விதியே கதை எழுது – ஷைலஜா
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில்.
இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.
விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.
நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, "சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார்.
குடியரசு தினம் முதல் ஷைலஜாவின் ’விதியே கதை எழுது’ நாவலை தமிழோவியத்தில் படிக்க தவறாதீர்கள்.
நன்றி : தென்றல்
கண்ணீரில் எழுதாதே……………. காத்திருக்கோம் ‘நகை’ச்சுவை நிறைந்த கதைத் தொடருக்கு!!!
மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள்.
பி.கு: புன்னகையும் நட்டுமா அழகா இருக்கீங்கப்பா.
இவ்வளவு திறமையையும் தாண்டி சமையல் கலையில் ஷைலஜா அக்கா ஒரு நளி (நளன் பெண்பால்). அக்காவின் மைசூர்பாகு ஒன்னு போதும், 😀
“கண்டவர் விண்டிலர்
விண்டவர் மீண்டிலர்.
வாழ்த்துகள் ஷைலஜா.ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Eagerly Waiting For!
Vaazhthtugal Akka
பல திறமைகளை உள்ளடக்கிய பிரபல எழுத்தாளர் ஷைலஜா அவர்களின் விதியே கதை எழுது நாவலை படிக்க ஆவலாக உள்ளேன்…