“சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில் "சொல் புதிது" இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன்,ஓஷ் இராமலிங்கம், அண்ணாமலை பாஸ்கர், இலங்கை வேந்தன், சிவாஜி, முத்துக்குமரன், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர்.
கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா
வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் வழங்குகிறார் ஒரிய கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு ஸ்ட்ராஸ்பூர் நகரசபைத் தலைவர் துணை மேயர் தனியல் பயோ தலைமை தாங்கிடவும் சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் கவிஞர்,கலை விமர்சகர்,மொழிபெயர்ப் பாளருமான எழுத்தாளர் கவிஞர் இந்திரன் ஸ்ட்ராஸ்பூர் அருட்தந்தை மறைதிரு.ழெரார், திருமதி குரோ, திருமதி மனெ, திருவாளர்கள் தெபல் சவியெ, குப்தா ஆகியோர் பங்கேற்கவும் உள்ளனர்.
அறமும் தமிழும்…
தமிழ் கூறும் நல்லுலகம் தலைப்பிலான அரங்கிற்கு இலண்டன் பதிப்பாளர் பத்மனாப அய்யர் தலைமை தாங்க, ஓவியக்கலைஞர் ஏ.வி.இளங்கோ அவர்கள் முன்னிலையில் அறமும் தமிழும் என்ற தலைப்பில் தளிஞ்சான் முருகையன், காதலும் தமிழும் என்ற தலைப்பில் புலவர் பொன்னரசு,கலையும் தமிழும் என்ற தலைப்பில் திருமதி லூசியா லெபோ, அவர்களும்,பொருளும் தமிழும் என்று புலவர் பாலகிருஷ்ணன், தருக்கமும் தமிழும் என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரும் உரையாற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர் இந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பட்டிமன்றம்…
தொடர்ந்து பட்டிமன்றம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் நடைபெறுகிறது. "கோவலன் தலை சிறந்தவனே" என்ற அணியின் சார்பில் பாரீஸ் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி ஜெயராமன்,ஸ்ட்ராஸ்பூர் கியோம் துமோன்,பாரீஸ்அறிவழகன் ஆகியோரும்,
"கோவலன் நிலை இழிந்தவனே" என்ற அணியின் சார்பில் பாரீஸ் கவிதாயினி பூங்குழலி பெருமாள் அவர்களும்,ஸ்ட்ராஸ்பூர் திருமதி இராஜ்ராஜேஸ்வரி பரிஸ்ஸோ அவர்களும், திருமதி உஷாதேவி நடராசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இறுதியாக தமிழ்ச் சோலை சிறார்களின் நடனமும் மெல்லிசை விருந்தும் நிகழவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நாகரத்தினம் கிருஷ்ணா(03 88 32 83 93),கிருபானந்தன்(03 88 81 65 61), பொன்னம்பலம் வடிவேலு (03 88 79 08 36) ஆகியோரை அடைப்புக்குறிக்குள் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு நிகழ்வின் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இப்படி பட்டிமன்றம் நடத்திதான் தமிழ்னாடூ உருப்படாமல் போயிற்று அதே வழியில் நீங்களுமா?