கருணாநிதியும் வெங்காயமும்

 

ஜெயா டிவியில் ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் தொடர் பேட்டிகள். சோ பேட்டிதான் பிள்ளையார் சுழி. துக்ளக் தலையங்கத்தில் இருக்கும் காரம் பேட்டியில் மிஸ்ஸிங்.சூடான விஷயமென்றாலும் சுரத்தே இல்லை. பாஜகவினரை பேசவிட்டால் திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை கண்டித்துப் பேச வந்து விடுகிறார்கள். சுப்ரமணிய சுவாமியோ திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை பாராட்ட ஆரம்பித்துவிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிபார்க்கிறார்கள். திமுகவை கண்டபடிதிட்டி, காங்கிரஸ் மேல் உச்சு கொட்ட சோ மட்டுமே இருககிறார். ஆகவே இப்போதைக்கு உற்சவமூர்த்தி சோ மட்டுமே. 

வெங்காயம் 80 ரூபாயிலிருந்து 60 ரூபாய் குறைந்தது சச்சினின் அரை செஞ்சுரி செஞ்சுரியை விட அதிகமாக கொண்டாடப்பட்டது. கலைஞர் ஆட்சி எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் குறைந்தது என்று கலைஞர் டிவி, இன்னொரு ஜெயா டிவி என்பதை நிரூபித்தது. ஹெட்லைன்ஸ் டூடே இதுபோன்ற வுட்டலாக்கடியையெல்லாம் இடது கையால் தள்ளிவிட்டு காமிராவோடு குடோன் குடோனாக அலைகிறது. வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள், கடையின் பெயர், போன் நம்பர், லெக்கேஷன் சகிதம் சரத்பவாருக்கு பகிரங்க கோரிக்கை வைக்கிறார்கள். சரத்பவார் ராஜினாமா செய்வாரா, பிரதமர் பவாருடன் பேசுவாரா, அதனால் மகராஷ்டிரா அரசியலில் பாதிப்பு இருக்குமா.. என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை விசிறியடித்து எங்கேயோ போகிறார்கள். இதெல்லாம் நடக்காது என்பது மட்டும் சர்வ நிச்சயம். ஆனாலும் உருப்படியான டைம் பாஸ்.

ஏஷியாநெட்டில் எதோ ஒரு திலீப் படம். ஆங்கிலத்தில் ஆரம்பித்து இந்தியில் மூச்சிவிடாமல் வசனம் பேசி முடிக்கிறார். உன்னை மாதிரி பிரமாதமாய் இந்தியில் பேசி காட்டுகிறேன் என்று சவால் விடும் வில்லனை, பிரகாஷ் ராஜ் தமிழில் கிண்டலடிக்கிறார். ஆங்கிலம் தெரியாத இரு தமிழ் பெரிசுகள் படும் அவமானம்தான் அடுத்தடுத்து காட்சிகளாக விரிகிறது. கண்ணைப் பறிக்கும் ரோஸ், மஞ்சள் கலரில் காஸ்ட்யூம். சம்பந்தமேயில்லாமல் தமிழ்நாட்டை வம்புக்கு இழுத்து கிண்டலடிக்கிறார்கள். இன்னொரு தென்காசிப்பட்டடணத்திற்கு முயற்சி செய்து பரிதாபமான தோல்வி. எப்படி இருந்த மலையாள சினிமா ? ! 

ராஜ் டிவி. அரைகுறை டிரஸ்ஸில் பதின்ம வயதை 15 வருஷங்களுக்கு முன்னரே தாண்டிவிட்ட ஒரு பெண்மணி. கையில் இருக்கும் சீட்டுக்கட்டை லாவகமாக விரித்துவைத்து ஜோஸ்யம் சொல்கிறார். தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு, இந்தி, மாராத்தி எந்த மொழியிலும் கேள்வி கேட்கலாம். வரும் பதிலைத்தான் எந்த மொழி என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

 

ஹலோ..டெல் மீ

என் பையன் பேரு குமாருங்க.. அவன் நட்சத்திரம்

வேணாம்.. வேணாம்.. பேரு போதும்.  உங்க பையனுக்கு ப்யூச்சர் எப்படியிருககும்னு நான் சீட் போட்றேன்

ஆமா மேடம்… அதான் கேட்க வந்தேன்

உங்க பையன் ப்யூச்சர் நல்லா இருக்கு. நியூ பிராஜெக்ட்டை டிரை பண்ணச் சொல்லுங்க. பாரின் போற சான்ஸ் உண்டு. நல்ல பார்ட்னரை வெச்சுக்கிட்டு பிஸினெஸ் பண்னா நல்ல சக்ஸஸ்புல்லா வரலாம்.. ஒகேவா

சரிங்க மேடம். ரொம்ப தேங்ஸ்

இங்க் பாருங்க.. நீங்க யாரு,எங்கேர்ந்து பேஸ்றீங்க…என்ன நட்சத்திரம், டேட் ஆப் பர்த் எதுவும் வேணாம். ஜஸ்ட் கால் பண்ணி உங்க பியூச்சரை தெரிஞ்சுக்கோங்கா வரலாம்.. ஒகேவா

சரிங

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 28, 2010 @ 9:37 pm