சேனல் – 4 வீடியோ #Killingfields
இங்கிலாந்தில் சேனல்-4 ஒளிபரப்பிய இலங்கை படுகொலை வீடியோ காட்சிகள் வழக்கம் போல உலக அளவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன.
நம் தாய்த் தமிழகத்தில் மட்டும் பெரிய அளவில் பரபரப்பு இல்லை.

ஆனால் ட்வீட்டர், ஃபேஸ்புக் என்ற இடங்களில் மட்டும் ‘குபீர்’ தமிழர்கள் பொங்கி எழுந்து அழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
வேலை நாளாக இருப்பதால் வசதியாக இருக்கிறது. வார இறுதி விடுமுறை நாளாக இருந்திருந்தால் அதுவும் முடிந்திருக்காது. வீட்டில் சாப்பிட்டு, படுத்து தூங்கி அதற்கே சரியாக இருந்திருக்கும்.
இதில் #killingfields என்பது உலக அளவில் ட்வீட்டர் ட்ரெண்டில் வரவில்லை என்று பலருக்கு அதிக கவலை. ”இந்திய அரசாங்கம் செய்த சதி” இது என்று சிலர் புலனாய்வு செய்து செய்தி ட்வீட்டினார்கள். “இலங்கை அரசு ட்வீட்டர் ஓனருக்கு லேப்டாப் லஞ்சம் கொடுத்திருக்கும்” என்றும் சிலர் ஆராய்ந்து சொன்னார்கள். இருந்திருக்கலாம் போல. அதனால் தான் எவ்வளவு போராடினாலும் ட்ரெண்டில் வருவேனா என்று இந்தக் கட்டுரையை டைப்பும் வரை அடம் பிடித்துக் கொண்டிருந்தது #killingfields.
“ட்வீட்டர் நண்பர்களே.. நாம் ஒன்றிணைந்தால் தமிழகத்தை இந்தியாவிலிருந்தே பிரித்து விட முடியும்” என்று வீரவசனம் எழும்பிய காமெடி ட்வீட்டுகளும் உண்டு.
அண்ணாதுரை, ஆரம்பகால கருணாநிதி ஆகியோரெல்லாம் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தே முடியாத பிரிவினை கோஷத்தை ஒரு கணினியும், ஓசி இணையமும் கிடைத்து விட்டால் அலுவலகத்திலிருந்து என்ன வேண்டுமானாலும் கோஷம் எழுப்பி விடலாம் என்பதற்கு இது சிறு உதாரணம் தான்!
இந்நேரம் பார்த்து தினமலர் நாளிதழ் தனது இணைய தளத்தில், “சேனல் 4 – ரொம்ப போர்.’எதிர்பார்த்த’ காட்சிகள் எதுவுமில்லை” என்று கேவலத்தின் படு உச்சமாக ஒரு தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டு தனது ஹிட் ரேட்டை எகிற வைத்துக் கொண்டது.
எப்போதுமே தினமலரை திட்டித் தீர்க்கும் ‘குபீர்’களுக்கு சொல்லவா வேண்டும். “பார்ப்பன” பத்திரிகை என்று பட்டம் சூட்டி கடும் சொற்களால் அர்ச்சித்து தீர்த்து விட்டனர்.
அது என்னவோ, கருணாநிதி, சோனியா போன்றோரை எல்லாம் இந்த விஷயத்தில் திட்டினாலும் ஜாதியைச் சொல்லி திட்டாத இந்த ஜென்மங்கள் ஒரு குறிப்பிட்ட பேர்களைத் திட்டும் போது மட்டும் ஜாதியை இழுத்து தனது இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸை பட்டவர்த்தனமாக காட்டிக்கொள்கிறார்கள்.
இலங்கையிலிருந்து நம் நாட்டிற்கு வந்திருப்பவர்களை அகதிகள் என்று அழைக்க வேண்டாம். ஏதிலியர்கள் என்று அழைக்கலாம். அவர்களுக்கு அரசாங்கம் சார்பில் முகாம்கள் உள்ளன. ஆனாலும் பல விதங்களில் பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இருக்கின்றன. என்ன தான் பட்டப் படிப்பெல்லாம் படித்திருந்தாலும் ஏதிலியர்கள் என்பதினால் நிரந்தர வேலை வாய்ப்பு எல்லாம் அவர்களுக்குக் கிடைப்பது சிரமம். அதனால் பெயிண்டிங், தச்சு வேலை என்று கிடைத்த வேலையில் நாள் கூலியில் மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், ஐ.ஏ.எஸ். முழு முயற்சி எடுத்து தமிழீழ ஏதிலியர்களுக்காக தனியே ஒரு தையல் இயந்திர நிலையமும், BPO-வும் துவங்கியுள்ளார். இன்னமும் பல நலத் திட்டங்களை செயல்படுத்த உள்ளார். இதே போன்ற நல்ல விஷயங்கள் நாடு முழுதும் நடைபெற வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நம்பியிராமல் அவர்களைத் தங்கள் காலிலேயே நின்று வெற்றி பெற பழகித் தர வேண்டும்.
இதையெல்லாம் முன்னெடுத்துச் செய்யாமல், வெறும் காழ்ப்புணர்சி ஒன்றின் மூலம் மட்டுமே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுத்தவரை திட்டும் கும்பலால் பாதிக்கப்படப்போவது என்னவோ தமிழீழத்தினர் தான்.
தமிழன் சார், ஐயோ கொல்றாங்களேன்னு சத்தம் போட்டு ஒரு காணொளி வந்துச்சே அதுக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாத பேச்சு இது.
ungal paruppu indha samayam vegavillai. parpanargal seyyum nalla vishayathil oru sadhamavadhu aduthavargal seyyattum. appuram kuttram sollattum.
Kandippaga oru jathiyai thittuvadhu kaalpunarchidhan. Adhai suttik kaatuvadhu sari dhan. adhi ilavukku enna prachnai?
அடுத்தவரை திட்டும் கும்பலால் .//
இப்போ ஒரு ஜாதியினைரை திட்டியதுதான் குத்தம்னு முடிச்சிருக்காரே, அதுக்குப் பேரு முற்போக்கா? இல்லே காழ்ப்புணர்ச்சியா?