அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 2
இரத்தப் பரிசோதனையகங்கள், எக்ஸ்ரே நிலையங்கள் இவை எல்லாமே ஏதேனும் ஒரு காப்பீடால் அங்கிகரிக்கப்படவையவே. காப்பீடு இல்லாத ஒருவர் ஒரு மார்பக நிழற்படம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் காப்பீடு உள்ல ஒருவருக்கான கட்டணமும் மிகவும் வேறுபடும். சாதாரண மாமோகிராம் காப்பீடு இல்லை என்றால் $400 வரை கூட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் மெடிக்கேர் இருந்தால் $104 வரையும், காப்பீடு இருந்தால் 200-300 வரையும் தான் கட்டணம் விதிக்கலாம். அதிலும் ஒருவர் வைத்துக்கொண்டிருக்கும் காப்பீடு பொறுத்து அவர் எத்தனை சதவிகிதம், காப்பீடு எத்தனை சதவிகிதம் கட்டவேண்டும் என்பதெல்லாம் நிர்ணயிக்கப்படும்.
அதற்காக காப்பீடு இருந்து, அது அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்ரே நிலையத்தில் அந்த காப்பீடிற்கான தகவல், மின்பே சொன்னபடி சிபாரிசு கடிதம் எல்லாம் தந்தாலும் அங்கிருந்தே காப்பீடிற்கு தொலைபேசி ஒரு முன் அனுமதிக்கப்பட்ட எண் (precertification) ஒன்று வாங்கித்தர வேண்டும். அதை வாங்கி அங்கே இருக்கும் பணியாளர்களிடம் கொடுத்தபின் உங்கள் கடமை முடிந்தது என்று நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. சில காலம் கழித்து காப்பீடில் இருந்து ஏதேனும் பிரச்சினை என்றால் இந்த எண் மிகவும் அவசியம். அதேபோல காப்பீடு பொதுவான ஸ்க்ரீனிங் நிழற்படம் மட்டுமே அனுமதிக்கும் என்றால் ஒரு அவசரத்திற்காக உங்கள் மருத்துவர் குறியீடை டக்னோஸ்டிக்கான குறியீடை தந்துவிட்டால், அதற்கான செலவுக்கு நோயாளிகளே பொறுப்பு.
முன்பே நிறைய குழந்தைநல மருத்துவர்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல சொல்கிறார்கள் என்று சொல்லி இருந்தேன். அவசர சிகிச்சைக்கு சென்ற 24 மணி நேரத்திற்குள் காப்பீடு அலுவலகத்திற்கு தொலைபேசி அடன் விவரங்களை சொல்லிவிட வேண்டியது அவசியம். முன்பெல்லாம் குழந்தைகளின் தடுப்பூசிகள் ( wellness visit) காப்பீடுகள் அனுமத்திருந்தன. ஆனால் இப்போது நிறைய காப்பீடுகள் அவற்றை அனுமதிப்பதில்லை. அதேபோல பொதுநலத்துறைகளும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்குவதில்லை இதே போல இரத்ததபரிசோதனைக்கும் காப்பீடு அங்கீகரித்த ஒரு குறிப்பிட்ட சோதனையகத்திற்குத்தான் செல்லவேண்டும். சமீபத்தில் ஒரு அவசரத்திற்காக என் கணவ்ர் தான் செல்லும் மருத்துவர் அலுவகத்திலேயே சோதனைக்கு இரத்தம் கொடுத்து, எக்ஸ்ரேயும் எடுத்துவிட நாங்க கிட்டதட்ட $800 பொறுப்பாக வேண்டியதாகிவிட்டது.
அதே கொஞ்சம் நிதானமாக எடிசனில் இருக்கும் LabCore, Associated Radiologist சென்றிருதால், கொஞ்சம் கூட செலவிருந்திருக்காது. இதைவிட வேடிக்கையான செய்தி உண்டென்றால், அது கருவுற்றிருக்கும் பெண்கள் நிலைதான். அவர்கள் பிரசவிக்காதவரை, குழந்தைக்கும் தாய்க்கும் காப்பீடு உண்டு. ஆனால் பிரசவித்த அன்றே காப்பீடுகள் பொறுத்து குழந்தைக்கு காப்பீடு இல்லாமல் போகும். உடனே குழந்தையை சேர்க்க வேண்டும். அதற்கும் நர்சரியில் எத்தனைநாள் அனுமதி உண்டு, சிசேரியனாக இருந்தால் எத்தனைகாலம் தங்கலாம் என்பதை மருத்துவர்களைவிட தீர்மானிப்பவர்கள் காப்பீடுகளே.
