மன்மதன் அம்பு கதை என்ன ?
எதிர்பார்ப்புகளைக் கிளறி இருக்கும் மன்மதன் அம்பு படம் முழுநீள நகைச்சுவை விருந்தாகத் தயாராகி இருக்கிறதாம். கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் கமல் மாதவன் திரிஷா என்று நட்சத்திரப் பட்டாளத்தோடு திரையை அதிரவைக்க வரும் படத்தின் கதை அரசல்புரசலாக வெளியாகி இருக்கிறது.
கோபால் (மாதவன்) அம்புஜத்தை (திரிஷா) உயிருக்குயிராகக் காதலிக்கிறான். ஆனால் அம்புஜத்தின் விருப்பம் தெரியாமல் எப்படி காதலில் முன்னேறுவது? அதைத் தெரிந்துகொள்ள ப்ரைவேட் டிடெக்டிவ் (கமலஹாசன்) ஒருவரை நியமிக்கிறான். அந்த ப்ரைவேட் டிடெக்டிவ், அம்புஜத்தை பின்தொடர்ந்து தகவல் சேகரிக்க, அவள் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடக்கும் கப்பலுக்குள்ளும் செல்கிறான்.
கப்பலுக்குள் அம்புஜத்துக்கும் டிடெக்டிவ்க்கும் நட்பு மலர, அதை கவனிக்கும் சங்கீதா (டிடெக்டிவின் காதலி) சந்தேகவசப்பட, குழப்பம், தகராறு மற்றும் சுபம்.
படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் எதிர்பாராத நேரத்தில் வந்து அசத்துவாராம்.
காருண்யம், யாவரும் கேளிர் என்றெல்லாம் பெயர் வைக்கப்பட்டிருந்து, இப்போது கூடியவிரைவில் திரைக்கு பெருத்த எதிர்பார்ப்புடன் வரப்போகிறது மன்மதன் அம்பு!
மன்மதன் அம்பு படம் 2005 இல் வெளிவந்த Hitch என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். வில் ஸ்மித் நடித்த படம் மிக, மிக சுமாரான வெற்றியைப் பெற்றது. வசனத்தை கிரேசி மோகன் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க வாய்ப்பு உண்டு. ம்ஹும்…அதுவும் கமல் என்பதால் இது இன்னுமொரு மும்பை எக்ஸ்ப்ரெஸ் ஆகும் வாய்ப்பிருக்கிறது.
//பெருத்த எதிர்பார்ப்புடன் /// :-)))))))))))))