வேலாயுதம் கதை இதுதானா ?

வேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க. இறுதிக்காட்சிக்காக Stunt Artist எல்லாம் வெளிநாட்டுல இருந்து அழைச்சிட்டு வந்திருக்காங்க. காவலன் அப்படிங்கிற வெற்றி படத்திற்குப் பிறகு இளைய தளபதியின் படம். இப்படி எல்லாம் பெரிய்ய்ய அளவில் இருக்க .. 

நிற்க.. முதல்ல ஆசாத் கதை பார்ப்போம். 

கதை என்னவாயிருக்கும்? அடுத்த கேள்வி அதுதானே. அதை முன்னிறுத்தியதுதாங்க இந்தப் படம். மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி இயக்கிய Azad என்கிற படத்தின் தழுவலாத்தாங்க இருக்கும் வேலாயுதம். படத்தோட கதை பார்ப்போமா (அதாவது ஆசாத் என்கிற தெலுங்குப் படத்தின் கதை). ஊரையே அடிச்சு உலையில் போடுற வில்லன் இவர் இன்னும் கொஞ்சம் சிறப்பு. அதாவது பாகிஸ்தான் முஸ்லிமான ரகுவரன், ஹைதராபாத்துல இருக்கிற இந்துமதக் கட்சிக்குத் தலைவராம் (எப்படிய்யா இப்படியெல்லாம்). அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது எப்படின்னு முடிவு பண்ணுறாரு. அதாவது சிட்ஃபண்ட்ஸ் நடத்துறாரு. இந்தியா நடுத்தர வர்க்கத்தின் நாடுன்னும் ஒரு தத்துவம் வேற சொல்லுவாரு. சிட்ஃபண்டுல வர்ற பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கிறதுதான் திட்டம். இது ரகுவரன் அப்படிங்கிற கொடூரமான வில்லன் கதாப்பாத்திரம்.

கொஞ்சம் நேரம் வித்தியாசமான நல்ல போலீஸ்காரரா வந்து ரசிக்க வெச்சிட்டுப் இறுதிக்காட்சியில செத்துப்போவாரு பிரகாஷ்ராஜ். 

செளந்தர்யா, இவுங்க ஒரு பத்திரிக்கை நிருபர். சமுதாயத்து மேல அக்கறையும், ரகுவரன் மேல கோவமும் கொண்டவர். ரகுவரனைப்பத்தி ஏதோ உண்மை எழுதப்போக, ரகுவரன் தன்னோட பாய்ஸ்ஸை கூப்பிட்டு செளந்தர்யாவை ஒரு ’தட்டு’ தட்டச் சொல்றாரு. பாய்ஸும் ஜீப்ல துரத்துறாங்க. செளந்தர்யாவோ தன்னோட ஸ்கூட்டியில வேக தப்பிக்க முயற்சி பண்றாங்க. துரத்தும் போது ஜீப் அடிபட்டு  நாலு பேரும் அதே இடத்துல காலி. உடனே செளந்தர்யா ஒரு முடிவு பண்றாங்க. நல்லா கவனிச்சுக்குங்க இதுதான் படத்துக்கு முக்கியமான இடம். ஆசாத் அப்படின்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கி அவர்தான் இந்த நாலு பேரையும் கொன்னாருன்னு சித்தரிக்கிறாங்க. தொடர்ச்சியா சில நிகழ்வுகள் எல்லாத்துக்கு ஆசாத் பேரே வர ஆந்திராவே ஆசாத்தை தேடறாங்க. 

இப்போ கதாநாயகன் நாகார்ஜூன், இவரு கிராமத்துல இருக்கிற குறும்புக்கார இளைஞன் (இப்போ உங்க மனசுல விஜய்தான் வருவாரு, வரனும். அப்பத்தானே கதாநாயகன்). ஒரே தங்கை. பாசம்னா பாசம் அப்படியொரு பாசம் தங்கச்சி மேல (தன் தங்கச்சி மேல பாசம் வெக்கலாம், அடுத்தவங்க தங்கச்சிமேல பாசம் வெக்ககூடாது). அவருக்காக கஷ்டப்பட்டு கொஞ்சம் பணத்தை சேர்த்துவெக்கிற இடம் ரகுவரன் நடத்துற சிட்ஃபண்ட்ஸ். நாகார்ஜூனா மேல பைத்தியமா இருக்காங்க ஷில்பாஷெட்டி. ஒரு காட்சி, ரெண்டு பேரும் காட்டுக்குள்ள பயந்து ஓடும்போது முள் பட்டு எல்லா துணிகளும் கிழிஞ்சு போயிரும்.அதாவது நிர்வாணமா இருக்கும் ஷில்பாவுக்கு தன்னோட மேல் சட்டையை கழட்டி கொடுப்பாரு நாகார்ஜுன் (இங்கே, சட்டைக்கு மேல போட்டிருக்கிற இன்னொரு சட்டைக்குப் பேருதான் மேல்சட்டை). தங்கைக்கு கல்யாணம் முடிவு ஆக நாகார்ஜூன் நகரத்துக்கு வராரு. 

