விதியே கதை எழுது – 8

 

"ஹலோ மஞ்சுநாத்?" 

ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள் 

ஏற்கனவே ஆபீசில்தான் வசமாய்மாட்டிக்கொண்டுவிட்ட கவலையில் வீட்டில்முடங்கிக்கிடந்த மஞ்சுநாத் ராதிகாவின் அழைப்பை வழக்கம்போல் ஆரவாரமாய் ஏற்காமல் சுரத்தில்லாமல்" ஹலோ ?" என்றான். 

"ஹேய் மஞ்சு, வேர் ஆர் யூ யா? இங்க,  சாரங்கனுக்கு சந்தேகம் வந்திடிச்சி..இன்னிக்கு ஆபிசிலிருந்து வந்ததுமுதல் கேள்வியா கேட்டு தாக்கறாரு. 

நீ வாங்கித்தந்த வைரநெக்லசை   சந்தேகமா கையில் வாங்கிப்பாத்தாரு நான் கவரிங்குனு அடிச்சி சொல்லிட்டேன்.ஆனா முகம் சரியாஇல்ல… எனக்குபயமாஇருக்கு..சாதுமிரண்டா காடு கொள்ளாதும்பாங்க இல்ல?" 

"உன் புருஷன் முகம் சரியா இல்லாம போகக் காரணம் ஆபிசில் என் கோல்மால் தெரிஞ்சுபோனதுலதான் நீ கவலைப்படாதே டியர்.. அப்றோம் ஒருவிஷயம்…." 

"என்ன சொல்லு?" 

"ராது, அந்த வைரநெக்லசை திருப்பித்தந்துடேன்?" 

"ஐயோ! எதுக்குதரணும்? ஆசையா நான் கேட்டேன்னு நீ வாங்கித்தந்தியே மறந்திட்டியா?" 

"ஆபீசில் நான்பணத்தை திரும்பக்கட்டணும் ராதிகா…கைல பைசா காசு இல்ல..நெக்லசைவித்து முதல்ல கொஞ்சம் கட்டிடலாம்னு பாக்றேன் இல்லாட்டி வேலை போய்டும்" 

"ஹேய் போடா..உனக்கும் எனக்கும் இன்னிக்கு நேத்திக்குப் பழக்கமா? என்பள்ளிக்கூடநாளில் நான் சென்னைக்கு எஸ்கர்ஷன் போனபோது அங்க பீச்சில் என்னை நீ பாத்துகண்ணடிச்சே .அப்றோம் என்னையே ஃபாலோ செய்து என்  ஊருக்கும் வந்தே..அங்க தோப்புல சந்திச்சிட்டோ ம்.போன்ல லெட்டர்ல நிறைய நாம பேசிட்டு இருந்தோம்..நடுவில  நாந்தான்  வேலைவிஷய்மா பம்பாய் போனேன்  பிசியாயிட்டேன்..நமக்குள்ள தொடர்பே இல்லாம் போச்சி..ஆனா கடைசில   உன்னை  எதிர்பாராமல்   இதே  ஊர்ல   சந்திச்சதும் குஷியாபோச்சி. உனக்காக நான் எத்தனைதடவை என்னை இழந்திருப்பேன்? நீ எனக்காக் அந்த 

வைரநெக்லசைஇழக்கக் கூடாதாக்கும்?' 

'ராதிகா! நான் சிக்கல்ல மாட்டிட்டு இருக்கேன்.   பணம் கட்டலேன்னா 

ஜெயிலுக்குபோகணும் .அதான் கேக்கறேன் இதபாரு,நாளைக்கு சாரங்கன் ஆபீஸ்புறப்பட்டுப் போனதும் நான் வீடு வரேன் நெக்லசை என்கிட்ட கொடு ப்ளீஸ்" 

"…………………." 

…அடப்பாவி ஒருத்தன் சிக்கல்ல மாட்டிட்டு கஷ்டப்படறேன்னு சொல்றேன்  நீ நெக்லசைதர மறுக்கிறே?  பாதகி! காரியவாதி! நீ சாரங்கனை ஏமாத்தலாம் என்னை ஏமாத்த நினச்சே..மவளே   உன்னைநான் தொலைச்சிக்கட்டிடுவேன் ஆமா.." 

