இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம்.  இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன்.  இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் கணக்கற்ற மாணவர்கள் தேர்வாகிறார்கள்.  அவர்களுக்கு ஆரம்பமே ஐந்திலக்க சம்பளம்.  இரண்டாவது வருடமே அயல் நாட்டில் வேலை.  நிலைமை அப்படி இருக்க நான் எப்படி மாணவர்களை இப்படிக் குறைத்து மதிப்பிடலாம் என்று நீங்கள் கேட்கலாம்.  விளக்குகிறேன்.

மாணவர்கள் பட்டம் பெறும் வேகத்தையும் எண்ணிக்கையையும் பார்த்தால், இந்த நேரம் இந்தியா ஐ.டி துறையில் வல்லரசாகி இருக்க வேண்டும்.  ஆனால், அந்நிய செலாவணி கிடைத்தாலும் இந்தியாவிடம் இருந்து குறிப்பிடும்படி எந்த ஒரு மென்பொருளும் உற்பத்தியாகவில்லை என்ற உண்மையை உணருங்கள்.

வன்மென் பொருள்கள் எல்லாம் உருவாக்கப்படுவது அயல்நாடுகளில்தான் (பெரும்பாலும் அமெரிக்கா).  அவை அங்கேயே மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு விடுகின்றன (விதிவிலக்குகள் உண்டு).  அதைப் பயன்படுத்தி பரவலான பயன்பாட்டிற்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை (உதா: வெப் அப்ளிகேஷன்ஸ்) உருவாக்கத்தான் நாம் பயன்படுத்தப்படுகிறோம்.  இவற்றை உருவாக்க சராசரி அறிவே போதும்.

இதனால்தான் நாம் கொத்தடிமைகள்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஜெயிலிற்கும், ஐ.டி துறைக்கும் அதிக வித்தியாசமில்லை.

ஜெயிலில் காலை நேரத்தில் ஒரு வண்டி வரும்.  கைதிகள் தொலை தூரத்திற்கு அழைத்துச் செல்லப் படுவார்கள்.  அங்கே கல் உடைப்பது போன்ற பணியைச் செய்ய வேண்டியிருக்கும்.  பின் மீண்டும் ஜெயிலிற்கு அழைத்து வந்து விடப்படுவார்கள்.  இதுதானே ஐ.டியிலும் நடக்கிறது.  

காலை ஆறு மணிக்கெல்லாம் கம்பெனி பஸ் வந்து விடுகிறது.  முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கம்பெனிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.  கல்லை உடைப்பது போல கீ-போர்டைத் தட்ட வேண்டியிருக்கிறது.  கைதிகளாவது சாயங்காலமே திரும்பிவிடுகிறார்கள்.  நாம் அர்த்த ராத்திரியில்தானே வீடு திரும்புகிறோம்.

(கண்ணாயிரம் கூட தப்பித்து விடுவார்.  நம்மால் முடியுமா?)

ஆனால் கிடைக்கும் கவர்ச்சிகரமான சம்பளத்தினால் இந்த உண்மையை உணர மறுக்கிறோம்.

இதைவிடக் கொடுமை, அயல்நாட்டவரின் பகல் பொழுதிற்கு ஏற்ப, இங்கே நாம் அதிகாலையிலோ இரவு முழுதுமோ கம்பெனியில் செகண்ட்-ஷோ ஓட்ட வேண்டியிருக்கிறது.  

உடல் நலத்தைக் கெடுத்து, ஆரோக்கியத்தை இழந்து பெறும் சம்பளத்தினால் என்ன பயன்?  மருத்துவ ஆற்றிலேயே அது அடித்துச் செல்லப்படும்.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இன்றைய மாணவர்களிடம் இருக்கும் திறமையின்மை.  

