3 இடியட்ஸ் தமிழில்
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இதில் விஜய், மாதவன், சிம்பு ஆகியோர் 3 இடியட்ஸாக நடிக்கின்றனர். படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் சூர்யாவுடனும், மாதவன் கமலுடனும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளார். சிம்பு மற்றொரு பிரபல ஹீரோவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. படத்தில் வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கப்போவதாக தெரிகிறது.
தமிழில் 3 முட்டாள்கள் என்று நேரடியாக மொழிமாற்றம் செய்யாமல் புதிதாக யோசித்தால் நன்றாக இருக்கும்.