மஞ்சுநாத் இணைப்பை துண்டித்ததும் ராதிகா அரண்டுபோனாள். 

மஞ்சுநாத் கையில் இனி காசு கிடையாது போலிருக்கிறதே ?கொடுத்த  நகையையே திருப்பிக் கேட்கிறானே? 

இவனை நம்பி இனி வாழமுடியாது.. வேற ஆளைப்பார்க்க வேண்டியதுதான்.. பேசாமவீட்டுக்குப்போயி துணிமணிகளைமூட்டைகட்டிட்டு விடியறதுக்குள்ள எங்காவது ஓடிப்போயிடணும்.. வேற சுகவாழ்க்கை தேடிக்கணும்.. புருஷனும் உஷாராயிட்டான் ..கள்ளக்காதலனும் காசி பணமில்லாத நிலைல இருக்கான்…இனி இங்க நமக்கு சரிப்படாது..' 

குழப்பமாய் தன் அபார்ட்மெண்ட் வந்தவளை  கீழ் ஃப்ளாட்டில்குடி இருப்பவர்களின்குழந்தை அழைத்தது. 

"ஆன் ட்டீ?" 

ராதிகா லிஃப்டில் ஏற இருந்தவள் திரும்பினாள்.

'ஹை…வர்ஷாகுட்டியா? என்ன தனியா இருட்டுல நிக்கற கண்ணு?" 

"எதிர ஒரு பெரிய பில்டிங் வந்திருக்கே அதுல இன்னிக்கு சிறப்பு நிகழ்ச்சியாம்..கோகுலாஷ்டமின்னு ராத்திரிபூரா  பஜனை பாட்டு டான்ஸ் எல்லாம் இருக்கு ….நம்ம ஃப்ளாட்ல எல்லாரும் போயிட்டாங்க ..சாரங் அங்கிளும் அங்கதான் இருகாரு,நான்  என்னோட டான்சுக்கு சலங்கை எடுத்துட்டுப்போக மறந்திட்டேன் அதான் திரும்ப வீடுவந்தேன்… இப்போ போயிட்டே இருக்கேன்.நீங்களும் வரீங்களா ஆண்ட்டீ? " என்றது அந்த ஆறுவயது சிறுமி. 

"நான் நானா? இல்லம்மா வேலை வீட்ல நிறைய இருக்கு  ..இன்னும் டின்னரே செய்யல .நீ போய்ட்டுவா…" என்றாள் ராதிகா.. 

'ஓகே ஆண்ட்டி" 

வீட்டிற்குள் நுழைந்து பால்கனிஓரமாய் நின்று வெளியே பார்த்தாள். 

எதிர்கட்டிடத்திலிருந்து மைக்கில்  ஒரு பெண்ணின் குரலில் தீர்க்கமான சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது காதில் விழ ஆரம்பித்தது. 

'தத்வ விவேகா விஷ்ணுபுராணாத் என்று விஷ்ணுபுராணத்தை மிகவும் கொண்டாடிப்பேசுகிறார் ஆதிசங்கரர். எங்கும்  வியாபித்திருக்கிற பரமாத்மா தான் ஸ்ரீ கிருஷ்ணபகவான். அவனிடம் ஆத்மார்த்த பக்தி கொண்டள் ருக்மிணி. அவள் கிருஷ்ணனுக்கு ஏழு சுலோகங்களை எழுதி அனுப்பினாள்.அதில் ஏழாவது சுலோகமாக,'இந்தஜன்மத்தில் நீ எனக்குக்கிடைக்காவிட்டாலும் அடுத்த ஜன்மத்திலும் அதற்கு 

