தோனி : கேப்டன்களின் சூப்பர் ஸ்டார்
கிரிக்கெட் கேப்டன்களின் சூப்பர் ஸ்டார் என்று, கொஞ்சம் அதிகப்படியாக புகழப்படுகிறாரோ என்று தோன்றலாம், ஆனால் மரியாதைகளும், பட்டங்களும் வெற்றியாளர்களுக்கே !
டெஸ்ட் போட்டிகளில் ஐ.சி.சி தர வரிசையில் இந்தியா முதலிடம்.
முதல் T20 உலக கோப்பையில் இந்தியா சாம்பியன்.
கடந்த ஆண்டு IPL சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன்
தற்போது ஐம்பது ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன்.
இந்த அனைத்து சாதனைகளையும் ஒரே நேரத்தில் தன் வசமாக்கிய பெருமை கேப்டன் தோனியையே சேரும். எளிதில் உணர்ச்சிவசப்படாதவர், Captain Cool, பூசி மழுப்பாமல் நச்சென்று பேசக்கூடியவர் என சில கூடுதல் தகுதியும் இவருக்கு உண்டு.
2007 உலக கோப்பையில் Knock out சுற்றில் இந்திய அணி வெளியேறிய போது அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர் என்று தகுதிகளோடு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அணியில் இளைஞர்கள், அனுபவசாலிகள் என சிறப்பான ஒரு அணியை உருவாக்கினார்.
110 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மிக மிக கடினமான செயல். அதுவும் கிரிக்கெட்டை மதமாக பார்க்கும் இந்தியாவில்.
எடுக்கும் முடிவு தவறாக அமைந்தால் அதை தைரியமாக வெளியே சொல்பவர்.
தன் அணியினரை விட்டுக்கொடுக்காமல் ஆட வைப்பவர்.
தன்னிச்சையாக முடிவெடுப்பவர், பிடிவாதகாரர் என்று சலசலப்புக்கு ஆளானாலும் வெற்றி ஒன்றே இவரது இலக்கு. அதற்கு உதாரணம் இதோ கீழ்கண்ட வீடியோக்கள்.
>> கடந்த ஆண்டு IPL சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன்
மற்றும் Champions Leagueலும் சாம்பியன் பட்டம் – அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 🙂