எடியூரப்பாவின் வெற்றி

பொதுவாக எந்த ஆட்சிக்கும் சோதனைகள் வரும். அதை மிக சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியது இருக்கும். எதிர்க் கட்சிகளை சமாளித்து வெற்றி காண்பது எந்த ஒரு முதல் அமைச்சருக்கும் ஒரு பெரிய சவால். ஆனால் கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா எதிர்க் கட்சிகளைத் தவிர அதனுடன் சேர்ந்து கொண்டு ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட ஆளுனரையும் சமாளித்து வெற்றி கண்டிருக்கிறார்.

அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார் முதல்வர்.  அதில் அதிருப்தியடைந்த 11 பி.ஜெ.பி சட்ட மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவு அளித்து வந்த 5 சுயேச்சை உறுப்பினர்கள் ஆட்சிக்கு எதிராகச் செயல்படத் துவங்கினர்.  ஆளுனரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கடிதம் அளித்தனர். உடனே ஆளுனர் முதலமைச்சரை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு பணித்தார்.

இவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் 16 பேரையும் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார். ஓட்டெடுப்பின்போது கலந்து கொள்ள முடியாதவாறு செய்தார்.  உடனே பார்த்தார் ஆளுனர். உடனே சபாநாயகருக்கு அவர்களைப் பதவி நீக்கம் செய்யாமல் ஓட்டெடுப்பு எடுக்க வேண்டுமென்று கடிதம் எழுதினார்.  ஆளுனருக்கு இவ்வாறு பணிக்க சட்டத்தில் இடமில்லை.  இருந்தும் எழுதினார். ஆனால் தன்னுடைய அதிகாரத்தில் ஆளுனர் தலையிடுவதாகக் கூறி அவர்களைப் பதிவி நீக்கம் செய்து வாக்கெடுப்பு நடத்தினார்.  சட்டசபையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன,  இந்தக் கூச்சல், குழப்பத்திற்கு நடுவே குரல் வாக்கெடுப்பின் மூலம் எடுயூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆளுனர் உடனே மத்திய அரசுக்கு வாக்கெடுப்பு சரியாக நடைபெறவில்லையென்று கடிதம் எழுதி ஆட்சியைக் கலைக்க சிபாரிசு செய்தார்.  ஆனால் மத்திய அரசு அதற்கு சம்மாதிக்காமல் போகவே மறுபடியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று முதல்வரைப் பணித்தார் ஆளுனர். இதுவரையில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிகழ்வாக இரண்டாவது முறை வாக்கெடுப்பு நடைபெற்றது.  அதிலும் எடியூரப்ப வெற்றி பெற்றார்.

பதவி பறிக்கப்பட்ட 16 சட்ட மன்ற உறுப்பினர்களும் உயர் நீதி மன்றத்தை அணுகி தங்களை பதவி நீககம் செய்தது செல்லாது என்று வழக்குத் தொடுத்தனர்.   இதை இரண்டு நீதிபதிகள் கொண்ட பென்ச் விசாரணை செய்தது.  இதில் ஒரு நீதிபதி திரு. குமார் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்றும், தலைமை நீதிபதியான திரு. ஹேஹர் பதவி நீக்கம் செய்தது செல்லும் என்றும் தீர்ப்பளித்தார்.

மறுபடியும் குழப்பம். இறுதித் தீர்ப்பு மூன்றாவது நீதிபதியான திரு. சஹாஹித்திடம் சென்றது.  29-10-2010 அன்று மூன்றாவதி நீதிபதி பதவி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்புக் கூறியிருக்கிறார். இத் தீர்ப்பின்மூலம் எடியூரப்பா மறுபடியும் வெற்றி பெற்று இருக்கிறார். ஆளும் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் மாஜி முதல்வர் குமாரசாமி போன்றவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு ஒரு பாடம். எதிர்க் கட்சியான காங்கிரசுக்கும் ஒரு நல்ல படிப்பினை.

இன்னும் சுயேச்சை உறுப்பினர்கன 5 பேரின் பதவி நீக்கம்  செல்லுமா அல்லது செல்லாதா என்ற கேள்விக்கு விடை எதுவும் கிடைக்க வில்லை. வாதப், பிரதிவாதங்கள் இன்னும் தொடங்கவில்லை.

இன்னும் வேடிக்கை பார்ப்போம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 29, 2010 @ 3:56 pm