ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்

 

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய  ஸர்வக்ஞ பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின்  75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவத்தை சென்னையிலுள்ள பம்மல் சத்சங்கத்தினர் வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.  03-06-2010 முதல் 13-06-2010 முடிய  11 நாட்கள்  வேத பாராயணம், மஹாருத்ர ஜபம், கணபதி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், நவக்கிரஹஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம்,  ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ அம்ருத தன்வந்திரி ஹோமம்,ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸூவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை, ஆகியவை நடை பெற்றது. இதைத் தவிர சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ ஸ்ரீ தாமோதர தீஷதர் அவர்களால் ஸ்ரீமத் ராமாயண உப்ன்யாசமும் (நவாஹம்) நடைபெற்றது.

பஜனை சம்பிரதாயத்தில் ஸ்ரீ வள்ளி கல்யாணம், நாம சங்கீர்த்தனம் ஆகியவையும் நடை பெற்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 13-06-2010 அன்று, ஸ்ரீ பெரியவாளுக்கு கலச தீர்த்தங்களால் ( மானஸரோவர், ரிஷிகேஷ்,ஹரித்வார்,கங்கை, யமுனை, நர்மதை, சரயூ, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி, காவேரி, தென் பெண்ணை) அபிஷேகமும், மாலை சுமார் 7.00 மணி அளவில் ஸ்வர்ண புஷ்ப பாதபூஜையும் நடைபெற்றது.

பெரும் திரளான பக்த கோடிகள் இந்த வைபவங்களில் கலந்துகொண்டு அருளாசி பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 14, 2010 @ 1:42 pm