அடுத்தடுத்த ஜன்மத்திலும் தொடரும் நூறு ஜன்மங்களிலும்  உன்னையே தொடர்ந்து அடைய முயற்சி செய்வேன்' என்று பொருள்பட எழுதினாள். நூறு ஜனமம் என்று ருக்மிணி கணக்கு சொல்வது எண்ணிக்கையைக்குறிக்க அல்ல. ஆயிரம் ஆயிரம் என்று வேதம் சொல்வதெல்லாம் வெறும் ஆயிரம் இல்லை. அனேகம் என்ற பொருளில் உபயோகப்படுகிறது.'சதம்'என்பது எண்ணிக்கையைக் குறிக்க வந்ததன்று. அதேபோலத்தான் சஹஸ்ரம் என்பதும். உலகையே அளந்தவனை எண்ணிக்கையில் அடக்கிவிட இயலுமா?சஹஸ்ரநாமங்கள் இருப்பினும் 'கோவிந்தா' என்று பக்தன் குரல்கேட்டதும் ஓடிவருபவன் க்ருஷ்ணன். அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் தன் அடியார்களுக்கு இன்னல் வரும்போதெல்லாம் அவர்களை ரட்சிக்க  அவதாரம் எடுப்பவனகடவுள். 

*பரித்ராணாய சாதூனாம் வினாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே! 

ராதிகா சட்டென தன் செவிகளை கரங்களால் மூடிக்கொண்டாள்." ஸ்டுபிடா இருக்குஇந்தப்பேச்செல்லாம்!ஹ்ம்ம்…இந்த மாதிரி பழைய கதை பேசியே மக்களை உருப்படாம அடிக்கிற கூட்டம் இது… ஆன்மீகமாம் சொற்பொழிவாம்! அழகா ஒரு டிஸ்கோ டான்ஸ் வச்சிருக்கலாம்.' 

முணுமுணுத்தபடி அடுத்து என்ன செய்யலாம் எனதிட்டமிட்டவள் யோசித்துக்குழம்பி ஒருமுடிவிற்கு வந்தபோது மணி  நடுநிசியைய்த்தாண்டி விட்டிருந்தது. பம்பாயில்கொஞ்சநாள் இருந்தபோது  பழகிய ஒரு ஹிந்திக்கார இளைஞனின் நினைவுவந்தது. பால்கனி சுவரில் சாய்ந்துகொண்டு,அவனுக்கு போன் செய்தாள். 

"ரத்தன் சிங்! நான் பம்பாய் வரேன்….உன்கூட தங்கப்போறேன் ..சரியா? 

ஓ..லவ்லிபாய்! சோ ஸ்வீட் ஆஃப்யூ!  ஆமா …கல்யாண வாழ்க்கைபோர் அடிக்குது…அதான்  இதுக்கு  பைபை சொல்லிட்டு உன்னைப்பாக்க வரேன்.. இதோகிளம்பிட்டே இருக்கேன் ரத்தன்சிங்..பம்பாய் வந்து போன் செய்றேன்.." 

போனை வைத்துவிட்டு பால்கனியிலிருந்து அறைக்கு வந்தாள். 

எதிர் கட்டிடத்திலிருந்து யாரோ'அன்பர்கள் பிரசாதம் பெற்றுக்கொண்டு செல்லவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்' ஸ்பீக்கரில் யாரோ உரக்கக்கேட்டுக்கொண்டார். 

"ஓ நிகழ்ச்சிகள் முடிஞ்சிடிச்சா?அப்போ எல்லாரும் ஃப்ளாட்டுக்குத்திரும்பிடுவாங்க…அதுக்கு முன்னாடி  ஜூட் விடணுமே?' 

ராதிகா சூட்கேசில் வேண்டியதை அடைத்துக்கொண்டு அறையினின்றும் ஹாலிற்குவந்தாள். வாசல்கதவைத்திறக்க  இருந்தவளை சட்டென தடுத்து நிறுத்தியது ஒரு கரம். ராதிகா வெளிறிபோன முகத்துடன் நிமிர்ந்தாள். 

உடல்முழுவதும் கறுப்புத்துணி போர்த்திக்கொண்டிருந்த அந்த உருவம், ராதிகாவை முட்டித்தள்ளி சுவர் மூலையில் கொண்டு நிறுத்தியது. 'ஏய் யார் நீ.? யாரு? நான் போலீசைக்  கூ…கூப்பிடுவே….." முடிப்பதற்குள் அவள் செல்போனை பிடுங்கிக்கொண்ட அந்த உருவம் , தன் கையிலிருந்த ரிவால்வரை அவளை நோக்கி நீட்டியது. ராதிகா பயத்தில் கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றாள். 

(தொடரும்…)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 13, 2011 @ 11:50 pm