ஆசாத் யாருன்னு தேடிட்டு இருக்கிற மக்கள் இவர்தான் ஆசாத் தெரியவருது (ஆமாங்க, நாகார்ஜூனுக்கு இந்தப் படத்துல ஆசாத்துன்னுதான்  பேரே). கொஞ்சம் லடாய் ஆவுது, யாருக்கு? ரகுவரனுக்கும் நாகார்ஜூனுக்கும். சிட்பண்ட்ஸ்ல பணம் எடுக்கப் போறாரு நாகா. அப்பன்னு பார்த்து ரகுவரன் சிட்ஃபண்ட்ஸ் எல்லாத்தையும் மூடிடறாரு. கடுப்பாகுற கதாநாயகன் ரகுவரனோடா நேரடியா மோதப்பார்க்குறாரு. செளந்தர்யாவும், நாகார்ஜுனாவை “நீ சாதாரண ஆள் இல்லே, ஆந்திராவே தலையில் தூக்கி வெச்சிட்டு கொண்டாடிட்டு இருக்கிற ஆசாத் நீதான்” அப்படின்னு பயங்கர Brainwash பண்ணவும்..டிஷ்யூம்  டிஷ்யூம்  டிஷ்யூம் டிஷ்யூம்..நாகார்ஜூனாவோட தங்கச்சியை வேற கொன்னுருவாரு ரகுவரன். சொல்லவா வேணும்.. டிஷ்யூம்  டிஷ்யூம்  டிஷ்யூம் டிஷ்யூம்

இடையிலே, இடையிலேன்னா செளர்ந்தர்யாவோட இடையிலே இல்லீங்க. இதனிடையிலேன்னு புரிஞ்சிக்கனும், ரகுவரன் கஷ்டப்படுத்த செளந்தர்யாவை கொல்ல முயற்சி பண்றாரு. நாகா காப்பாத்த, செளந்தர்யாவுக்கு நாகா மேல ஒரு தலைக்காதல். கடைசியா ஒரு ரயிலுக்கு குண்டு வெச்சி குண்டா இருக்குற 10 பேரை விடுவிக்க்ச் சொல்றாரு ரகுவரன். நாகா அந்த ரயிலுல பூந்து சண்டை போட்டு மக்களையும் காப்பாத்திடறதுதான் ஆசாத் படத்தின் கதை. படம் வெளிவந்தது 2000ம் ஆண்டு. நந்தி விருது(வெள்ளி) கிடைச்சுது.

இப்ப நீங்க நாகார்ஜுனா=விஜய், செளந்தர்யா=ஜெனொலியா டிசொசா, ஷில்டா ஷெட்டி=ஹன்சிகா மோத்வானி, தங்கச்சியா= சரண்யா மோகன். அப்படின்னு Substitute பண்ணிப்பார்த்துக்கனும். அப்படி செஞ்சுட்டா வேலாயுதம் தயார். 

இப்ப நம்ம வேலாயுதம் Trailer பார்ப்போம் வாங்க.

 

இயக்குனர் ராஜா ஏற்கனவே Frame by Frame காப்பி அடிப்பாரு. கண்டிப்பா இதுல பாகிஸ்தான், சிட்ஃபண்ட்ஸ் எல்லாத்தை மாத்தியிருப்பாரு.  ஒவ்வொரு பேட்டியிலும் இது விஜய் ரசிகர்களுக்காக எடுத்தப் படம்னு சொல்லிட்டே வராரு. இப்படி ஒரு மொக்கை கதையை எப்படி சிறப்பா மாத்தியிருப்பாருன்னுதான் யோசனையா இருக்குங்க. படம் ஓடிச்சின்னா ரெண்டு பேருக்கு நல்ல பேரு வரும் 1.விஜய் ஆண்டனி 2. விஜய்  இல்லைன்னா ரெண்டு பேரோடு பரம்பரையே இழுத்து வெச்சி திட்டுவாங்க 1.ராஜா 2.விஜய். 

கடைசியா ஒன்னுங்க, ஆசாத் படத்தை வேலாயுதமா எடுக்காம வேற மாதிரி எடுத்திருந்தா…. ரொம்ப சந்தோசம். நல்லா வருவீங்க விஜய் மற்றும் ராஜான்னு நாமும் வாழ்த்திட்டுப் போகலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “வேலாயுதம் கதை இதுதானா ?

 • December 30, 2011 at 3:09 pm
  Permalink

  velayudham nalla thaan pa irundhuchu…. (enna, naan erkanave sura, villu, kuruvi elam pathutene…:P).. athulayum vijay train a nipaatura scene a pakanume.. ‘VIRIVIRUPU’ thaangale…(gandhiji yoda korangu bommai madhri kanna moodirukanum… thapu panitene..)

  Reply
 • November 14, 2011 at 12:36 am
  Permalink

  velayudham than indha tamilnada vida periyathu.Velayudham is vel for raja ayudham for vijay it means ‘VELAYUDHAM’ .

  Reply
 • October 23, 2011 at 10:29 pm
  Permalink

  படம் சூப்பர் ஆ தியேட்டர் ஐ விட்டு ஓடி விடும்.

  Reply
 • October 9, 2011 at 1:44 am
  Permalink

  pavam.vijay. intha padamavathu oodattum.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 5, 2011 @ 10:38 pm