பீட்ரூட் பொரியல்

தேவையானவை

1. பீட்ரூட் – 2
2. உப்பு- தேவையான அளவு
3. எண்ணெய்- 1 டீஸ்பூன்
4. கடுகு- 1 டீஸ்பூன்
5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
6. மிளகாய்வற்றல்- 3
7.காயம்- சிறிதளவு
8. தேங்காய்த்துருவல்- 3 டீஸ்பூன்

செய்முறை

1. பீட்ரூட்டை அலம்பிக் கொண்டு தோலை அகற்றவும்.

2. அரிப்பில் துருவிக் கொள்ளவும்.

3. தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிசம் செய்து பீட்ரூட்டைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. துருவி இருப்பதால் பீட்ரூட் சீக்கிரம் வெந்துவிடும்.

5. வெந்த பீட்ரூட்டுடன் 3 டீஸ்பூன் தேங்காய்ப்பூவைச் சேர்த்து அலங்கரிக்கவும்.

கூடுதல் டிப்ஸ்

1. பீட்ரூட்டைத் துருவச் சிரமமாக இருக்கும் தோலை அகற்றிய பிறகு மைக்ரோவேவ்வில் ஒரு நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் துருவுவதற்குச் சுலபமாக இருக்கும்.

2. இதே முறையில் கேரட், கோஸ் பொரியலையும் செய்யலாம். கோஸ் சிறிதாக ஆகி விடும் போது பீட்ரூட்,கோஸ் துருவி மேற்கூறிய முறையில் பொரியல் செய்யலாம். பீட்ரூட்டுடன் கேரட்டையும் துருவி இம்முறையில் செய்யலாம்.

3. இனிப்புச்சுவை இருப்பதால் மிளகாய்வற்றலை அதிகமாகப் போடுவது பொரியலிற்குக் காரச்சுவையைத் தரும். மிளகாய் வற்றல் நிறமும் பீட்ரூட் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் உண்ணும் போது மிளகாய்வற்றலை அகற்றி விட்டு உண்ண வசதியாக நீளமாகவே மிளகாய்வற்றலைத் தாளிசம் செய்யலாம்.

4. மலச்சிக்கலை நீக்கும், ரத்தசோகையைப் போக்கும் சக்தி பீட்ரூட்டிற்கு உண்டு.

5. பீட்ரூட் நமது உடலில் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்புச்சத்து கிடையாது.

6.கர்ப்பமான பெண்களுக்குத் தேவையான அதிக சத்துக்கள் பீட்ரூட்டில் இருக்கின்றது.

7.புற்று நோய், பெண்களைத் தாக்கும் மார்புபுற்று நோயை வராமல் காக்கும் வல்லமை பீட்ரூட்டிற்கு இருப்பதால் அனைவரும் ஒதுக்காமல் அடிக்கடி பீட்ரூட்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 22, 2010 @ 6:23 pm