விஜய் படங்களின் ஒன் லைனர்கள்

நடிகர் விஜய் சமீபத்திய படங்களில் ஒரே மாதிரியான கெட் அப் மற்றும், கதையமசங்களில் நடிக்கிறார் என்பது பலரது குற்றச்சாட்டு. அப்படி என்ன ஒரே மாதிரி கதையம்சம் என்பதை கடந்த ஐந்தாண்டுகளில் அவருடைய படங்களின் ஒன் லைனரை பார்த்தால் தெளிவாக தெரியும்.

உதயா – தீவிரவாத கும்பலிடமிருந்து தனது கண்டுபிடிப்பையும், நாட்டையும் காப்பாற்றுகிறார்.

கில்லி – வில்லனிடமிருந்து ஒரு அப்பாவி பெண்ணை காப்பாற்றுகிறார்.

மதுர – கலப்பட பொருட்கள் தயாரிப்பவர்களை தண்டித்து மக்களை காப்பாற்றுகிறார்.

திருப்பாச்சி – சென்னையை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்.

சச்சின் – இந்த படத்தில் ஆக்‌ஷன் அதிரடியாக இல்லாமல் காதலை கப்பாற்றுகிறார்.

சிவகாசி – மோசமான அண்ணணின் கொடுமையிலிருந்து தாயையும், தங்கையையும் காப்பாற்றுகிறார்.

ஆதி – தனது குடும்பத்தை அழித்தவனை பழிவாங்கி, காதலியை காப்பாற்றுகிறார்.

போக்கிரி – ரவுடிகளிடமிருந்து சென்னையையும், கமிஷனர் மகளையும் காப்பாற்றுகிறார்.

அழகிய தமிழ் மகன் – காதலியை, தன்னைப்போல இருக்கும் ஒருவனிடமிருந்து காப்பாற்றுகிறார்.

குருவி – அடிமையாய் இருக்கும் தந்தை மற்றும் மக்களை காப்பாற்றுகிறார்.

வில்லு – தேச துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட தந்தையின் மானத்தை காப்பாற்றுகிறார்.

வேட்டைக்காரன் – சிநேகிதியின் மானத்தை காப்பாற்றி, ஊரையும் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்.

சுறா – தனது குப்பத்து மக்கள் குடியிருக்கும் நிலத்தை மந்திரியிடமிருந்து காப்பாற்றித்தருகிறார்.

காவல் காதல் – (வெளியாகவில்லை) பாடிகாட் என்ற மலையாள படத்தின் ரீமேக். கதைப்படி இவர் கதாநாயகியை காப்பாற்றும் பாடிகாடாக வருகிறார்.

இன்னும் ஒரு படம் விஜய் இதே போல் நடித்தால் அப்புறம் இவரை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள். இதை கொஞ்சம் உணர்ந்து தன்னை காப்பாற்றி கொண்டால் அவரது திரையுலக பயணத்திற்கு நல்லது.

தொடர்புடைய படைப்புகள் :

8 thoughts on “விஜய் படங்களின் ஒன் லைனர்கள்

 • July 17, 2015 at 6:54 am
  Permalink

  ungalukkellam vera velaiye illaiya ponga poi pulla kuttingala padikka vainga

  Reply
 • August 11, 2010 at 11:00 pm
  Permalink

  விஜய் பட வசனமும் நிஜமும்

  “நான் ஒரு படம் பண்ணி முடிச்சுட்டா என் படத்தை நானே பாக்க மாட்டேன் ஏன்னா அவ்வளவு மொக்கை”

  ” நான் நடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு பேச மாட்டே,தலையில் அடிச்சுகிட்டே வீடு போயி சேர மாட்டே”

  “எனக்கு நீ லவ் பண்ணுறியா, என் படத்தை விரும்பிப் பார்க்கிறியானுலாம் கவலையில்ல, நாலு காசு நான் சம்பாதிக்கணும், அவ்வளவு தான்”

  Reply
 • August 9, 2010 at 4:45 am
  Permalink

  டாக்டர் விஜய் அவர்களை
  இளைய தளபதி விஜய் அவர்களை
  நாளைய முதல்வர் விஜய் அவர்களை
  பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை
  எல்லாரும் அட்வைஸ் அடுதவனுக்கு சொல்லுவாங்க‌
  இவரு அவருக்கே சொல்லிப்பாரு
  “வாழ்க்க ஒரு வட்டம்
  இதுல ஜெயிக்கிறவன் தோப்பான்” அப்டின்னு
  ஆனா இவரு ஏன் தோத்துகிட்டே இருக்காரு
  நெறைய ஜெயிச்சிட்டாரோ…he he 🙂

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 24, 2010 @ 12:57 pm