முள்ளங்கி பொரியல்
தேவையானவை
1. முள்ளங்கி- 1
2. உப்பு- தேவையான அளவு
3. எண்ணெய்- 1 டீஸ்பூன்
4. கடுகு- 1 டீஸ்பூன்
5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
7. சாம்பார்பொடி- 1 டீஸ்பூன்
8. கறிவேப்பிலை- 1 இணுக்கு
9. காயம்- 6
செய்முறை
1. முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிசம் செய்து விட்டு முள்ளங்கியையும் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
3. பாதி வெந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு வதக்கவும்.
4. அடிப்பிடிக்காமல் எண்ணெய் விட்டுக் கிளறிக் கொண்டே வரவும்.
5. முள்ளங்கி தயாரானதும் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.
கூடுதல் டிப்ஸ்
1. முள்ளங்கியைக் குழம்பில் போடுவது மட்டுமில்லாமல் இவ்வகையில் பொரியல் செய்தும் நார்ச்சத்தைப் பெறலாம்.
2. முள்ளங்கியை நறுக்காமல் துருவிக் கொண்டு இதே முறையில் பொரியல் செய்து கொள்ளலாம்.
3. துருவிச் செய்யும் முள்ளங்கி பொரியலில் சாம்பார் பொடி காரத்திற்குச் சேர்ப்பதற்குப் பதில் மிளகாய்வற்றலைத் தாளிக்கும் போது சேர்த்து துருவினதைப் போட்டு வதக்கி பொரியலை இறக்கும் முன் தேங்காய்த்துருவலை இட்டும் செய்யலாம். மிளகாய் வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாயைச் சேர்த்தும் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.
Beetroot poriyal tips add value…Good!
i try this method,good taste