தேர்தல்!!

கடந்த தேர்தல் முதல்
இத்தேர்தல் வரையிலும்
ஏற்பட்ட கழிவுகளையும்
களைகளையும் களைந்து
சனநாயகத்தைத் தூய்மை படுத்திட
சனநாயகம் அளித்திடும்
அரிய வாய்ப்பு !

சமூக விரோத சக்திகளை
இனம் கண்டு
பாடம் புகட்டிட
மீண்டும்
ஓர் சந்தர்ப்பம்!

சனநாயகக் கடமையாற்றிட
முன் வரவேண்டியவர்கள்
முன் வாராமையால்
நாற்காலிகளே
நாற்காலிகளுக்காக
மோதிக் கொள்கின்றன!

வாக்களிப்போரிலும்
பெரும்பாலோர்
மனசாட்சியை
உறங்க வைத்துவிட்டு
வாக்குச் சாவடிக்குச் செல்வதால்
நாற்காலிகளே-மீண்டும்
நாற்காலிகளை அலங்கரிக்கின்றன !!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 12, 2010 @ 10:47 pm