அவரவர் பெற்றிருக்கும் காப்பீடுகள் பொறுத்து மனநலசிகிச்சை, புற்றுநோய்க்கான செலவிற்கு உச்ச வரம்பு போன்றவை நிர்ணயிக்கப்டும். குழந்தையில்லாதவர்கள் அதற்கான செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்ள விரும்பினால் எத்தனை முயற்சிகளுக்கு அனுமதி உண்டு, எந்தவித நோயோ உடல்நலக்குரையோ இல்லைஎன்றால் காப்பீடு வைத்துக்கொள்வது எளிது.
காப்பீடு மருத்துவரின் சிகிச்சைக்கு மட்டும்தானே தவிர மருத்துவர் பரிந்துரையின் பேரில் பெற்றுக்கொள்ளவேண்டிய மருந்துகளுக்கு தனியாக ஒரு திட்டம் இருப்பது நல்லது. சில காப்பீடுகள் அவற்ரையும் சேர்த்திருக்கலாம். ஆனாலும் மருந்துகளை வாங்கும் போது நீங்கள் உடன் கட்டவேண்டிய தொகையும் உங்கள் காப்பீட்டு திட்டம், மாதாந்திரம் எவ்வளவு பிரிமியம் செலுத்துகிறீர்கள் என்பதை சேர்ந்தது. எப்படி மருத்துவர் முதல் பரிசோதனையகம் வரை காப்பீடு அங்கீகரித்த இடத்துக்குத்தான் போக வேண்டுமோ அதேபோல பரிந்துரையும் பேரில் பெறப்படும் மருந்துகளுக்கும் தொடர்ந்து அந்த திட்டம் அனுமதிக்கும் இடத்திற்கே செல்ல முடியும். அதேபோல பிசியோதெரபி தேவை என்றால், ஏதேனும் நர்சிங்ஹோமில் சிகிச்சைக்காக தங்க வேண்டியிருந்தால் எல்லாவற்றிற்கும் நன்றாக தெளிவான காப்பீடு குறித்த தெளிவு மிக தேவை.
ஓபாமா கொண்டுவரப்போகும் மாற்றங்களில் மிக அதிகபட்ச மாறுதல்கள் இல்லை. மனநல உதவிக்கோ, ஒரு பழகத்தில் இருந்து விடுபட மருத்துவரை நாட வேண்டுமானால் அதற்கான சிகிச்சைக்கோ நிரந்தர தெளிவான கொள்கை இல்லை. அதேபோல அபார்ஷன் செய்ய வேண்டி இருந்தால், மருத்துவ ரீதியாக அனுமதிக்கப்பட்ட அபார்ஷன்கள் என்றாலும் அதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. இந்த ஹெல்த்சேர் ரிஃபார்ம் திட்டத்தில் எனக்குப்பிடித்த ஒரே ஷரத்து, குழந்தைகள் முழுநேர மாணவர்களாக இருக்கும்வரை பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருக்க முடியும். முன்னைப்போல 18 வயதுக்கு பிறகு அவர்களுக்கு தனியாக காப்பீடு வாங்கத்தேவை இல்லை.
என் மகனைப்போல அடிக்கடி மருத்துவரின் உதவி தேவை என்றால் என்னைப்போல அரசாங்க காப்பீடு வேண்டும், இல்லை என்றால், அதன் கொள்கைகள் அதன் சின்ன சின்ன நிர்பந்தங்கள் இவற்றை புரிந்துகொண்டு நீங்களும், எதனால் ஒருசிகிச்சை அவசியம் என்று உங்கள் மருத்துவரும் விளக்கி மேற்கொண்டால் எளிது.