ஆண்டிராய்டில் தமிழ் – Tamil on Android Phone

 

ஆசை ஆசையாக ஆண்டிராய்டு வாங்கி தமிழ் பார்க்க ஒப்ரா மினி பயன்படுத்துபவரா…? அப்ப இந்த பதிவு உங்களுக்குத் தான். ஆண்டிராய்டு பயன்படுத்தி அலைப்பேசி செய்யும் நிறுவனங்கள், தங்களுடைய 

தயாரிப்புகளில் ஒருங்குறியுடன் செய்யாமல் இருப்பதால், ஒப்ரா மினி போன்ற செயலிகளை நிறுவி, அதனுள் தமிழ் எடுத்துக்களை ஒரு படமாக மாற்றி தமிழ் எழுத்துக்களை ஆண்டிரய்டில் கண்டு வந்தோம். அதன் பின்னர், நண்பர் செகதீசன் முயற்சியால் தமிழ் விசை என்ற தமிழ் விசைப்பலகை ஆண்டிராய்டுக்கு வந்தது. 

அதன் மூலம், தமிழை உள்ளிடும் வசதி பெற்றோம். தமிழ் வாசிக்க, எழுத வசதி இருந்தும், ஆண்டிராய்டின் எண்ணற்ற பயன்பாடுகளில் தமிழ் காண முடியவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.

இத்தகைய சூழலில் நண்பர் கிருசு தமிழ் ஒருங்குறியை ஆண்டிராய்டில் நிறுவ முடியும் என்று கூறி ஒரு பயன்பாட்டை வெளியிட்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது. அலைப்பேசி நிறுவனமோ, ஆண்டிராய்ட் இயங்குதளம் (Operating System) உருவாக்கிய கூகுளோ, இயங்குதளத்தில் மீப்பயனர் (Super user) அதிகாரத்தை பயனர் அனைவருக்கும் தரவில்லை. அந்த மீப்பயனர் அதிகாரம் இருந்தால் மட்டும் ஒருங்குகுறி நிறுவுதல் போன்ற மாறுதல்களை செய்ய முடியும்.

அதை பெற நாம் ஆண்டிராய்டு இயங்குதளத்தை ஊடுருவல் செய்ய வேண்டும். அந்த ஊடுருவலை உரூட்டிங்க (Rooting) என்று சொல்கிறார்கள். அந்த ஊடுருவலை நிகழ்த்திவிட்டால், நமக்கு அந்த மீக் பயனர் அதிகாரம் கிடைத்துவிடும். இந்த ஊடுருவலை நிகழ்த்த பல்வேறு ஆண்டிராய்டு பயன்பாடுகள்(applications) ஆண்டிராய்டு சந்தையில் (market) கிடைக்கின்றது.

இன்று நாம் காணப் போவது ஆண்டிராட்டு 2.2 புரோயோ (Froyo) இயங்குதளம் கொண்ட சாம்சங்க் ஐ551 என்ற அலைப்பேசியை நான் ஊருவியதை எப்படி என்பதையே… 

உரிமைத்துறப்பு:

ஊடுருவல் செய்தால் உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் உத்திரவாதத்தை இழக்க நேரிடும். ஊடுருவல் செய்யும் பொழுது உங்கள் அலைப்பேசி செயலிழந்து போகலாம். ஊடுருவல் பணியில் நிகழும் அனைத்து சாதக/பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். 

முதலில் ஊடுருவல் செய்ய ஒரு பயன்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். நான் தேர்ந்தெடுத்தது யுனிவர்சர் ஆண்ட்ரூட் (Universal Androot). இதை நீங்க ஆண்டிராட் சந்தையில் தேடி எடுக்கலாம். எடுத்து முதலில் அதை உங்கள் அலைப்பேசியில் நிறுவவும். 

 நிறுவியப் பின்பு 

 ஊடுருவல்

செய்ய அனுமதி கொடுத்து அதையும் செயல்படுத்தவும். 

அப்படா ஊடுருவல் செய்தாகிவிட்டது என்று பெருமூச்சு விடும் முன், அதை ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்வோமா. இப்பொழுது நீங்க செய்த ஊடுருவல் முழுமையானதா இல்லையா என்பதை வேறொரு செயலி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அந்த செயலி தான் பிசி பாக்சு (Busybox). இதையும் சந்தையில் நீங்க தேடி எடுத்து நிறுவ வேண்டும்.இதை நிறுவியதற்குப் பின்பு, ஊடுருவல் நிலை என்ன என்பதை அதை இயக்கி பார்த்தால் படத்தில் இருப்பது போல வரும். 

அலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பிக்கவும் (Restart) உங்கள் அலைப்பேசியை நீங்கள் ஊடுவியதை உறுதிப்படுத்த உங்கள் அலைப்பேசியில் செயலிகளின் தொகுப்பில் போய் பார்த்தால் மீப்பயணர் உரிமை கொடுக்கும் செயலி (Super user.apk) நிறுவியருக்க வேண்டும். 

