தொலைக்காட்சி vs லேப்டாப்
ஒரு சில அதிகாரிகளுக்கு தாங்கள் எப்போதுமே லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதியை விட அதிகார வர்க்கத்துக்கு தான் பவர் அதிகம் என்று மக்களுக்கு இமேஜ் காட்ட வேண்டும் என்ற நப்பாசை எப்போதுமே இருக்கும்.
நடைமுறையில் இது நடக்கவே நடக்காத விஷயமாகிவிட்டது இந்தக் காலத்தில். பெயரும் புகழும் வாய்ந்த ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரு முக்கியமான துறையின் முக்கியப் பதவியில் இருந்தவர். அவரை திடீரென அடித்த காற்றில் பதவிக்கு வந்த மந்திரி ஒருவர் மக்களுக்கு மத்தியிலேயே தரக்குறைவாக பேசிய சம்பவம் சில ஆண்டு காலம் முன்பு அனைவரும் அறிந்த செய்தி.
இந்நிலையில் தான் வேலையில் படு ஸ்ட்ரிக்ட் என்பது போல காட்டிக் கொள்ள கீழ் அதிகாரிகளை துச்சமாக மதிப்பதும், அவர்கள் மீது நொட்டை நொள்ளை சாக்குக்கெல்லாம் சஸ்பென்ஷன் செய்வதும் அடிக்கடி நிகழும் சம்பவமாக இருக்கும். இதன் மூலம் பத்திரிகைகளில் தொடர்ந்து இவர்கள் பெயர் வந்து கொண்டே இருக்கும். நேர்மையின் வாழும் அர்த்தமே இந்த அதிகாரி தான் என்று மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் போல உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கும் நல்லிதயம் படைத்த நல்ல அதிகாரிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இன்றைய தேதி வரையில் நயா பைசா லஞ்சம் என்பதையே பார்க்காமல், “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற குறிக்கோளுடன் இருக்கும் சகாயம் போன்றவர்கள் நிறைய வர வேண்டும்.
மக்கள் இந்த மாதிரியான உண்மையான அதிகாரிகளுக்கு தங்கள் மனமுவந்த ஆதரவை அளிக்க வேண்டுமே தவிர, போலியாக பரபரப்புகளுக்காக உண்மையைப் போல நடிக்கும் நயவஞ்சகர்களை ஆரம்பத்திலேயே புறந்தள்ள வேண்டும்.
oooOooo
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வழியாக அனைத்து கட்சிகளுமே தனித்தனியாக தான் களம் காணப்போகின்றன. முன்பெல்லாம் உள்ளாட்சித் தேர்தல் என்றால் கட்சி பேதமின்றி உள்ளூரில் நல்ல ஆளாகப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் மக்கள். இப்போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அரசியல் புகுந்து விட்டது. வார்டு கவுன்சிலருக்கு கூட கட்சிப் போட்டி தான். அனைத்து கட்சிகளுமே தனித்தனியாக போட்டி என்கிறபடியால் ஒரு வார்டில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் தலா ஒரு வேட்பாளர் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலையெல்லாம் விட இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி முடிவுகளால் நிரந்தரப் பகையாளிகளாகி விட்ட பல எதிரெதிர் வீட்டுக் குடும்பங்கள் பல கிராமங்களில் உள்ளன.
போகிற போக்கைப் பார்த்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள சங்கப் பொதுத் தேர்தல்களில் கூட இனிமேல் கட்சிச் சின்னமும், கொடியும், மைக் செட்டும், ப்ளெக்ஸ் பேனரும், வால் போஸ்டரும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
oooOooo
போன ஆட்சியில் இலவசங்கள் கொடுத்த போது எதிர்த்தவர்கள் இப்போதைய தமிழக அரசு இலவசங்களை வழங்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று சிலர் கூக்குரலிட்டு வருகிறார்கள்.
இலவசத்தை கண்டிப்பாக எதிர்க்கிறோம் அனைவருமே!
ஆனால் ஒத்தை ரூபாய் பேப்பர் வாங்கினா முப்பது ரூபாய் பொருட்கள் இலவசம். பத்து ரூபாய் பத்திரிகை வாங்கினால் நூறு ரூபாய் பொருட்கள் இலவசம் என்று முதலில் தனிப்பட்ட முறையில் இலவசக் கலாசாரத்தை ஆரம்பித்து அதே கான்செப்ட்டை ஆட்சியிலும் அமல் படுத்தி விட்டு, மக்களை இலவசங்கள் தர வேண்டியது அரசாங்கத்தின் தலையாயக் கடமை என்று மாறச் செய்து விட்டு இப்போது இப்படி புலம்புவது சரியல்ல.
தவிர லேப்டாப், ஆடு மாடு போன்றவையெல்லாம் உண்மையிலேயே தொலை நோக்குத் திட்டங்கள். தொலைக்காட்சியையும், லேப்டாப்பையும் ஒப்பிட முடியுமா?
oooOooo
அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஆபீசர் திரு. உமாசங்கர் சில வாரங்களுக்கு முன் தனது துறை சார்ந்த அலுவலகத்தின் ஒன்றின் வளாகத்தில் தெய்வச் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் அனைத்து மதத்தினரும் புழங்கும் இடம் பொதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று காரணம் சொல்லப்பட்டது.
அப்படிப்பட்ட நேர்மையான, மதநல்லிணக்கவாதி ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஒரு குறிப்பிட்ட மத விழாவில் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்தை பேணும் கண்கொள்ளாக் காட்சியின் அறிவிப்பு போஸ்டரைக் கண்டு களித்து ரசிக்கவும்!
கலந்துகொண்டா? தேவசெய்தி வேறல்ல குடுக்குறான்? “நான் கிரித்துவன், நான் இருக்குமிடத்தில் இந்துதெய்வங்களை வைக்கக்கூடாது”ன்னு நேர்மையா சொல்லி இருக்கலாமே. போலியாக இருந்தாவது மதத்தைப்பரப்பனுன்னு சொல்லிக்குடுத்திருக்கிறாரா ஏசு?
உமாசங்கர் அவர்களின் செய்தி செம காமெடி :))