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்.  இந்த வாசகமே தவறு.  இங்கே சொல்லப்பட்டிருப்பது கல்வி அல்ல. படிப்பு.  இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணினியை கற்கத் தொடங்கிய நாங்கள் அதை கல்வியாகக் கற்றோம்.  பின்னாளில் கிடைக்கப் போகும் வேலையைப் பற்றியோ, சம்பளம் பற்றியோ சிறிதளவும் எண்ணமின்றி கணினி மொழிகளின் மேல் காதல் கொண்டு கற்றோம்.   நான்-செமெஸ்டரில் படித்ததால், ஒவ்வொரு கணினி மொழிகளையும் படிப்படியாக கற்று, வருடம் முழுதும் அதன் ஆணிவேர்களை தீவரமாக அலசியதில் மிகச்சிறந்த ஆளுமை எங்களுக்குக் கிடைத்தது.

நான் என் நண்பர்களுடன் இணைத்து வடிவமைத்த ஒரு ப்ராஜெக்ட், மைக்ரோ-சாஃப்ட்டையே அசர அடித்திருக்கிறது (பெருமைக்காகச் சொல்லவில்லை).

ஆனால், இன்றைய மாணவர்கள் கணினியை சம்பளம் பெற்றுத்தரும் ஒரு படிப்பாகத்தான் பார்க்கிறார்கள்.  செமெஸ்டர் சிஸ்டத்தில் அவசர அவசரமாகப் படிக்கிறார்கள்.  கணினி மொழிகளையும் தியரியைப் போல மனப்பாடம் செய்கிறார்கள். விளைவு…

கடந்த இரண்டாண்டுகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நான் வைத்த சுலபமான ப்ரோக்கிராமிங் டெஸ்டில் ஒருவர் கூட தேறவில்லை.  இதுதான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் பட்ட வேதனைக்கான காரணம்.

இந்திய நேரப்படி அயல்நாட்டினர் உழைக்கும் நாட்களை நான் கனவு காண்கிறேன்.  அதற்கு இந்தத் துறையில் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.  அடுத்த தலைமுறை வன்மென் பொருள்களை நாம் உருவாக்க வேண்டும்.

அந்தக் கனவுகளோடு, இலக்குகளோடு மாணவர்கள் கல்வியைக் கற்கவில்லையென்றால் மீண்டும் ஒரு முறை இந்தியா அடிமைப்படும்… 

கணினியால், கணினியில்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

 • November 12, 2010 at 5:05 pm
  Permalink

  Dear Raghu

  It’s good that you are brave enough to share this thought.

  One important point to note is, this kind of advertisements are there from the time I was in school in 90’s. Remember the company that gave discounts to computer courses based on 10th and 12th marks? And the companies that provided guarantee for job placements if you joined their courses?

  This apart, all top tier IT companies in India did not need brilliant programmers. They wanted people who can do simple things and paid more money for that job. So they hired people who had good academic record till college and put them onto maintenance, testing and support projects. These projects are low risk high margin projects. The financial performance of these companies are the clear proof.

  So those college students who learnt that mere knowledge of programming languages are enough to get a cushy job did not strive to attain mastery over a particular technology or language.

  I am not talking about everyone that works for the big IT companies. I am taking about those who chose this route.

  So this is just not entirely students fault.

  This said, I agree with what you wrote in this article. But in order for India to become a software super power, we need to have companies that make software products, not just providing s/w services.

  How many of us want to become entrepreneurs (and CEOs 🙂 ).

  Reply
 • November 11, 2010 at 7:13 am
  Permalink

  யாராவது ஒரு கருத்தை வெளியிட்டால் நீ என்ன செய்து கிழித்தாய் என்று கேட்பது இணையத்தில் ஒரு வியாதி. இப்படிக் கேட்பதால் எழுதுபவன் நிறுத்தி விடுவான். நல்ல கருத்துக்களின் வரவு குறையும். இப்படியான லூசுக் கேள்விகளை வடிகட்டிக் கொண்டிருப்பதால்தான் அச்சூடகங்கள் ஓரளவு மக்களுக்கு பயன் தரும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. மொக்கைகளை படித்து மகிழ்வதே தமிழ் இணையத்தின் தலையெழுத்து. அதற்கு மேல் வளராது.

  Reply
 • November 4, 2010 at 11:31 am
  Permalink

  I agree 100%.But…Who is going to tie the bell to the cat? and when? Already it’s getting late.But Mr.Kanchi Raghuram,What is your plan and where are you now.Just worrying will not help us.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 7:13 pm