மனத்திற்கு

 

 
சென்றதினி மீளாது…மூடரே
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்…
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்-
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
என்று எண்ணமதைத் திண்ணமுற செய்து,
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்.
தீமைகள் அழிந்துபோம்…திரும்பி வாரா!
– மகாகவி பாரதியார்
 
எவ்வளவு தான் யோசிச்சாலும்…போனது போனது தான். அதைப் பத்தி யோசிச்சு மண்டையை குழப்பிக்கறது.. தேவையில்லாத வேலை. இன்னிக்கு புதுசாப் பிறந்துருக்கோம்னு நினைச்சு நம்ம மனசை திடமாய் வெச்சு,சந்தோஷமாய் வாழ்க்கையை அமைச்சுக்கணும். தீய விஷயங்கள் அழிந்தவை…திரும்பி வராது, நாம் உயிர் குடுத்தாலொழிய!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 18, 2012 @ 11:04 am