இதயங்களைத் தொட்ட இதய நாயகன்

ரசிகர்களின் இதயங்களைத் தொட்ட ‘இதய’ நாயகன் முரளி மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது வயது 47. அன்னாரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
 
1984ல் ‘பூவிலங்கு’ திரைப்படத்தில் அறிமுகமாகி ‘பகல் நிலவு’ ‘கீதாஞ்சலி’ போன்ற பல படங்களில் நடித்து 80களின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். ‘புதுவசந்தம்’ நட்பிற்குப் புது இலக்கணம் வகுத்தது. ‘இதயம்’ காதலுக்கு மரியாதையைத் தந்தது. ‘வெற்றி கொடி கட்டு’ வெளி நாட்டு மோகம் கொண்டு அலைபவர்களை நல்வழிப்படுத்தியது. ‘தேசிய கீதம்’ தேசப்பற்றை ஊட்டியது. திரைப்படங்களில் அன்று முதல் இன்று வரை கல்லூரிக்குச் சென்று வரும் பாத்திரத்தில் நடித்த பெருமைக்குரியவர்.

தன் படங்களில் தானே நாயகனாகத் திகழ்ந்தவர்.அடிப்படையில் கன்னடத்துக்காரராக இருந்தாலும் தமிழீனத்துக்காரராகப் போராட்டங்களில் கலந்து கொண்டு தன் தமிழ்ப்பற்றையும் தமிழர்கள் மேல் வைத்துள்ள பாசத்தையும் பறை சாற்றியவர். சமீபத்தில் தான் முரளி தன் மகன் அதர்வாவை ‘பாணா காத்தாடி ஆரம்பம்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.  சமீபத்தில் தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடந்த கால சில கசப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து தன் மகனுக்கும் தனக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் வழங்கச் சொன்னார்.

பண்பான, அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடியவருமான இவர் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் மதித்து நடந்தவர். அமைதியாகவும் அட்டகாசமாகவும் வெவ்வேறு கோணங்களில் நடிப்புப் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தவர். இவரது பெரும்பாலான படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ ஆபாசங்களோ ஹீரோயிசப் பூச்சுக்களோ இருக்காது. குடும்பத்துடன் இவரது படங்களை ரசிக்கும் அளவிற்கு நாகரிகமான முறையில் நடித்தவர். இவரது மறைவினால் தவிக்கும் இவரது மனைவி ஷோபா, அதர்வா, மகள் காவ்யா மற்றும் அவரது குடும்பம் & திரைக்குடும்பத்திற்கும் தமிழோவியம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவரின் இதயம் கவர்ந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக் கொள்வோம்.

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “இதயங்களைத் தொட்ட இதய நாயகன்

 • September 24, 2010 at 12:58 pm
  Permalink

  manathai thotta nayagar murali sir –
  avar uyir pirintha seythi theyreentha udan kankaleel neer varukeerathu athirchi seythi yaga irunthathu
  aanal innum murali sir saaga villai aayiram alla koadi alla atharkum mael patta uyir kaleen ithayankaleel vaalkirar –
  avar entrum aleeyatha manithar avar paarkavaeyntum entral avar padam paarthal poathum yaarum kalanga vaeyntaam innum namudan than irukirar

  By

  purachi nayagar murali sir in
  unami raseegam

  mohideen

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 9, 2010 @ 10:17 am