திருந்தவேண்டிய ஜெயலலிதா
புத்தாண்டில் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பியுள்ளார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அரசின் செயல்பாட்டை குறை கூறி பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயலலிதா சபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து சபைக்குள் நுழைந்தார். இந்நேரத்தில் நத்தம் விஸ்வநாதனின் இடைத்தேர்தல் தொடர்பான பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார். 9 நிமிடத்தில் எழுந்த ஜெ., இடைத்தேர்தலில் ஆளும்கட்சி செய்த வித்தைகளை அவைக்குறிப்பில் இருந்து வேண்டுமானால் நீக்கலாம் ஆனால் அது மக்களுக்கு தெரியும் என்று கூறியபடி உடனே சபையை விட்டு வெளியேறினார்.
இந்த செய்தியை படிக்கும் போது ஜெயலலிதா வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்க்காக தன் வந்துள்ளார் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைவர்கள் இருவருமே ஒரு மனநிலை கொண்டவர்கள் தான்.. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருமே முதவராக இருந்தால் மட்டுமே சட்ட சபைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சட்டசபைக்கு போய் பேசாமல் இருப்பது சரி இல்லை. பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக சபை கூடும் நாட்களில் எல்லாம் சட்டசபைக்கு போய் மக்கள் பிரச்சனைகள் மற்றும் அரசின் தவறுகளையும் பற்றி பட்டியலிட்டு பேச வேண்டும், விவாதிக்க வேண்டும். அதை செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து ஒட்டு கேட்டால் யார் ஓட்டு போடுவார்கள்.
ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு பணநாயக அரசியல் செய்ய தி.மு.க விழைகிறது என்று ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சிகள் அனைத்தும் வெறும் கூச்சலிட்டு பயனில்லை. இவர்கள் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை – இதற்கு தி.மு.கவிற்கே ஓட்டு போடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்துவிட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தால் தி.மு.க வின் தவறுகளைப் பற்றி பட்டியல் போடுவதை நிறுத்திவிட்டு தனது தவறுகளை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். மக்கள் பிரதிநிதியாக – ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக ஜெயலலிதா இனியாவது நடந்து கொள்ள வேண்டும். அதற்கு முதல் படியாக இனியாவது அவர் சட்டமன்றத்திற்கு அடிக்கடி வரும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.. மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசவேண்டும் – அதற்கு ஓரளவிற்காவது தீர்வு காண முற்படவேண்டும்.. இல்லையென்றால் அ.தி.மு.க என்று ஒரு கட்சி இருந்தது என்று வருங்கால சந்ததி பேசும்படி நேரலாம்…
என் தொழில் படைப்பது அல்ல. இடிப்பதுவே. 1) புதிய சட்ட மன்றக் கட்டிடம் 2) அண்ணா நூற்றாண்டு நூல் நிலையம், 3) ஓட்டை பேருந்துகளையும் தட்டி, கொட்டி, கொள்ளைக் கட்டணம் வசூலிப்பது, 4) பால் வியாபாரிகள் எங்கள் கட்சியை தேர்தலில் கவனித்ததால், பால் விலை ஏற்றம்,(என் கட்சிக்காரர்களுக்குத்தான் மாடு ஆடு இலவசமாக் கொடுத்தாகி விட்டேனே!)என்னை சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்க வைத்ததற்குப் பழிக்குப்பழியாக உங்கள் அனைவரையும் உள்ளே தள்ள வழி வகுத்து விட்டேனா இல்லையா? நன்றி மறக்காத ஓ.ப்.எஸ்.ஸுக்கு விரைவில் நிரந்தர (Acting) முதல்வர் பதவி (என்னை குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்தால்!)
அடுத்து, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சென்னை பொருட்காட்சிகூடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, எனது உடன்பிறவா தோழி சசிக்கு அங்கே ஒரு சிலையை விரைவில் எதிர்பாருங்கள். எத்தனை மணி நேரம் நான் இரவு பகலாகக் கண்முழித்து ஒருநாளைக்கு 28 மணிநேரம் உழைப்பது உங்களுக்காகவே!
நான் கொடுக்கும் இந்த கசப்பு மருந்து இன்னும் நாலரை ஆண்டுகளில் (நீங்கள் எல்லாம் நல்ல எருமை மாடுகள்தான் என்று எனக்குத்ஹ்தெரியும்!), பழகி சுவையாகி விடும். பின்பு உங்கள் வாரிசுகளும் என்னைத்தான் வாழ்த்துவார்கள் என்று நம்புகிறேன்.