சுஜாதா எனும் தீர்கதரிசி

 

2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுதியுள்ளார். சில விஷயங்கள் அவர் நையாண்டியாக சொன்னாலும் இன்றைய நிலையும் அதுவே.


 

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.

புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்

– செல் போன்கள் இரட்டிப்பாகும்

– மக்கள் தொகை 118 கோடியாகும்

– போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம்

– சில வியாதிகள் வெல்லப்படும்

– எய்ட்ஸ் தடுப்பு கண்டுபிடிக்கப்படலாம்

– பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்

– ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்

– ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்

– ராகுல் பிரதமர் ஆவார்

– தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.

– பாட்டே இல்லாத ஒரு தமிழ்ப் படம் வரும்.

 

– இர்ஃபான் பதான் அல்லது கைஃப் கேப்டனாக வருவார்.

– டெண்டுல்கள், டிராவிட், சேவாக் யாரும் ஆட மாட்டார்கள்.

– டால்மியாதான் கிரிக்கெட் சேர்மேனாக இருப்பார்.

– லாலுதான் பீகார் முதல்வராக இருப்பார்.

– சானியா மிர்ஸா விம்பிள்டன் அரையிறுதிக்கு வருவார், அல்லது கல்யாணம் செய்து கொள்வார்.

– தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள்

– சென்செக்ஸ் (பங்குச் சந்தை) பத்தாயிரத்தைத் தாண்டும்

– அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும்.

– கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்

– வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்

– செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும், இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.

– தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.

– அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்

– மற்றொரு சுனாமி வரும்; ஒரு கடலோர நகரம் அழியும்.

 

– முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்

– புத்தகங்கள் குறையும்.

– மருத்துவமனைகளில் இடம் போதாது…

 

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.

– நன்றி : விகடனின் கற்றதும் பெற்றதும்.

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “சுஜாதா எனும் தீர்கதரிசி

 • January 27, 2011 at 4:37 am
  Permalink

  சுஜாதா ஒரு , தமிழ் நாட்டின் ஐசக் அஸிமோ,

  இவர் பாஜையில்லேயே சொன்ன ஐசக்கின் குளொனிக்னு கூட சொல்லாம்.

  அவரும் ரோபோ , இவரும் ரோபோ பற்றி மிகவும் எழுதியுள்ளார்,

  அவருக்கும் மதங்களை பற்றி எழுத பிடிக்கும , ஆனால் சில கட்டுப்பாடுகளுடன்,

  அவரும் தன் ஏழுவது வயது வரைக்கும் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தார்.

  அவர் கதையும் திரைபடமாகியது..

  அவரும் , இவரும் சமுதாயத்திற்காக தங்கள் பேனாவை தீட்டியுள்ளார்கள்

  நாம் உலகத்தின் மறு பக்க மனிதர்கள் என கதை கூட எழுத லாம்.

  நன்றி

  வணக்கம்

  Reply
 • January 20, 2011 at 5:50 am
  Permalink

  He is one of the examble person for students .

  Reply
 • December 1, 2010 at 7:07 am
  Permalink

  அரிய பொக்கிஷம் நம்மை விட்டு போய்விட்டது !

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 19, 2010 @ 10:19 pm