காமன்வெல்த் போட்டியை நடத்தி இந்தியாவின் சாதனை
12 நாட்களாக நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டன. போட்டிகள் ஒழுங்காக நடக்குமா? அவற்றை நடத்த இந்தியாவிற்குத் திறமை இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. காமன்வெல்த் போட்டிக் குழுவின் தலைவர் மைக்கேல் பென்னர் தடகளப் போட்டிகள் நடத்திய விதத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து இருக்கிறார். சில மைதானங்கள் மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டி இருக்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நன்றாக இருந்ததாகவும், அதேபோல் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருந்ததாகவும் கூறி இருக்கிறார். அதேபோன்று சுரேஷ் கல்மாடியும் போட்டிகள் மிக நன்றாக நடந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
சுமார் 7000 பேர் தங்கி இருந்த காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜிலிருந்து இதுவரை ஒரு புகாரும் வரவில்லை என்று காமன்வெல்த் விளையாட்டுகளின் செக்ரட்டரி-ஜெனரல் பெருமையுடன் கூறுகிறார். எப்படியோ பல புகார்களுக்கிடையே சிக்கித் தவித்த காமன்வெல்த் விளையாட்டுக்கள் நல்லபடியாக முடிந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
மும்பை பாணியில் தாக்குதல் நடத்தி விளையாட்டுப் போட்டிகளை சீர்குலைக்க நினைத்த அல்கொய்தாவின் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளன.
அடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளையும் நடத்த நமது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கொசுறுச் செய்தி : ஆஸ்த்திரேலியா இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்றதனால் வெகுண்ட ஆஸ்த்திரேலிய தடகள வீரர்கள் தங்கள் அறைகளில் உள்ள பொருட்களையெல்லாம் உடைத்து நொரறுக்கி இருக்கிறார்கள். சலவை செய்யும் இயந்தரங்களை தூக்கியெறிந்து இருக்கிறார்கள்.