன டிஜிட்டல் புரொக்ஷன் வசதிகள் மற்றும் வகைகள் பற்றி திரு. சங்கரநாரயணன் உங்களுடன் உரையாடுவார்.

டிஜிட்டல் சினிமா எடுக்க எந்த மாதிரி காமிராக்களை பயன்படுத்தலாம்? அவற்றின் வகை என்ன? அவற்றின் திறன் என்ன? அவற்றை வாங்கலாமா? வாடகைக்கு எடுக்கலாமா? வாடகைக்கான செலவு என்ன?

டிஜிட்டல் புரொஜக்டர்கள் எத்தனை வகை உள்ளன? ஒவ்வொரு வகையிலும் எத்தனை தியேட்டர்கள் உள்ள? போன்ற விபரங்களை நீங்கள் "அவர்" படததின் தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன் அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம்.

அன்புடன் வாழ்த்த வாருங்கள் !

இது வரை நாங்கள் கற்றதை, நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைப்பு
"டிஜிட்டல் சினிமாவின் நவீன தொழில் நுட்பம்!"

நாள்
9.5.2010

நேரம்
காலை பத்து மணி முதல் மதியம் 1 வரை!

இடம் 
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை – 87.
வழி வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

வழங்குபவர்
திரு. சங்கர நாராயணன்.

மேலும் விபரங்களுக்கு,
email : r.selvakkumar@gmail.com

மிக மிக எளிதாக, விரைவாக, அதிக செலவின்றி இனி  நிறைய திரைப்படங்களை உருவாக்க முடியும்!  காமிராமேன்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட, எவராக இருந்தாலும் நிறைய கேள்விகளுடன் வாருங்கள். அதை விட நிறைய பதில்களுடன் செல்லுங்கள். திரையுலகின் டிஜிட்டல் புரட்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 6, 2010 @ 2:04 pm