 அதை உறுதி செய்தப் பின்பு, ஆண்ராய்ட் சந்தைக்குச் சென்று ஊடுருவல் செய்யப்பட்ட அலைப்பேசிகளுக்கென்று இருக்கும் செயலி ஏதேனும் ஒன்றை நிறுவ முயற்சிக்கவும். நான் பரிந்துரைப்பது சூட் மீ (Shootme)

இதை நிறுவ உங்களிடம் மீப்பயனர் உரிமை கோரும் பொழுது வழங்குவ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இதை உங்களால் நிறுவ முடிந்தால் உங்கள் அலைப்பேசியில் நீங்கள் 

ஊடுருவலை நிகழ்த்தியது முழுமையானது என்று சொல்லலாம். (ஊடுருவல் செய்த அலைபேசிகளுக்கான செயலிகளை இயக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதியை கோரும். அனுமதி வழங்கியதை நினைவில் வைத்திருக்கும் தேர்வை எடுத்துவிட்டால், உங்களை ஒவ்வொரு முறையும் கேட்காமலேயே இயங்குதளம்  அனுமதி வழங்கும்) இதை நிறுவ முடியவில்லை என்றால், அடுத்த கட்ட முயற்சி உங்கள் அலைப்பேசியில் உள்ள நிறுவப்பட்டிருக்கும் அனுமதிகளை மாற்றி அமைப்பது. அதற்கு நாம் நிறுவ வேண்டிய செயலி உரோம் மேனேசர் (Rom Manager) , இதை நிறுவி , இதில் உள்ள பிக்சு பெர்மிசன்சு (Fix Permissions) 

என்பதை தேர்ந்தெடுக்கவும். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் செயல் என்பதால், அலைப்பேசியை இயக்காமல், அதுவாக முடிந்து நிற்கும் வரை காத்திருக்கவும். முடிந்த பின்பு அலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பிக்கவும் (Restart).

மீண்டும் ஒரு முறை சூட் மீ(shoot me) செயலியை நிறுவவும். இம்முறை எந்த தடையும் இல்லாமல் நிறுவ முடியும். நிறுவியதை செயலி தொகுப்பில் ஒரு முறை உறுதி செய்து விட்டு, ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ் ஒருங்குறி எழுத்துருவை தேடி எடுத்து நிறுவவும். (Tamil Unicode Font Krish Km)

 என்று தேடினால், நீங்கள் இந்த செயலியை எளிதில் கண்டடையலாம். இதை வாங்குவதற்கு நீங்க ~ ரூ.75 செலுத்த வேண்டும். அதை செலுத்தி, தரவிறக்கி, நிறுவினால் , படம் 8ல் இருப்பது போல இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ளதை தேர்வு செய்து அழுத்தவும். எழுத்துருக்குள் நிறுவி டன் (Done) என்று வர வேண்டும். அதுவரை மீண்டும் மீண்டும் அழுத்தவும் (இத மீப்பயணர் உரிமைக்கான அனுமதி வழங்கல்). சில நேரங்களில், “டன்” என்பது வராமல் இருந்தாலும் எழுத்துருக்கள் நிறுவப்பட்டிருக்கும். அலைப்பேசியை ஒரு முறை மீள் உயிர்ப்பித்து அதை உறுதி செய்ய வேண்டும். 

உயிர்பித்த பின்பு, http://tbcd-tbcd.blogspot.com தளத்திற்கு சென்றால், அல்லது தமிழ் ஒருங்ககுறி எழுத்துக்கள் உள்ள வேறு எந்த தளத்திற்கு சென்றாலும் உங்களால் தமிழ் எழுத்துக்களை காண முடியும்.

 

உரிமைத்துறப்பு:

ஊடுருவல் செய்தால் உங்கள் அலைப்பேசி நிறுவனத்தின் உத்திரவாதத்தை இழக்க நேரிடும். ஊடுருவல் செய்யும் பொழுது உங்கள் அலைப்பேசி செயலிழந்து போகலாம். ஊடுருவல் பணியில் நிகழும் அனைத்து சாதக/பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “ஆண்டிராய்டில் தமிழ் – Tamil on Android Phone

 • December 29, 2012 at 3:12 am
  Permalink

  How can i downloud software..plz help me.

  Reply
 • September 5, 2011 at 12:07 am
  Permalink

  hai, naan nokia n97 mini use pannuren bought in oman.. Sympian os irukku.. Net ku opera use pannuren.. Tamil letters read mattum than panna mudiuthu.. Tamil la elutha na enna pannanum. Antroid os ku change panna mudiuma? Illa tamil font software install pannalama? Ur advice plz.. My id josephselva82@gmail.com

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 3, 2011 @ 4:32 pm