வர்ஜீனியா அருகே ஒரு கிராமப்புற பள்ளி ஒன்றில் காரில் அமர்ந்திருந்த பெண்ணை காவல் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றிருக்கிறார். அந்த பெண்ணிடம் ஓட்டுநர் உரிமம் கேட்டதாகவும், உடனே அந்த பெண் காரின் கண்ணாடியை ஏற்றி, அவருடைய கையை நசுக்கி காருடன் இழுத்து சென்றதால் சுட்டதாக சொல்லி இருக்கிறார். அவர் காரை ஓட்ட துவங்கியதும் நிறுத்து இல்லாவிட்டால் சுடுவேன் என்றும் சொல்லி சுடுவதற்கு முன் காரை நிறுத்து என்று சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் நேரில் பார்த்தவர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் காவல் அதிகாரியின் கை காருக்கு உள்ளே போக வழியும் இல்லை, அந்த பெண் கண்ணாடியை ஏற்றி அவர் கையை நசுக்கவும் இல்லை, எதனால் கொன்றார் என்பது தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
இதே போல அடிக்கடி நியுப்ரன்ஸ்விக் (New Brunswick) என்ற ஊரில் அடிக்கடி நடக்கும். அவரிடம் துப்பாக்கி இருந்தது, தற்காப்புக்காக சுட்டேன் என்று காவல் துறை சொல்லியும் அந்த 19 வயது மனிதன் இறந்தபின் சென்று பார்த்தால் அவரிடம் துப்பாக்கியே இல்லாததும் தெரிய வரும். இதுபோல செயல்படும் சிலரால் எல்லா காவலருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
ooOoo
ரட்கர்ஸ் (Rutgers) பல்கலை கழகத்து மாணவன் தற்கொலை செய்துகொன்ட வழக்கும் இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இதில் குற்றம் சாற்றப்பட்ட தருண் ரவிக்கு அரசு சார்பாக பேரம் பேசும் வாய்ப்பு தரப்பட்டது. 600 மணி நேர சமுதாயப்பணி, கொஞ்சம் கூட சிறைத்தன்டனை இல்லை ஆனால் எல்லா குற்றங்களுக்கும் தவறு தன்மீது என ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால் ரவி இதை நிராகரித்துவிட்டார். இப்போது விசாரணைக்கு வரும் வழக்கில், நீதிபதி சாட்சிகளை கலைத்தது உண்மையில் சட்டப்படி இரண்டாம் வகை குற்றம் என கூறி இருக்கிறார். இந்த வழக்கு ஒரு மாதிரி வழக்காக மாறக்கூடும்.
ooOoo
வால்மார்ட்டும் வால்க்ரீனும் புதிதாக வீட்டிலேயே விந்தணுக்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ளூம் கிட் (kit) ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு கிட் $50.வரை விலையாகிறது. ஒரு மில்லிலிட்டரில் (Semen) கிட்டதட்ட ஒரு இலட்சம் விந்தணு இருப்பது கருவுறச் செய்ய அவசியம். இது வரை பெண்களுக்கு வீட்டிலேயே முட்டை தயாராகும் கால நிலை, மாதத்தில் எப்போது உறவு வைத்துக்கொள்ள ஏதுவானது (பாதுகாப்பான காலம்), கருத்தரிக்க எப்போது உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கண்டறிய பல பரிசோதனைகள் இருந்தன. இது முதல்முறை ஆண்களின் மீதும் குறை இருக்கலாம் என்பதை அடிப்படையாக்கி வரும் சாதனம். இனி குழந்தை இல்லாததற்கு பெண்களை எளிதாக குற்றம் சொல்ல முடியாது.
ooOoo
அமெரிக்காவில் மொத்தம் 32 மில்லியன் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். இதில் கிட்டதட்ட 20 மில்லியன் பேர் பள்ளி உணவுச்சாலையில் மதிய உ ணவு உண்கிறார்கள். தற்போது மதிய உணவில் Pizza, Fries, போன்ற அதிக கலோரி சக்தி உள்ள உணவு தரப்படுகிறது. சென்ற வாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் உடல்நலத் துறை இதை மாற்றி அமைத்திருக்கிறார்கள். புதிய சத்துணவு மெனு அனுப்பப்பட்டிருக்கிறது. இதை செயல்படுத்தும் பல்ளிகளுக்கு அரசு வழங்கும் நிதியை அதிகரிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த மெனுவில் ஃப்ரெஷ் காய்கறிகளும் கனிகளும் உள்ளூரில் இருக்கும் விவசாயிகள் தோட்டத்தில் இருந்தும் பெற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்
ooOoo
ஆலன் டவுன் (Allen Town) நகர பொதுநலத்துறை, தங்களது ஜீப் ஒன்றில் பலவிதமான காய்கறிகள், கனிகள் படம் வரைந்து பூங்காக்களில் விளையாடும் குழந்தைகளுக்கு இலவசமாகக் காய்கறிகள் பழங்கள் தருகிறார்கள். இந்த காய்கறிகள் அந்த ஊரிலேயே விவசாயிகள் சந்தையில் பெறபட்டு இருப்பதால், எந்த வித வேதிப்பொருளும் உபயோகித்து பத(த்திர)ப்படுத்தாதது. இந்த காய்கறி வண்டி, கிட்டதட்ட ஐஸ்க்ரீம் வண்டி போல அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நியுஜெர்ஸியிலும் நிறைய ஊர்களில் வாரம் தோறும் விவசாயிகள் சந்தை உண்டு. அதைத் தெரிந்துகொண்டு அங்கேயே காய்கறிகள் வாங்கி உபயோகிப்பது நல்லது.
ooOoo

பெண்கள் முன்பெல்லாம் 18 வயதுக்கும் பின் HPV தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். இது கர்ப்பவாய் புற்றுநோய் வருவதை தடுக்க வல்லது. சில வருடமாக 11 வயதுக்கு பின் சிறுமிகள் கூட இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது என்று சிபாரி செய்து வருகிறார்கள். இப்போது ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கூட இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது வாயருகே Cold sore வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும், இது வாய்வழி கலவியில் ஈடுபடுவார்களேயானால், Syphillus வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.
ooOoo
நியுவர்க்கில் பிறந்து சிறந்த பாடகியாகி உலகளவு ரசிகர்களை பெற்ற பாடகி விட்னி ஹுஸ்டன் மறைவு இந்த வாரத்தை வருத்தத்தில் மூழ்கடித்தது. நேற்றைய கிராமி நிகழ்ச்சியில் கூட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மது போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையான அவரை அதில் இருந்து மீட்க பலரும் முயற்சித்தார்கள். அதில் அவர் தேறியும் வந்துகொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு மரணத்தை தழுவியது வருந்தத்தக்கது.
தொடர்புடைய படைப்புகள் :