செஸ் வெற்றிக்கு பிறகு : ஆனந்த் – டொபலோவ்

ஆனந்த் ஜெயித்த பிறகு பல்வேறி நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. நம்ம ஊர் மீடியாகாரர்கள் மஹா மொக்கை கேள்விகள் கேட்டுத் தள்ளினர்.  என்னை மிகவும் கவர்ந்தது இந்த நேர்காணல்.  Frank, Relaxed and Fantastic.

நாமெல்லாம் ஆனந்தின் முதல் வெற்றியில் அவர் ராணியை exchange செய்தது master stroke என்று நினைத்திருக்க, அவரோ, முதல் ஆட்டத்தைப் போலவே இரண்டாவது ஆட்டத்திலும் கொஞ்சம் மறதி ஏற்பட்டதால்தான் ராணியை இழக்க நேரிட்டது என்கிறார்.

டொபலோவும் அவர் பங்குக்கு ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று கூறி வருகிறார். கிராம்னிக் தோற்ற போது எவ்வளவு கௌரவமாக நடந்து கொண்டார் என்று இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.

ஆனந்த் அவரது நேர்காணல்களில் எல்லாம் டொபலோவை புகழ்ந்து தள்ளுகிறார். டொபலோவோ, “ஆனந்த் ஜெயிக்கவில்லை. நான்தான் தோற்றேன். ஆனந்த் 9-வது ஆட்டத்தில்தான் வெற்றியை கோட்டை விட்டார். நான் 4 ஆட்டத்தில் வெற்றியை நழுவ விட்டேன். என்னுடைய preparation ஆனந்தை விட சிறப்பாக அமைந்தது. பல ஆட்டங்களில், Opening-க்குப் பிறகு என் நிலை ஆனந்தின் நிலையை விட சிறப்பாக இருந்தது.”, என்றெல்லாம் கூறி வருகிறார்.

இப்படி எதையாவது சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். பாவம்!

இன்றைய நிலையில் சிறந்த செஸ் மென்பொருள் ரிப்கா. அதனுடைய நான்காவது வெர்ஷன் இம் மாதம் 28-ம் தேதிதான் வெளி வருகிறது. ஆனால், டொபலோவுக்கோ அந்த மென்பொருள் போட்டிக்கு முன்பே கிடைத்துவிட்டதாம்.

The story is that the Topalov team had access to four twelve-core machines and eight eight-core systems all connected into a cluster of 112 processors. This awesome hardware was running a cluster version of Rybka 4 that was not available to anyone else.

என்கிறது செஸ்பேஸ் வலைத்தளம்.  இதை எப்படி ஆனந்த் எதிர்கொண்டார்?

இரண்டு நாட்களுக்கு முன் playchess-ல் ஆனந்தின் நேர்காணலில் நிறைய பேசியுள்ளார். இன்று அதன் transcript வெளியாகியுள்ளது. இது வரை வெளி வராத பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனந்தின் வழக்கமான seconds தவிர, கார்ல்சன், கிராம்னிக், காஸ்பரோவ், அனிஷ் கிரி ஆகியோரும் உதவியுள்ளனர்!!!!!

கிராம்னிக் ஆனந்தின் second-ஆக இருக்கக் கூடும் முன்பே சந்தேகமாக இருந்தது.

இவர்களெல்லாம் வலிய வந்து உதவ ஆனந்தின் personality ஒரு காரணம் என்ற போதும், டொபலோவின் மேல் சக ஆட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பும் இன்னொரு முக்கிய காரணம்.

கிட்டத்தட்ட “Best of Comp Vs. Best of Humans” மேட்சாகத்தான் ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் நடந்துள்ளது!

கடைசியில் ஆனந்த் வெற்றி பெற்றாலும் கம்ப்யூட்டர்கள் தோல்வியுற்றன என்று சொல்வதற்கில்லை. After all, the title was decided based on one human blunder!

எனக்கு ஆட்டத்தை விட, ஆட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். Fischer-Spassky, Karpov-Korchnoi, Kramnik-Topalov ஆகியோரின் ஆட்டங்களையும் அதன் பின்னணியில் நடந்த நிகழ்ச்சிகளையும் வைத்துச் சில சுவாரஸ்யமான புத்தகங்களாவது எழுத முடியும். (நம்ம ஊரில் இதையெல்லாம் யார் படிப்பார்கள் என்பது வேறு விஷயம்.)

இன்னும் சில வாரங்களுக்கு இது போன்ற தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வந்து கொண்டிருக்கும். அவ்வப்போது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 19, 2010 @ 12:57 pm