கூட்டணி தர்மம்

மஹாராஷ்டிர முதல்வர் அஷோக் சவான் மீது ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் எழுந்துள்ள ஊழல் புகாரை அடுத்து அவர் ராஜினாமாச் செய்துல்ளார்.  அங்கு கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மூன்று குடியிருப்புக்கள் முதல் அமைச்சரின் உறவினர்களுக்கு ஒதுக்கப் பட்டதைத் தொடர்ந்து ஊழல் புகார்கல் வரத் தொடங்கின.  இப்புகார்களை அடுத்து முதல் அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமாச் செய்துள்ளார்.  அவர் ராஜினாமாவும் ஏற்கப் படுள்ளது.

ராணுவ அமைச்சர் அந்தோனி C.B.I யிடம் முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்.

அதேபோன்று காமன்வெல்த் விளையாட்டு சம்மந்தமாக எழுந்துள்ள முறைகேடுகளால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் நாடாளுமன்ற கமிட்டியின் காரியதரிசிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் சுமார் 1,70,000 லட்சம் கோடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தி.மு.க. அமைச்சர் ராசாவின் ராஜினாமாவைப் பிரதமர் கோரவில்லை.

இதுதான் கூட்டணி தர்மமோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 10, 2010 @ 8:00 pm