விதியே கதை எழுது – 7

 

சுமித்ரா! சுமித்ரா!"

எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள்

கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள்.

"வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?' என்றாள் மென்மையானகுரலில்.

சாரங்கனைப்போல சுமித்ராவிற்கும் அதிர்ந்து பேசிப்பழக்கமில்லை.

"சு சுமித்ரா…உன் பொறுமைக்கு சோதனை வந்திடிச்சி…ஆமா..உன் புருஷனை..உன் புருஷனை.."

"என்னாச்சு பாக்யா? என்புருஷனுக்கு என்னாச்சு?" சுமித்ரா பதட்டமாய் கேட்டாள்.

"உன் புருஷனை போலீஸ் பிடிச்சிட்டுப்போயிட்டிச்சி.."

"என்ன, போலீசா?"

"ஆமா..மேலத்தெருவுல இருக்கற உங்க சம்மந்தி அதான் சாரங்கன் மாமனாரை  உன் புருஷன் அரிவாளில் வெட்டிப்போட்டுட்டானாம்"

"ஐயோ"

'பேச்சுவார்த்தையில ஆரம்பிச்சி கடைசில அது இப்படி ஆயிடிச்சின்னு பாத்தவங்க சொன்னாங்க.. "

சுமித்ரா தலையில் அடித்துக்கொண்டபடி போலீஸ் ஸ்டேஷனுக்குப்போனாள்.

லாக்கப்பில் இருந்த சீனீவாசன் இவளைக்கண்டதும் கதறி அழ ஆரம்பித்தான்.

"சுமித்ரா! என்னை மன்னிச்சிடு. நான் உனக்கும் உன் தம்பிக்கும் துரோகம் செஞ்சிட்டேன்…அந்தப்பொண்ணு ராதிகா நல்ல பொண்ணு இல்ல. சினிமா ஆசைல ஒருவருஷம் முன்னாடியாரோடயோ பம்பாய் போயி 

சுத்திட்டு  வீடுவந்தவ. அதெல்லாம் தெரிஞ்சும் அவன் அப்பன் எனக்குபணம் தர்ரதா சொன்னதால உங்க ரண்டுபேருகிட்டயும் அதை மறைச்சி சாரங்கனுக்கு ராதிகாவை கட்டிவச்சேன். இப்போ  எனக்குப் பணம் 

வேணும்னு அவன்கிட்ட கேக்கப்போயி அவன் இல்லைன்னதும் கோபத்துல கத்தினேன், "ஏண்டா..உன் பொண்ணு கதை தெரிஞ்சா எவன் கட்டிக்குவான்னு நான் பரிதாப்பட்டு சாரங்கனுக்கு கட்டிவச்சேன், அதுக்குக்கூலியா அப்பப்போ பணம் கேக்கறேன்  முதல்ல ஒத்துக்கிட்டு இப்போ முடியாதுன்னு கைவிரிக்கிறியே மக கழுத்துல தாலி ஏறி அவ பெங்களூர்ல சந்தோஷமா குடித்தனம் நடத்தற திமிரா உனக்கு?'ன்னு கேட்டேன். 

அதுக்கு அவன் 'ராதிகா சாரங்கனோட சந்தோஷமா இருக்காளோ இல்ல தன் போக்குல  வழக்கம்போல எவன்கூட சுத்தறாளோ எனக்குக்கவலை இல்ல. என் பொறுப்பு விட்டது…ஏதோ ஊர்வாய அடைக்க ஒரு கல்யாணம் செய்து அனுப்பிட்டேன் அவ்வளோதான். என் காரியம் ஆச்சி. உனக்கு பைசா காசு தரமாட்டேன்னான். கெஞ்சினேன் கதறினேன் ..கடைசில….கடைசில.." சொல்லிவிட்டு தலைகுனிந்தவனை  எரிச்சலுடன் பார்த்தாள் சுமித்ரா.

ஐயோ ..என் வாழ்கையை நாசம் செஞ்சது போதாதுன்னு என் அன்புத்தம்பி வாழ்க்கையையும் நாசம்பண்ணிட்டியே பாவி மனுஷா ? சாரங்கன் வெகுளி அவனை ஏமாத்தறது சுலபம் ..அந்த ராதிகாமட்டும்  என் தம்பிகூட ஒழுங்கா வாழாமல் இருப்பதா எனக்கு தெரியவந்திச்சி, அவளை என்கையாலயே திர்த்துக்கட்டிட்டு நானும் உன்கூட ஜெயிலுக்கு வரேன்  இப்பவே நேர்ல போய் பார்த்துடறேன்.."

சுமித்ரா ஆற்றாமையாய் தலையில் அடித்துக்கொண்டு இருட்டத் தொடங்கிய அந்தநேரத்தில்   பஸ்ஸ்டாண்டிற்கு வந்தாள். 

(தொடரும்…)

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “விதியே கதை எழுது – 7

  • February 12, 2011 at 7:22 am
    Permalink

    அப்டேட் கொஞ்சம் சீக்கிரம் வந்தாப் பரவாயில்லை

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 12, 2011 @ 7:01 am